தொண்டைக்கு இதம் தரும் ஏலம்

cardamon_big

மருந்தாகப் பயன்படும் நறுமணப்பொருள் ஏலக்காய். புரதம் நார்ச்சத்து மற்றும் கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் ஈரப்பதமும் கலந்த ஏலக்காய் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டதாகும்.

ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும். கண்பார்வை அதிகரிக்கும் ஏலப்பொடி சீரகப்பொடி சோம்புப் பொடி ஆகிய மூன்றையும் ஐந்து கிராம் வீதம் எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் பசி கூடும். மேலும் ஜீரணம் அதிகரிக்கும். ஏலக்காயைப் பொடியாக்கி துளசி சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும்.

ஏலக்காய் 4 ஒரு துண்டு சுக்கு சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்கவைத்துப் பருகினால் வறட்டு இருமல் தொண்டை வலி தீரும்.

ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளை அடித்தொண்டை தொண்டைக்கட்டு உள் நாக்கில் வலி குளிர்க்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம். எலக்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்துக்கொதிக்கவைத்த தண்ணீரால் வாய் கொப்பளித்தால் தொண்டைக்கட்டுக்கு இதமாக இருக்கும்.download

 

நெஞ்சில் சளி உள்ளவர்கள் அடிக்கடி இருமி அவதிப்படாமல் இருக்க ஏலக்காய் உதவும் ஜீரணமாகாத போது வரும் தலைவலியை ஏலக்காய் சேர்த்த ஒரு கப் தேனீர் போக்கும். ஏலக்காய் 4 கிராம்பு 4 வெற்றிலைக்காம்பு 5 ஆகியவற்றை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலி சளி விலகும்.

ஒரு கப் தண்ணீரில் இரண்டு மூன்று ஏலக்காயை தட்டிப்போடவும்  புதினா கீரையில் ஐந்தாறு இலைகள் மட்டும் இதில் போட்டு கொதிக்கவிட்டு பிறகு வடிகட்டி அருந்தினால் விக்கல் நிற்கும். அசிடிட்டியைக் கட்டுப்படுத்தும்  ஏலக்காய் வாய் துர் நாற்றத்தையும் போக்கும். ஏலக்காயில் இருக்கும் எண்ணெய் தான் வாசனையைத் தருகிறது.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s