முதல் நட்சத்திரம் எது?

large_121510338

முதல் நட்சத்திரம் எது என்றால் அசுவினி என்று டக்கென பதில் சொல்லிவிடுவோம். ஆனால் வேத காலத்தில் கார்த்திகை தான் முதல் நட்சத்திரமாக இருந்தது என்றால் ஆச்சரியம்தானே/

யாக குண்டத்தில் சில பொருட்களை இடுகிறார்கள். அவற்றை தேவர்களுக்குரிய அவிர்பாகமாக கொண்டு சென்று சேர்ப்பது அக்னி. இதனால் அக்னிக்கு நம் வாழ்வில் முக்கியத்துவம் உண்டு. திருமணங்கள் நடைபெறுவது கூட அக்னி சாட்சியாகத்தான். சீதாதேவி அக்னியில் குளித்தே தன் கற்புத்திறனை நிரூபித்தாள். திரவுபதி அக்னி குண்டத்தில் இருந்து தோன்றியதால் தான் ஐவருக்கு மனைவியாக முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் அக்னியில் குளித்து தன்னை பரிசுத்தப்படுத்திக்கொள்வாள்.

அக்னி குண்டத்தில் இருந்து வெளிப்பட்ட பாத்திரத்தில் இருந்த பாயசத்தைக் குடித்த தசரதரின் மனைவியர் ராமன் லட்சுமணன் பரதன் சத்ருக்கனனைப் பெற்றெடுத்தனர்.  இப்படி ஆன்மிகத்தில் அக்னிக்கு பெரும் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.

சிவபெருமானின் நெற்றியில் ஒரு கண் இருக்கிறது. இது அக்னியை சிந்துவதாகும். சூரபத்மனை அழிக்க இந்தக் கண்களில் இருந்து வெளிப்பட்ட அக்னி பொற்களே கார்த்திகேயன் என்னும் கருணை தெய்வமாக வடிவெடுத்தது. தேவதைகளை வரிசைப்படி எண்ணும்போது அக்னியில் இருந்து தான்  துவங்க வேண்டும். நரசிம்மரின் மூல மந்திரத்தை சொல்லும்போது “ ஸர்வதோமுகம் “ என்ற வார்த்தை வரும். இதற்கு எல்லாத்திசைகளிலும் முகம் உடையவர் எனப்பொருள். அக்னிக்கும் எல்லா திசைகளிலும் முகம் உண்டு.

அக்னிக்கு இரட்டை முகத்துடன் சிலைகல் இருக்கும். அக்னியே கார்த்திகை நட்சத்திரத்திற்கு அதிஷ்டான தேவதையாக உள்ளார். ஆன்மிகத்தில் அக்னியே முதல் தேவதை என்பதால் வேத வழக்குப்படி கார்த்திகையே முதல் நட்சத்திரமாக இருந்தது. கார்த்திகையில் துவங்கி பரணியில் முடித்தனர்.

வேத காலத்திற்கு பிறகே அசுவனி என மாறி விட்டது. ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகன் கோவில்களில் அபிஷேகம் செய்து வழிபட்டால் முருகப்பெருமான் மனம் குளிர்ந்து வேண்டும் வரம் தருவார்  அன்றைய தினம் கோவில்கள் வீடுகளில் யாகங்கள் நடத்துவதன் மூலம் தெய்வங்களின் கருணைப் பார்வையைப் பெறலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s