ஆஹா டிப்ஸ்

1

கார்ன்ஃபிளேக்ஸை புளிப்பில்லாத கெட்டித்தயிரில் கலந்து அத்துடன் சிறிது கேரட் துருவல் உப்பு கொத்தமல்லித் தழை சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.download (3)

டீ கலக்கும்போது பாலில் இஞ்சி ஏலக்காய் லவங்கம் மிளகு சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டு சாப்பிட்டால் சூப்பர் சுவை18-1379511817-8-wheatravaupma

கோதுமை ரவை உப்புமா செய்யும்போது குக்கரிலேயே தாளித்து தேவையான தண்ணீர் விட்டு இரண்டு விசில் வந்ததும் தீயைக் குறைத்து ஐந்து நிமிடங்கள் கழித்து பார்த்தால் நன்றாக வெந்து மெத்தென்று இருக்கும்1452688764-5334

அவியல் செய்தபின் தயிரை கடைசியாக சேர்க்கவேண்டும்  கட்டாயம் தாளிக்கக்கூடாது. இறக்கி வைத்தபின் பச்சை தேங்காய்  எண்ணெய் ஒரு ஸ்பூன் கலந்து கிளறினால் சுவையான அவியல் ரெடிram121

முருங்கைக்கீரை சுண்டல் செய்வதற்கு முதல் நாளே முருங்கைக் கீரை இலைகளை ஆய்ந்து வைக்க வேண்டாம். கீரையை ஒரு துணியில் சுற்றி வைத்தால் இலைகள் தனியாக உதிர்ந்துவிடும். காம்புகளை மட்டும் எடுத்துவிட்டு சுண்டல் செய்து விடலாம்.download (2)

வாழைப்பழங்கள் வெளிப்படுத்தும் வாயுக்கள் பிற பழங்களை விரைவாக பழுக்க வைத்துவிடும். எனவே வாழைப்பழங்களைத் தனியே வைப்பது தான் உகந்தது.vegetable-cutlet212

கட்லெட் செய்ய பிரட் தூள் இல்லையெனில் அரிசியைப் பொரித்து தூளாக்கி பயன்படுத்தலாம்.download (1)

முள்ளங்கி சாம்பார் செய்யும் போது சிறிதளவு எண்ணெயில் முள்ளங்கியை வதக்கியபின் சாம்பார் செய்தால் சாம்பாரின் ருசி கூடும்.download

காராமணியை வேக வைத்து அத்துடன் சுக்கு தூள் மிளகுதூள் சேர்த்து சாப்பிட்டுவர மூட்டுவலி குறையும்.

பல வகைகளில் காராமணியை உணவில் சேர்த்துச் சாப்பிட்டுவர உடல் பளபளப்பாக இருக்கும். சரும நோய்கள் வராது.

காராமணியை துவரம் பருப்புடன் குழம்பு செய்து சாதத்தில் கலந்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும்  ஜீரண சக்தி உண்டாகும்.

காராமணி வெந்தயம் கருப்பட்டி இவைகளை மிக்ஸியில் அரைத்துக் களி கிண்டி சாப்பிட்டு வர தசைகள் சீராக இயங்கும்.

Advertisements

3 thoughts on “ஆஹா டிப்ஸ்

  1. கார்ன் ப்ளேக்ஸ் எப்போதும் பால் சர்க்கரையுடன் தான் சாப்பிடுவார்கள், நீங்கள் சொல்லியிருப்பது போல ஒருமுறை செய்து சாப்பிட்டுப் பார்க்கவேண்டும்.
    கோதுமை ரவை உப்புமா செய்ய நல்ல குறிப்பு இது. நீண்ட நேரம் மூடி வைத்து செய்தால்தான் இந்த உப்புமா மெத்தென்று வரும்.
    எல்லாத் தகவல்களுமே ஆஹா சொல்ல வைத்தன.

  2. கோதுமை ரவை வேக நேரம் ஆகும் என்பதால் நான் எப்போதுமே குக்கரில் தான் செய்வேன் பொல பொலவென்று நன்றாக வெந்து சுவையாக இருக்கும் கேரட்டை துருவி உப்புமா நன்றாக வெந்தபிறகு குக்கரை திறந்த பிறகு சேர்த்தால் மணமும் கலரும் சும்மா கலக்கும்

  3. மேலே சொன்ன குறிப்பையும் தகவலுடன் சேர்த்துவிடுங்கள். கலக்கும் குறிப்பாயிற்றே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s