ஆஹா ஆலயம்

sri

நாமக்கல்லிலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது மோகனூர். இங்குள்ள பெருமாள் கோவிலில் சம்மோஹன கிருஷ்ணன் அருள்பாலிக்கிறார். அதாவது கிருஷ்ணன் பாதியும் ருக்மணி தேவி பாதியுமாக பஞ்சலோகத்தினால் ஆன அழகிய திருவடிவம் குறிப்பாக சம்மோஹன கிருஷ்ணனை வணங்கினால் குழந்தையில்லா தம்பதியருக்குக் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.sri-chamundi-temple_1410237589

கேரள மானிலம் திருவனந்தபுரத்திலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது கரிக்ககம். இங்கு ஸ்ரீதேவி சாமுண்டி கோயில் உள்ளது. இந்த தேவி மகாசாமுண்டி  சக்த சாமுண்டி  பாலா சாமுண்டி என மூன்று வடிவில் அருள்பாலிக்கிறார். தேவியை மூன்று வாசல்கள் வழியாக வணங்க ஒவ்வொரு வாசலிலிலும் ஒவ்வொரு வடிவில் காட்சி தருவாள். இவள் முன் பல வழக்குகள் சத்தியம் செய்து தீர்க்கப்படுகிறது.  பொய் சத்தியம் செய்பவரை அன்னை கடுமையாக தண்டிப்பார் என்பது நம்பிக்கை.maxresdefault

சேலம் மாவட்டத்தின் கிழக்கு எல்லையில் ஆத்தூர் தாலுகாவில் அமைந்துள்ளது அஷ்ட பைரவர்கள் கொலுவிருக்கும் சிவன் கோவில். காம நாதீஸ்வரர் ஆலயம் என்ற இடத்தில் உள்ளது. இங்கு அஜிதாங்க பைரவர் உன்மத்த பைரவர் குரு பைரவர் சண்ட பைரவர் குரோதன பைரவர் கபால பைரவர் பீஷ்ண பைரவர்  கால சம்ஹார பைரவர் என எட்டு பைரவர்கள் காட்சி தருகிறார்கள். இந்தக் கோவிலில் அமைந்துள்ள லிங்கம் வசிஷ்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.temp31jan09

கேரள மானிலம் கொல்லம் மாவட்டத்திலுள்ள பவித்ரேஸ்வரம் என்னுமிடத்தில் மகாபாரத வில்லன் சகுனிக்கென்று ஒரு கோவில் உள்ளது. குறவர் இன மக்கள் சகுனியை கடவுளாக வழிபடுகின்றனர். அந்தக் கோவிலில் எந்தவித பூஜை புனஸ்காரங்கள் கிடையாது. ஆனால் சகுனியால் பயன்படுத்தப்பட்ட ஒரு சிம்மாசனம் இங்கு உள்ளது.  தேங்காய் கள் ஆகிவற்றை வைத்து வழிபடுகிறார்கள். மலையாள ஆண்டு மகர மாதத்தில் மலக்குட மஹோத்ஸவம் என்ற பெயரில் சகுனி கடவுளுக்கு விழா எடுக்கிறார்கள்.tnhead_32419985533

ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் ஆலயத்தில் சங்கமேஸ்வரர் சுப்ரமணியர் வேத நாயகி அம்மன் சன்னதிகள் உள்ளன. மாசி மகம் ரதசப்தமிக்கு மூன்றாவது நாள் காலை நேரத்தில் இந்த மூன்று தெய்வங்களின் மீதும் சூரிய ஒளி பட்டு அபிஷேகம் செய்வது போல் தோன்றி  சிறிது நேரத்தில் மறைந்துவிடுகிறது.download (2)

கனகதாசர் என்ற பக்தர் உடுப்பிக் கோவிலுக்கு வந்து கிருஷ்ணரை தரிசிக்கக் காத்துக் கிடந்தார். ஆனால் தாழ்த்தப்பட்ட சாதி என்று சொல்லி அவரை உள்ளே விடவில்லை. சிறு கதவின் இடுக்கு வழியே கனகதாசர் கிருஷ்ணனைப் பார்க்க முயன்றார். கிருஷ்ணனின் முதுகுதான் தெரிந்தது. கிருஷ்ணன் தன் பக்தனைக் கண்டு மெச்சி தன்னையே திருப்பிக் காட்சியளித்தானாம்.  அந்தச் சிறு கதவின் இடுக்கு வழியேதான் இன்றும் பக்தர்கள் கிருஷ்ணனை தரிசிக்கிறார்கள்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s