மூன்று வகையான மனிதர்கள்’

1

ஒரு முறை மஹாவிஷ்ணு அவருடைய பிரியமான கருடனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திருமால் கருடனை பார்த்து “ இந்த உலகில் எத்தனை வகையான  மனிதர்கள் உள்ளனர் கருடா?” என்று   அதற்கு சற்றும் யோசிக்காமல் கருடன் சொன்னார் ‘ மூன்று வகையான மனிதர்கள் உள்ளனர் மஹாபிரபு “ என்றார் கருடன்.

“ மூன்று விதமான மனிதர்களா?  இத்தனை கோடி மனிதர்களில் மூன்று விதமான மக்கள் தானா உள்ளார்கள் ‘ என்று கேட்டார்.  “ மஹாபிரபு ஒன்றும் அறியாதவர்போல் நீங்கள் கேட்பது ஏன்?  என்னை வைத்து என்ன நாடகம் நடத்தப்போகிறீர்களோ  தெரியவில்லை.  ஆனால் தங்கள் அருளால் நான் அறிந்தவரை மூன்று விதமான மக்கள் தான் உள்ளனர். ‘ என்று கூறினார் கருடன். அப்படியானால் அவர்களைக் கூறு பார்க்கலாம் என்றார் மஹாவிஷ்ணு.  கருடன் சொன்னார்.  ‘ பிரபு  முதல் வகையினர் பறவையும் அதன் குஞ்சுகளும் போல் உள்ளனர். இரண்டாம் வகையினர் பசுவும் அதன் கன்றையும் போல் உள்ளனர். மூன்றாம் வகையினர் கணவனும் மனைவியும் போல் உள்ளனர்.  அவ்வளவுதான் மஹாபிரபு” என்றார்.

மஹாவிஷ்ணு சும்மா விடுவாரா? சற்று விளக்கமாகத்தான் சொல்லேன் என்றார்.2

சொல்லத்தொடங்கினார் கருடன்.  முதலில் பறவையும் அதன் குஞ்சுகளும் எப்படி என்றால் பறவை முட்டையிட்டு குஞ்சு பொரித்துவிட்டு அதன் குஞ்சுகளுக்காக உணவு தேடிப் போகிறது அது சென்று வருவதற்குள் பாம்புகளும் மற்ற பறவைகளும்  தனது உணவாக அந்த குஞ்சுகளையே உண்டு விடுகிறது.  காணாமல் போன குஞ்சுகளுக்காக பறவை பெரிதாக கவலையெல்லாம் படுவதில்லை. இருப்பதற்கு உணவு ஊட்டும். அதுபோல் குஞ்சுகளுக்கும் தன் வாயில் ஊட்டப்படும் உணவுதான்  தெரியும்   தன் தாய் யார்?   தந்தை யார் ?   போனது வருமா வராதா?  எதுவும் தெரியாது.  நாளானவுடன் பறக்க முயற்சி செய்து கீழே விழுந்து மடியும்.       மீந்து போன பறவை  வாழும் வரை வாழும் அவ்வளவுதான்.

இந்த வகை மனிதர்கள் இது போலத்தான்  ஏழ்மையுடன் போராட்டம்    கூலி வேலை செய்வார்கள். கிடைத்ததை உண்பார்கள்.     இல்லையா பட்டினி கிடப்பார்கள். அவர்களுக்கு உன்னைப்பற்றியே கூட தெரியாது.      வாழ்வார்கள் வாழும்வரை            அவ்வளவுதான்.K75 Cow and Calf-01

இரண்டாவது பசுவும் கன்றும்   எப்படியென்றால் பசு ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும். அதன் கன்று ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும்  கன்று  பசுவைப் பார்த்து சப்தமிடும். பசு கன்றினைப் பார்த்து சப்தமிடும். கன்றுக்கு தெரியும் தாயின் மடியிலிருக்கும் பால் அருந்தினால் தான் பசி அடங்கும் என்று ஆனாலும் அதன் கழுத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு முழம் கயிறு அதனை அதன் தாயிடம் செல்லவிடாமல் தடுக்கிறது.  கன்று  இழுத்து இழுத்து பார்த்து ஏங்கித் தவிக்கும்.      அதுபோல ஒரு சாராருக்கு உன்னைத் தெரியும்.     உன் வழி தெரியும். உன்னால்தான் மனித வாழ்வே நிரந்திர சுகம் பெறும் என்பதும் தெரியும்.    ஆனாலும் உன்னிடம் வர முடியாமல் பாசம் என்ற ஒரு முழ கயிற்றில் மாட்டிக்கொண்டு உன்னை பார்த்து பார்த்து ஏங்கி தவிக்கும்3

மூன்றாவது கணவனும் மனைவியும் எப்படியென்றால் முன் பின் அறியாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவன் அவளிடம் முகம் கொடுத்து கூட பேசமாட்டான். அவளைப் பார்த்த நாளிலிருந்து அவன் நினைவால் இருந்து அவனுக்கு பிடித்தவகையில் உடையுடுத்தி அவனுக்கு பிடித்த  வகையில் தன்னை அலங்கரித்து கொண்டு அவனைக் கவர்ந்து தான் அவனுக்காகவே பிறந்தவள் என்பதை அவனுக்கு உணர்த்தி அவனை தன் பக்கம் ஈர்ப்பாள். முதலில் வெறுத்த அவன் ஓராண்டுக்குள் அவள் அன்பில் கரைந்து அவள் செல்லும் இடமெல்லாம் செல்கிறான். அவளைப் பிரிய மறுக்கிறான்.  பிரசவத்திற்கு அனுப்பிவிட்டு அவனும் பின்னாலேயே செல்கிறான். அது போல ஒரு சாரார் உன்னை கண்டதில்லை. ஒரு நாள் யாராவது ஒருவர் மூலமாக உணர்த்தப்பட்டு உன்னை காண முற்படும் வேளையில் உனக்கு பிடித்த உடை உணவு அலங்காரம் என்று  தங்களை  மாற்றிக்கொள்கிறார்கள்.  முதலில் சோதிக்கும் நீ எங்களின் தூய்மையான அன்பில் கரைந்து எங்களோடு வருகிறாய். எங்களோடு உறவாடுகிறாய்.  முடிவில் உன்னோடு எங்களை ஐக்கியப்பட அனுமதிக்கிறாய். நாங்களும் ஆனந்தமாக உன்னோடு கலந்து விடுகிறோம்.   ஆக மூன்று விதமான மனிதர்கள் தான் உலகில் உள்ளனர் என்றார் கருடன். மனம் மகிழ்ந்த மஹாவிஷ்ணு கருடனை வாழ்த்தி தன்னுள் ஏற்றுக்கொண்டார்.

 

 

படித்ததில் பிடித்தது.  உங்களுடன் பகிர்வதில் மிகவும் ஆனந்தம்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s