ஆஹா தகவல்

download

அன்னாசிப்பழத்துக்கு ரத்தக்கட்டை உடைத்து புண்களை விரைவில் ஆற்றும் அபாரசக்தி உள்ளது. பழத்தை துண்டுகளாகவோ சாறாகவோ அருந்தும்போது தொண்டை உணவுப் பாதையில் ஏற்படும் ரணங்களைக் குணப்படுத்தும். அன்னாசிப்பழ மாத்திரையும் உள்ளது. மல்யுத்த வீர்ர்களுக்கு முகத்தில் குத்துப்பட்டு காயம் ரத்தக்கட்டு  ஏற்படும்போது மருந்தாக அன்னாசிப் பழத்தையே உண்ணக்கொடுக்கிறார்கள்.feature35-e1354641936514

உலகிலேயே மிக விலை உயர்ந்த பேனா ஒன்று ஸ்விட்சர்லாந்து நாட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் 50 லட்சம் ரூபாய். இதன் நிப்பு தங்கத்தினால் செய்யப்பட்டுள்ளது. மூடியில் ஆப்பிரிக்க நாட்டு வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன  இப்பேனா கனடா நாட்டில் 1810 ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது.cfl-bulbs-500x500

மின்சார சிக்கனத்துக்கு உதவும் சி எல் எஃப் பல்புகளைக் கவனமாகக் கையாள வேண்டும். இந்த பல்புகளில் அதிக வெளிச்சத்துக்காக பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. இது அதிக விஷத்தன்மை கொண்டது. இதை நுகர்ந்தாலோ அல்லது இது சருமத்தில் பட்டாலோ மக்ரைன் தலைவலி மூளை பாதிப்பு உடல் அசைவுகள் பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படும். அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்பு உண்டாகும். ஆகவே இந்த பல்புகள் உடைந்தால் வெளிவரும் நெடி மூக்கில் ஏறாமல் இருக்க அந்த இடத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும். கால் மணி நேரத்திற்குப் பிறகு எடுத்து குப்பையில் போடவேண்டும்.MGR-chennai_0_0_0_0

முன்னாள் தமிழக முதல்வர் எம் ஜி ஆரின் வாழ்வில் எண் ஏழின் ஆதிக்கம் அதிகம்   அவர் பிறந்தது 1917ம் ஆண்டு. நாடக நடிகரானது 1927ம் ஆண்டு  காங்கிரஸில் சேர்ந்தது 1937ம் ஆண்டு. சினிமாவில் அறிமுகமானது 1947ம் ஆண்டு. தி மு க வில் இணைந்தது 1957ம் ஆண்டு. எம் எல் ஏ ஆனது 1967ம் ஆண்டு. தமிழக முதல்வரானது 1977ம் ஆண்டு. இயற்கை எய்தியது 1987ம் ஆண்டு.  எம் ஜி ஆர் பயன்படுத்திய காரின் எண் 4777 தான்.8023452_35_z

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய உணவு விடுதி தாய்லாந்து தலை நகர் பாங்காக்கில் உள்ள ராயல் டிராகன் ஆகும். இங்கு ஒரே நேரத்தில் 5000 பேர் அமர்ந்து சாப்பிட இடவசதி உள்ளது. 1991 ல் திறக்கப்பட்ட இந்த ஹோட்டல் சுமார் எட்டரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு ஏறத்தாழ 1200 சர்வர்கள் வேலை செய்கின்றனர். இவர்கள் காலில் ரோலர் ஸ்கேட்டுடன் வந்து ஆர்டர் பெற்றுச் செல்கின்றனர்.  அதேபோல் ஸ்கேட் செய்தே உணவினைப் பரிமாறுகின்றனர். இது உலகின் மிகப்பெரிய ஹோட்டல் மட்டுமல்ல  மிக வேகமாக உணவு பரிமாறும் ஹோட்டலுமாகும்.baby

மைசூர் பகுதியில் கொரமர்கள் என்ற இனத்தினர்களிடையே பேறுகாலத் தனிமை என்ற ஒரு பழக்கம் வழக்கத்திலிருக்கிறது. மனைவியின் பிரசவ காலத்தின்போது குழந்தைப் பிறப்புக்கு மூன்று நாட்கள் முன்பிருந்து கணவனும் பிரசவ வேதனை பாவனை செய்ய வேண்டும். மனைவிக்குக் கொடுக்கப்படும் பத்திய உணவையே கணவனும் உண்ண வேண்டும். குழந்தை பிறப்புக்குப் பின் தீட்டுகழித்த பின்னரே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்.

Advertisements

2 thoughts on “ஆஹா தகவல்

  1. அன்னாசிப்பழத்திற்கு இப்படி ஒரு குணம் இருப்பது உங்கள் தகவல் படித்துத்தான் தெரிந்து கொண்டேன். விலையுயர்ந்த பேனா, புரட்சித் தலைவரின் ராசியான எண் ஆகியவி சுவாரஸ்யமான தகவல்கள். உணவு விடுதியில் ரோலர் ஸ்கேட்டில் சறுக்கிக்கொண்டே வந்து நமக்கு உணவு பரிமாறுகிறார்களா? நல்ல தகவல். கணவனும் பிரசவ வேதனைப் படுவது, மனைவி சாப்பிடும் சாப்பாட்டையே சாப்பிடுவது கொஞ்சம் ஆறுதலான விஷயம். நாம் பெற்ற துன்பம் அவர்களும் படுவார்களாக!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s