ஆஹா ஆலயம்

images

சேலம் அருகே தேமலை அடிவாரத்தில் உள்ள புளிய மரத்தடியில் முனியப்ப சுவாமி கோவில் உள்ளது. இவருக்கு அருகில் ஒரு தட்டு நிறைய கூழாங்கற்கள் நிரப்பி வைக்கப்பட்டிருக்கும். இங்கு வரும் பக்தர்கள் நாங்கள் நினைத்த காரியம் கைகூடுமா என சுவாமியை மனதார வணங்கி கண்களை மூடிக்கொண்டு தட்டில் உள்ள கற்களை கைகளில் அள்ளுகிறார்கள். பின்பு கண்களை திறந்து அந்தக் கற்களை எண்ணுவர். எண்ணிக்கை ஒற்றைப் படையில் வந்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.maxresdefault

திருவண்ணாமலி கிரிவலப்பாதையில் இடுக்குப் பிள்ளையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேர்க்கோட்டில் அமையாத நிலையில் மூன்று வாசல்கள் உள்ளன. பின்வாசல் வழியாக நுழைந்து ஒருக்களித்துப் படுத்தவாறு வளைந்து தவழ்ந்து இரண்டாவது வாசலில் நுழைந்து முன் வாசல் வழியாக வெளிவர வேண்டும். இவ்வாறு வந்து பிள்ளையாரை வழிப்பட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.4d8fb3dbb3f8a242b2ed892c200a7a48

கும்பகோணம் மடத்துத் தெருவில் ஸ்ரீபகவத் வினாயகர் கோயிலில் நவகிரக வினாயகர் உள்ளார். ஒவர் சூரியனை நெற்றியிலும் சந்திரனை நாபியிலும் செவ்வாயை வலது தொடையிலும் புதனை வலது கீழ்க்கையிலும் வியாழனை சிரசிலும் வெள்ளியை இடது கீழ்க்கையிலும் சனியயி வலது மேல் கையிலும் ராகுவை இடது மேல் கையிலும் கேதுவை இடது தொடையிலும் கோண்டு காட்சியளிக்கிறார். ஜாதகத்தில் கிரக பாதிப்பு உள்ளவர்கள் இந்த வினாயகரை வலம் வந்து நலம் பெறுகின்றனர்.sri-kodikkunnu-bhagavathy-temple_

கேரள மானிலத்தில் காடம்புழ என்ற தலத்தில் காடம்புழ தேவி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் மிக முக்கியமான நேர்த்திக்கடன் முட்டு நீக்கல் ஆகும். முட்டு நீக்கல் என்றால் தடைகளை அகற்றுவது என்பதாகும் கல்யாணத் தடைகள் வியாபார விஷயமான தடைகள் என்று எல்லாவிதமான தடைகளை நீக்கவும் ஒரு தேங்காயை வாங்கி அம்மனுக்கு அர்ச்சனை செய்து தம் குறைகளை சொல்லி வேண்டிக்கொண்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை.nandaankovil3

கும்பகோணம் அருகிலுள்ள திருவிச நல்லூர் என்ற ஊரிலிருந்து நடந்து செல்லும் தூரத்திலுள்ளது திருந்துதேவன்குடி   இங்குள்ள கற்கடேஸ்வரர் ஆலயத்திலுள்ள சுயம்பு லிங்கத்திற்கும் அருமருந்து நாயகிக்கும் அபிஷேகம் செய்து தரப்படும் நீரும் எண்ணெயும் நோய்களை தீர்க்கும் அருமருந்தாக கருதப்படுகிறது. அதுவும் புற்று நோய்க்கு இந்த எண்ணெய் விசேஷ மருந்து என்று கருதப்படுகிறது. சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு துவாரம் உள்ளது. இங்கு சந்திரன் அமர்ந்த நிலையில் யோக சந்திரனாக உள்ளார்.78310233

சேலம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது சுவவனேஸ்வரர் என்கின்ற கிளி வன நாதர் கோவில். அம்மன் ஸ்வர்ணாம்பிகை என்ற பெயரில் அருள் பாலிக்கிறாள். ஸ்வாமி லிங்க ரூபத்தில் தலையில் வெட்டுக்காயத்துடன் ஒரு பக்கம் சாய்ந்து தரிசனம் தருகிறார்.  கோயிலின் உள்ள மூர்த்தங்களான வினாயகர்  ஈசன் சோமாஸ்கந்தர்  நடராஜர் முருகன் துர்க்கை சண்டிகேஸ்வரர் நவக்கிரஹங்கள் அம்பாள் ஆகியோரை வணங்கி கொடி மரத்தடியில் நமஸ்கரித்தால் நமது சுற்று ஓம் வடிவில் அமைகிறது.

Advertisements

4 thoughts on “ஆஹா ஆலயம்

    1. நீண்ட நாட்களாக தாங்கள் வலைப்பக்கமே வரவில்லையே என்ன காரணம் ரூபன் பின்னூட்டத்திற்கு நனறி

  1. ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு வகையில் விசேஷம். அங்கு குடியிருக்கும் கடவுளர்களுக்கும் வினோதமான பெயர்கள். வியப்பான தகவல்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s