ஆஹா தகவல்

thoppukkaranam

தோப்புக்கரணம் போடுவதால் மூளையில் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன. தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்கள் கூட தோப்புக்கரணம் போட ஆரம்பித்த பிறகு அதிக மதிப்பெண்கள் வாங்கினார்களாம்.  இதை லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் கண்டுபிடித்திருக்கிறார்.  காதுகளைப் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடுவதால் முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி நரம்புகளை புத்துணர்ச்சி பெற வைக்கிறதாம்.US-former-presdients

அமெரிக்க அதிபர்களாக இஉந்த லிங்கனுக்கும் கென்னடிக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. லிங்கன் 1860ம் ஆண்டிலும் கென்னடி 1960 ம் ஆண்டிலும் அதிபரானார்கள். லிங்கனின் உதவியாளர் பெயர் கென்னடி.  கென்னடியின் உதவியாளர் பெயர் லிங்கன்.  இருவருமே வெள்ளிக்கிழமையன்று அவரவர் மனைவியின் கண் எதிரிலேயே சுடப்பட்டு கழுத்தின் பின் பகுதியில் குண்டு பாய்ந்து இறந்தனர்.  இருவருக்குப் பிறகு அதிபரானவர் பெயர் ஜான்சன். லிங்கனைச் சுட்ட பூத் என்பவர் பிறந்தது 1839ல்  கென்னடியை சுட்ட ஆஸ்வெல்ட் பிறந்தது 1939ல் இரண்டு கொலையாளிகளுமே கோர்ட்டுக்கு கொண்டுசெல்லும்போது இறந்தனர்.63B62204-

லண்டனில் உள்ள ஃபாயில் என்பவரது பழைய புத்தகக்கடை உலகப்பிரசித்து பெற்றது. இவருடைய கடையில் புத்தக அலமாரிகள் மட்டுமே 40 மைல் நீளத்துக்கு இருக்கின்றன.  600 பேர் பணிபுரிகின்றனர். உலகின் பல மூலைகளிலிருந்து வரும் ஆர்டர்களுக்கு உடனடியாக புத்தகங்களை அனுப்பி வைக்கிறார் ஃபாயில். இந்தக் கடையின் முக்கிய வாடிக்கையாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் வால்ட் டிஸ்னி என்பது குறிப்பிடத்தக்கது.7a6152bc1809a0db2a38ef4b7c51ff19

இந்து மஹா சமுத்திரத்தின் சில பகுதிகளில்  நியூஸ் பேப்பர் படிக்கும் அளவுக்கு வெளிச்சம் இருக்குமாம். சமுத்திரத்தில் உள்ள டினோ ப்ளாகிலாட்டா  எனப்படும் கடற்பாசி வெளிச்சத்தை உமிழ்வதுதான் இதற்குக் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

OLYMPUS DIGITAL CAMERA

விமான நிலையங்கள் வணிக வளாகங்கள் இவற்றில் இருக்கும் கதவுகள் தானவே திறந்து மூடுவதை பார்த்திருப்பீர்கள். இதற்கு உதவியாக இருப்பது ஸெலினியம் என்ற தனிமம். இது எளிதில் மின்சாரத்தைக் கடத்தும் என்றாலும் வெளிச்சத்தில் மட்டுமே மின்சாரத்தைக் கடத்தும் தன்மை கொண்டது. தானியங்கிக் கதவுகளில் ஸெலினியம் தகடும் அதில் ஒளிபடும் அமைப்பும் இருக்கும். நாம் கதவின் அருகில் சென்றதும் ஒளி தடைபடுவதால் கதவு தானாகவே திறக்கிறது.img3

இரவில் ரயிலில் பயணிக்கும்போது இறங்க வேண்டிய இடத்தைத் தவறவிட்டு விடுவோமா என்ற கவலையும் பயமும் இனி வேண்டாம். உங்கள் மொபைலில் இருந்து 139 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். அதில் கூறும் வழிமுறைகளின்படி பயண டிக்கெட்டில் இருக்கும் உங்கள் பி என் ஆர் எண்ணைப் பதிவுசெய்யுங்கள். நீங்கள் இறங்கவேண்டிய இடம் நெருங்கியதும் உங்களுக்கு எச்சரிக்கை அழைப்பு வரும். இதனால் நீங்கள் இறங்க வேண்டிய இடம் குறித்து கவலையில்லாமல் நிம்மதியாக பயணம் செய்யலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s