ஆஹா டிப்ஸ்

Tulsi-plant

துளசிச்செடி நன்றாக அடர்ந்து வளர பூக்க ஆரம்பித்ததும் மேல்பகுதியைக் கிள்ளிவிட வேண்டும். கிள்ளிய இடத்திலிருந்து கிளைகள் பிரிந்து செடி நன்றாக அடர்ந்து வளரும். துளசிச் செடியுடன் பசும் மஞ்சளை நட்டி வைத்தால் அழகான மஞ்சள் செடி பொங்கலுக்கு நம் வீட்டிலேயே எடுத்துக்கொள்ளலாம். துளசியுடன் மஞ்சளையும் வழிபடுவது மங்கலத்தின் அறிகுறியாகும்.mung-moong-bean-sprouts

நாம் தானியங்களை முளைகட்டி பயன்படுத்தும்போது அதனுடைய சுவையும் சத்தும் இரண்டு மடங்காகி விடுகிறது. முளைகட்டுவதற்குச் சுலபமான வழி உள்ளது. தானியங்களை பகலில் 8 மணி நேரம் ஊறவைத்து பின்னர். நீரை வடிகட்டி ஹாட்பேக்கில் போட்டு மூடி இரவு முழுவதும் வைத்தால் மறு நாள் அழகாக முளை வந்து விடும். பிறகு நமது விருப்பம்போல் சமைத்தோ பச்சையாகவோ சாப்பிடக்கொடுக்கலாம்04-elephant-yam-stir-fry

சேனைக்கிழங்கு பொரியல் மீதமானால் அதை மிக்ஸ்யில் போட்டு அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும். அரைத்த சேனைக்கிழங்கு விழுதையும் சேர்த்து வதக்கி துவையலாக வைத்துக்கொண்டால் சாதம் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளலாம்.sl772

அதிரசத்திற்கு பாகு தயாரித்தபின் பாகில் மாவை சேர்க்காமல் அரிசி மாவை ஒரு தாம்பாளத்திலோ அல்லது பசினிலோ வைத்து கொஞ்சம் கொஞ்சமாகப் பாகை சேர்த்தால் வெல்லம் அதிகமாகி அதிரசம் பிரிந்து போவதைத் தடுக்கலாம். பாகைப் பதம் பார்க்க ஒரு துளி பாகைத் தண்ணீரில் போட கரையாமல் பந்து போல் உருண்டு இருந்தால் சரியான பதம்.download (1)

கடுக்காய் பொடி சுக்குத்தூள் திப்பிலித்தூள் இவற்றைச் சம அளவு எடுத்து வென்னீரில் கலந்து காலை மாலை இரண்டு வேளையும் அரை டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு வந்தால் 21 நாட்களில் வாத பித்த நோய்கள் தீரும்.Untitled-15

சைனஸ் பிரச்னைக்கு ஓர் எளிய வைத்தியம் உள்ளது. தைவாளைச் செடியின் வேர் 10 கிராம் அனைத்தையும் இடித்து 250 மில்லி தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சித் தலைக்கு தேய்த்து வந்தால் சைனஸ் போயே போச்சு.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s