ஆஹா டிப்ஸ்

pottukadalai-2

கூட்டு செய்யும்போது தேங்காய்க்குப் பதில் பொட்டுக்கடலை சீரகம் பச்சை மிளகாய் அரைத்து சேர்த்தால் வாசனையாகவும் மணமாகவும் இருக்கும்.12

கேஸ் அடுப்பில் கறை அழுக்கு இருந்தால் பர்னர் மேல் இருக்கும் மூடியை கழற்றிவிட்டு கொதிக்க வைத்த நீர் ஒரு கப் ஊற்றி ஐந்து நிமிடம் கழித்து உலர்ந்த துணியால் துடைத்தால் அடுப்பு பளிச்  சிலிண்டர் டியூபில் படாமல் கவனமாக ஊற்ற வேண்டும்.ld549

எறும்புத் தொல்லை நீங்க சிறிது மஞ்சள் தூளை எடுத்து தண்ணீரில் கரைத்துத் தெளித்தால் எறும்புகள் ஓடிவிடும்.1446077503-7254

தோசைக்கு ஊற வைக்கும்போது ஒரு கைப்பிடி துவரம் பருப்பு சேர்த்து அரைத்தால் வாசனையாகவும் தோசை முறுகலாகவும் வரும்download (2)

முதல் நாள் அரைத்த மாவு பொங்கி வெளியே வழிந்து விடாமல் இருக்க வாழை இலையின் நடுப்பட்டையை எடுத்து மாவின் உள்ளே நட்டு வைத்து விட்டால் மாவு பொங்கி வழியாது.Turkish_coffee_starting_to_boil

காபி டிகாக்ஷன் மீந்து விட்டால் அதில் சிறிதளவு சர்க்கரை போட்டு வைத்தால் பழைய வாசனை வராமல் புது காபி மணத்தோடு இருக்கும்.large_1386184128

இட்லிப் பொடி அரைக்கும்போது அதில் நிலக்கடலையையும் சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்,Mutton-Pakora-jpg-880

வடை     பக்கோடா செய்யும்போது ஒரு ஸ்பூன் ரவை கலந்து செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.nallennai

காரக்குழம்பு வத்தல் குழம்பில் காரம் அதிகமானால் கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்துவிட்டால் சரியாகும்.download

வெண்டைக்காயை வதக்கும்போது எலுமிச்சம்பழ சாறு கொஞ்சம் பிழிந்தால் வழவழப்பு இருக்காது.download (1)

எந்த வகை இனிப்பானாலும் அரை சிட்டிகை உப்பு சேர்க்க சுவை கூடும்.rice-flour-41

அரிசி மாவு கோதுமை மாவு மைதா மாவு கடலை மாவுகளில் கொஞ்சம் உப்பு போட்டு கலந்து வைத்தால் பூச்சி வராது. சாம்பார் மிளகாய்பொடி அரைத்ததும் கொஞ்சம் உப்பும் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணையும் சேர்த்து பிசிறி டைட்டாக மூடி வைத்தால் வண்டு வராது  வாசமும் அப்படியே இருக்கும்.

Advertisements

One thought on “ஆஹா டிப்ஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s