கதவே இல்லாத கிராமத்தில் வெட்டவெளி சனீஸ்வரர்

26-12-15-05-08-28-0

மஹாராஷ்டிரா மானிலம் ஷிர்டியில் இருந்து 60 கிமீ தூரத்தில் உள்ளது சிங்னாபூர். இங்கு சனி பகவான் கோவில் உள்ளது. இந்தக் கொவில் 160 வருடங்களுக்கு முன் உருவானது. அங்குள்ள வீடுகள் வங்கிகள் காவல் நிலையம் கடைகள் என எங்குமே கதவுகள் இருக்காது. யாராவது திருட்டில் ஈடுபட்டால் சனி பகவான் சும்மாவிடமாட்டார் என்று உறுதியாக நம்பப்படுகிறது.shani-shignapur

வெளியூர் செல்பவர்கள் க்ஊட வீட்டை திறந்தபடியே விட்டுவிடுவர். இங்குள்ள பொருட்கள் யாவும் சனி பகவானுக்கு அர்ப்பணம் என்கின்றார்கள் கிராம மக்கள். சிலர் திரைச்சீலைகளை பயன்படுத்துகிறார்கள் இங்கு 6500 வீடுகள் இருக்கின்றன.

கல் சனீஸ்வரர்1

சனீஸ்வரர் கருப்பு கல் வடிவத்தில் திறந்த வெளியில் உயர்ந்த பீடத்தில் இருக்கிறார். அவர் ஊனமுற்றவர் எனவே ஒரு கால் ஊன்றி நிற்கிறார். இவருக்கு மரத்தால் ஆன சிறிய காலணி உள்ளது. இது போன்ற சிறிய காலணிகளை வீடு மற்றும் அலுவலகம் முன் மாட்டி வைத்தால் திருஷ்டி படாது என நம்புகிறார்கள்.

 

24 மணி நேரமும் எரியும் அணையா விளக்கும் உள்ளது. சனீஸ்வரரின் தலைக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள தாரா பாத்திரத்திலிருந்து எண்ணெய் சொட்டிக்கொண்டே இருக்கிறது. வைகாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி மற்றும் அமாவாசை அன்று இச்சிலையின் நிறம் நீலமாகத் தோன்றும்.shani-abhisek

இவருக்கு மலர் மற்றும் எருக்கு இலை மாலை அணிவிக்கப்படும். வெள்ளி ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்படும். அருகில் கதாயுதம் ஒன்று இருக்கும். சனிக்கிழமைகளிலும் சனீஸ்வரர் பிறந்த நாள் அன்றும் மஹாபூஜை செய்யப்படும். கோவிலில் உள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப்படு அவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. வேறு எதற்கும் இதை பயன்படுத்துவதில்லை.

அதிசய மரங்கள்

சனி பகவானுக்கு அருகில் வேப்பமரம் இருந்தது  இதில் கிளைகள் கிடையாது அப்படியே வளர்ந்தாலும் தானாக ஒடிந்து விழுந்து விடும். சில ஆண்டுகளுக்கு முன் வேப்பமரமே சாய்ந்து விட்டது. இப்போது அத்திமரம் உள்ளது. இதன் கிளைகள் சனி பகவானின் சிறிய கல் சிலை உயரத்துக்கு மேல் வளர்வதில்லை.

பாம்பு கடிக்கு தீர்த்தம்2

ஆண்கள் குளித்துவிட்டு ஈரத்துணியுடன் தான் சன்னதிக்கு செல்ல முடியும்  இவர்கள் தாங்களாகவே சனி பகவானுக்கு எண்ணெய் பால் அபிஷேகம் செய்யலாம். பெண்கள் கருவறை சென்று பூஜை செய்ய முடியாது. தூரத்தில் இருந்து தரிசிக்கலாம் யாரையாவது பாம்பு கடித்தால் உறவினர்கள் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து அதை கடி பட்டவர்களுக்குக் கொடுக்கிறார்கள்.

இருப்பிடம்

மும்பையில் இருந்து 150 கிமீ  ஷிர்டியில் இருந்து 60 கிமீ

 

2 thoughts on “கதவே இல்லாத கிராமத்தில் வெட்டவெளி சனீஸ்வரர்

  1. சமீபத்தில் இந்தக் கோவில்தானே செய்திகளில் அடிபட்டது? பெண்களுக்கும் கோவில் கருவறைக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று போராடினார்களே.
    திறந்தவெளி கோவில், வீடுகள்…அதுவும் இந்தக் காலத்தில்!

  2. ஆமாம் ரஞ்சனி பெண்களும் உள்ளே நுழைய ஆர்ப்பாட்டம் செய்து ஜெயித்தனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s