பளீர் டிப்ஸ்

large_1410288505

குறுமிளகு நமது உடலில் நோய்களை எதிர்த்துப்போராடும்.  எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது. குறுமிளகையும் உப்பையும் பொரித்து சாதத்தோடு சேர்த்து சாப்பிட்டால் ஜலதோஷம் குணமாகி விடும்.download (2)

பசும்பாலுடன் பப்பாளிச் சாறு கலந்து உடம்பில் தேய்த்து 15  நிமிடங்கள் கழித்து கடலை மாவால் தேய்த்துக் குளித்து வந்தால் உடலில் தேமல் போன்ற சரும வியாதிகள் வராது.po

பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவரம் பருப்புடன் கடைந்து சிறிது  நெய் விட்டு சாப்பிட்டு வந்தால் நன்றாக சதை பிடிக்கும்43369

தர்பூசணியின் தோலை வீணாக்காமல் எண்ணெயில் வதக்கு உப்பு மிளகாய் புளி உளுத்தம்பருப்பு சேர்த்து அரைத்தால் அருமையான சைட் டிஷ் ரெடி.sl377

நீர் மோர் கரைக்கும்போது அதனுடன் சிறிது புளிக்காய்ச்சலையும் சேர்த்துக் கரைத்தால் சூப்பராக இருக்கும்.02-brinjal-300

கத்தரிக்காயை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி எண்ணெயில் பொரித்து கெட்டித் தயிரில் போடவும். அத்துடன் உப்பு  நறுக்கிய பச்சை மிளகாய் போடவும். கத்தரிக்காய் தயிர்பச்சடி ரெடி.  கத்தரிக்காயை நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்து பின் எடுக்கலாம்.  இல்லையெனில் கறுத்து விடும்.download

தேங்காய்த் துருவல் சேர்த்து சாப்பிட முடியாதவர்கள் கேரட் துருவல் பீட்ரூட்  வெள்ளரி முட்டைக்கோஸ் போன்ற காய்கறித் துருவல்களில் ஏதேனும் ஒரு காய்கறித் துருவலையோ அல்லது பல துருவல்களின் கலவையையோ உணவுடன் கலந்து சாப்பிட இயற்கை சத்து கிடைப்பதுடன் உடலுக்கும் நல்லது.mushrooms

சமைக்க வாங்கி வைத்துள்ள காளான்களை பிளாஸ்டிக் கவரினுள் போட்டு வைப்பதற்குப் பதிலாக சாதாரண பேப்பரில் சுற்றி வைத்தால் நீண்ட நாட்களுக்கு பிரஷ்ஷாக இருக்கும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s