அக்கக்கோ குருவி

12

காவிரி நதிக்கரையில் வாழும் ஒருவகை பறவைக்கு அக்கக்கோ   குருவி என்று பெயர் இந்தக் குருவிகளுக்கு சுவாரஸ்யமான ஒரு கதை கூறப்படுகிறது.  காவிரிக்கரையோரம் உடன்பிறந்த இரண்டு குருவிகள் வசித்தன. நதி வறண்டிருந்த சமயம் ஒரு நாள் மணற்பரப்பில் காய வைக்கப்பட்டிருந்த உணவை அந்தக் குருவிகள் தின்று கொண்டிருந்தபோது திடீரென வெள்ளம் வந்தது. தங்கைக் குருவி உடனே பறந்து போய் மரத்தில் அமர்ந்து கொண்டது.  அக்கா குருவியோ கவனக்குறைவால் வெள்ளத்தோடு அடித்துச் சென்றுவிட்டது. அதைக் கண்ட தங்கைக் குருவி அக்கோ அக்கோ எனக் கதறியது  காலங்கள் கடந்தாலும் ஒவ்வொரு வருடமும் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுக்கும்போதெல்லாம் அக்கா குருவி திரும்ப வந்து விடும் என்ற நம்பிக்கையில் தங்கைக்குருவி காவிரிக்கரையோர மரத்தில் அமர்ந்து அக்கோ  அக்கோ என்று குரல் எழுப்பி அக்கா குருவியை அழைக்குமாம்.      இப்போதும் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுக்கும் சமயங்களில் அந்த தங்கைக் குருவியின் அக்கோ அக்கோ குரலை கேட்கலாம் என்கின்றார்கள் அந்தப் பகுதி மக்கள்.

Advertisements

2 thoughts on “அக்கக்கோ குருவி

  1. அக்கா தங்கை உறவு பறவைகளிலும் மிகவும் சிறப்பான ஒன்று போலிருக்கிறது.

  2. நிஜமாக இருக்கிறதோ இல்லையோ இருப்பதாக கற்பனை செய்வது மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s