நியூ[ஸ்]மார்ட்

howan

வியட்நாமை சேர்ந்த ஹோவான் லாங் என்பவரும் அவரது தந்தையும் 41 ஆண்டுகளாக நாடுகளில் வசித்து வருகிறார்கள். வியட்நாம் போர் நடந்துகொண்டிருந்தபோது தனது மனைவியும் இரண்டு குழந்தைகளும் சுரங்கவெடிப்பில் உயிர் இழந்து போக மனம் உடைந்த ஹோவான் லாங்கின் தந்தை அவரைத் தூக்கிக்கொண்டு காட்டுக்குள் நுழைந்துவிட்டார். அன்று முதல் வெளியுலகத் தொடர்பே அவர் வைத்துக்கொள்ளவில்லை. உயரமான இடத்தில் பாதுகாப்பான குடிசை ஒன்றைக் கட்டிக்கொண்டு பழங்களை உண்டும் சோளங்கலை விளைவித்தும் வாழ்ந்து வந்தனர். ஒன்றும் கிடைக்காத காலங்களில் எலிகளை வேட்டையாடி உண்டனர். கோரைப் புற்களையும் மரப்பட்டைகளையும் ஆடையாக அணிந்து கொண்டனர். 41 ஆண்டுகளுக்குப் பிறகு 2013ம் ஆண்டு காட்டுக்குள் வந்த சிலர் இருவரையும் கண்டனர்.  இவர்கள் வினோதமாக நடந்துகொண்டதைப் பார்த்து காவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். காவலர்கள் இருவரையும் மீட்டு காட்டுக்கு அருகில் சிறு வீட்டைக் கொடுத்து தங்க வைத்திருக்கிறார்கள். நிஜமான டார்சான்கள்octopus tree

அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்ட் ரிசார்ட்டில் பசுமைக் குடில் சுற்றுலா சென்றால் அசாதாரணமான செடிகள் காய்கள் பழங்கள் போன்றவற்றைப் பார்க்கலாம். ஒவ்வொரு செடியும் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு விளைகிறது எப்படிப் பராமரிக்கிறார்கள் போன்ற தகவல்களைச் சுவாரசியமாகத் தருகிறார்கள். இங்கே தான் ஆக்டோபஸ் தக்காளி மரங்கள் வளர்க்கப்பட்டிருக்கின்றன. சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட கலப்பின் விதைகளில் இருந்து உருவானது இந்த மரம். இதன் தண்டில் இருந்து பல கிளைகள் ஆக்டோபஸ் கைகள் போல படர்ந்திருப்பதால் இந்தப் பெயர். 40 முதல் 50 சதுர மீட்டர்கள் அளவுக்குப் பரந்து விரிந்திருக்கும் இந்த மரத்தில் ஒவ்வொரு சீஸனிலும் பல்லாயிரக்கணக்கான கிலோ தக்காளிகள் விளைகின்றனவாம். ஒரு மரம் பூத்து காய்க்க ஆரம்பித்தால் 14 ஆயிரம் தக்காளிகள் வரை அறுவடை செய்யலாம். மரத்தில் தக்காளியா அதுவும் பல்லாயிரக்கணக்கில் என்று இதைப் பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

This April 9, 2016 photo provided by Bertrand Piccard via Global Newsroom shows Piccard taking a selfie on board Solar Impulse 2 during a test flight over the Pacific Ocean.  The solar-powered airplane on an around-the-world journey had traveled 80 percent of the way from Hawaii to California by Saturday, April 23.  The aircraft's destination on this leg of the journey is Mountain View, Calif., at the southern end of San Francisco Bay.  (Bertrand Piccard/Global Newsroom via AP)

உலகில் சூரியஒளி மின்சாரத்தால் இயங்கக் கூடிய முதல் சோலார் இம்பல்ஸ் 2 என்ற விமானம் அபுதாபியில் இருந்து முதல்முதலாகப் புறப்பட்டு உலக நாடுகளில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் அபுதாபிக்கு வர இருக்கிறது. சாதாரண போயிங் விமானத்தை விட இதன் இறக்கைகள் 3 மீட்டர்  அதிக நீளம்  இதன் எடை வெறும் 2.3 டன் மட்டுமே. இந்த விமானத்தை அதிகபட்சமாக மணிக்கு சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்தலாம். தொடர்ந்து 8 ஆயிரம் கிலோ மீட்டர்கள் நிற்காமல் பயணம் செய்ய முடியும். இதன் இறக்கைகளில் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் 17 ஆயிரம் சோலார் செல்கள் பொருத்தப்பட்டுள்ளன.download

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் வரும் 5 ம் தேதி துவங்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பாக பல்வேறு விளையாட்டுகளில் சுமார் 121 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் தில்லியில் வழியனுப்பும் விழா நடைபெற்றது. இந்திய ஒலிம்பிக் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவில் ஒலிம்பிக் தூதர்களான நடிகர் சல்மான் கானும் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானும் இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய்கோயல் இந்தியாவின் ஒலிம்பிக் போட்டியாளர்கள் சானியா மிர்சா விக்னேஷ் போகத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.talco

மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும் டால்கோ ரயில்கள் இந்தியாவில் முதல் முறையாக ஓட இருக்கின்றன. இதற்கான ரயில் பெட்டிகளை ஸ்பெயினிலிருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டீசல் எஞ்சின்களை டால்கோ ரயிலில் இணைந்து ஏற்கனவே இருக்கும் தண்டவாளத்தில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.   தண்டவாளங்களில் ஏற்படும் அதிர்வுகள் எடை தாங்கும் திறன் மற்றும் ரயிலின் வேகம் இவை முதல் கட்டமாக சோதனை செய்யப்பட்டுள்ளன. தில்லி மும்பை இடையிலான 1400 கிமீ தூரத்துக்கு சோதனை ஓட்டம் முடிந்த பின் அதிக டால்கோ ரயில் பெட்டிகளை இறக்குமதி செய்யவும் மத்திய ரயில்வே துறை திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி நாட்டின் நீண்ட தூர வழித்தடங்களில் டால்கோ அதிவேக ரயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s