குதுப் ஷாஹி கல்லறைகள்

DSC00019

ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற கோல்கொண்டா கோட்டை அருகே இப்ராஹிம் பாக் தோட்டத்தில் ஏழு குதுப் ஷாஹி மன்னர்களின் கல்லறைகள் அமைந்துள்ளது. இந்த கல்லறைகள் கட்டப்பட்ட காலம் 16 ஆம் நூற்றாண்டு கார் அருங்காட்சியகத்தை முடித்துக்கொண்டு நாங்கள் குதுப் ஷாஹி கல்லறைகளைக் காண வந்தபோது மணி 12.50. அதனால் முதலில் ஒரு மரத்தடியில் அமர்ந்து எங்கள் மதிய உணவை முடித்துக்கொண்டோம் இஸ்லாமிய கலையின் அருமையை விளக்க வழிகாட்டி ஒருவரை ஏற்பாடு செய்துகொண்டோம்.

ஒருவர் இறந்த பின்னரே கல்லறை கட்டுவார்கள். இந்தியாவிலேயே வேறு எங்கும் காண முடியாதது. ஒரே வளாகத்துக்குள் சுமார் 16 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரே வம்சப் பரம்பரை மன்னர்கள் ஒன்றாகக் கூடி நிரந்தரமாக துயிலும் இந்த அரிய காட்சி இங்குதான் கிடைக்கும்.DSC00021

கோல்கொண்டா கோட்டையில் அரசாண்ட சுல்தான் மன்னர்கள் உயிருடன் இருக்கும்போதே அவர்களுக்கு இந்த கல்லறைகளை கட்டிக்கொண்டுவிடுகின்றனர்.  இறந்த பிறகு அவர்களை இங்கு கொண்டுவந்து குளிர்ந்த நீர் வென்னீர் பன்னீர் என மூன்று விதமான நீரில் குளிப்பாட்டி வாசனை நிறைந்த துணியில் சுற்றி ஒரு பெட்டியில் வைத்து அடக்கம் செய்து விடுகின்றனர்.  இங்கு ஏழு கல்லறைகள் இருப்பதால் இது seven tombs  எனவும் அழைக்கப்படுகிறது.

DSC00085

இந்தக் கல்லறைகள் அழகான வேலைப்பாடுகளுடனும் மிக அழகான தோட்டங்களுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அரசாண்ட கோட்டை கூட சிதைந்து விட்டது ஆனால் கல்லறைகள் அப்படியே இருக்கின்றன.  தாம் அரசாண்ட இடத்தையும் நம்முடைய அழகான கல்லறைகளில் இருந்து அவர்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்களோ என தோன்றியது  ஒவ்வொரு கற்சுவரும் ஆர்ச்சுகளும் அலங்கார வளைவுகளும் தூண்களும் இரண்டடியிலிருந்து நான்கடி நீளமும் அகலமும் கொண்டவை.  அதன் உச்சியில் குவி மாடங்கள் உட்புறமாக பெர்சியன் அமைப்பில் நீள் டைமண்டுகளாகத் தூண்களில் இருந்து அழகான வடிவமைப்பு செய்யப்பட்டு செதுக்கப்பட்டுள்ளன. இதில் இஸ்லாமிய பெர்சிய கட்டிடக்கலை அமைப்புகளின்படி உருவங்கள் அலங்கரிக்கின்றன

சிமெண்ட் என்ற ஒரு பொருளே இல்லாமல் சுண்ணாம்பையும் வெல்லத்தையும் மட்டுமே கொண்டு அமைத்த சுவர்கள் 400 வருடங்களைத்தாண்டியும் தமது பெருமையை பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன.  எங்குமே மின்சார விளக்குகளோ காற்றாடியோ இல்லை.  இயற்கை வெளிச்சம் உள்ளே வருமாறு கல்லறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கல்லறையும் குளிரூட்டப்பட்டதுபோல் குளுமையாக இருக்கின்றன.DSC00118

ஔரங்க சீப்பால் 24 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஒரு சிறிய பள்ளிவாசலும் இதன் உள்ளேயே இருக்கிறது. இதன் உள்ளேயே அவர்களுக்கு மருத்துவம் பார்த்த இரண்டு மருத்துவர்களுக்கும்  ஒரு ராணுவ அதிகாரிக்கும் கல்லறை அமைக்கப்பட்டது  அவர்களது நன்றி உணர்வை வெளிப்படுத்துகிறது. இந்தக் கல்லறைகள் முழுவதும் மணிப்புறாக்களும் மாடப்புறாக்களும் நாள் முழுவதும் நூற்றுக்கணக்கில் பறப்பது பார்க்க மிக அழகாக உள்ளது.

DSC00102

இப்ரஹூம் குலி குதுப் ஷாவை ஆடியும் பாடியும் சந்தோஷப்படுத்திய  தாராமதி பானாமதி என்ற இரு நங்கையர்களுக்கும் இங்கு கல்லறை அமைந்துள்ளது எங்களை வியக்கவைத்தது.  எங்களது வழிகாட்டி ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் விரிவாகவும் விளக்கமாகவும் சொன்னார்.  நம் மதத்தைத் தவிர இன்னொரு மதத்தின் கலாசாரத்தையும் தெரிந்து கொண்ட திருப்தியோடு சுமார் 3 மணி அளவில் வீடு வந்து சேர்ந்தோம்.

Advertisements

2 thoughts on “குதுப் ஷாஹி கல்லறைகள்

  1. நீங்கள் சுற்றிப் பார்த்துவிட்டு விவரமாக எங்களுக்கும் சொல்லிவிட்டீர்கள். கோல்கொண்டா கோட்டையை அடுத்த முறை பார்த்துவிட வேண்டும்.

  2. கோல்கொண்டா கோட்டையை நான் பள்ளியில் வேலை பார்த்தபோது நாலைந்து முறை பார்த்துவிட்டேன். ஆனால் இப்போது நன்றாக செய்து விளக்கெல்லாம் போட்டிருக்கிறார்கள் அதனை பார்க்கவில்லை விரைவில் நீங்கள் ஹைதிராபாத் வந்தால் உங்களுடன் பார்க்கலாம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s