உதவிக்கும் அளவுண்டு

ST_20160224142111797071

உஜ்ஜைனியில் ஒரு அந்தணர் தன் மனைவியுடன் வசித்தார். கோவில்களில் பூஜை செய்வது அவரது பணி  ஒரு முறை அவ்வூரில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் சாப்பிடவே வழியில்லாத நிலையில் தவித்ததால் கோவிலுக்கு செலவழிக்க பணமில்லாமல் அந்தப்பக்கம் தலை வைக்கவே இல்லை. அந்தணர் பசியால் வாடினார். அவரது மனைவி மயக்க நிலைக்கே போய்விட்டாள்

வேறு வழியின்றி பிழைப்புக்காக மனைவியுடன் வெளியூர் புறப்பட்டார். வழியில் ஒரு பாகன் யானைக்கு கொள் கொடுத்துக்கொண்டிருந்தான். அதையே அவனும் சாப்பிட்டான்.    அந்தணர் அவனிடம் தம்பி நானும் என் மனைவியும் சாப்பிட்டு பல நாட்கள் ஆகிறது. எனக்கும் கொஞ்சம் கொள் கொடு. நாங்களும் சாப்பிட்டு பசியாறுவோம் என்றார்.

பாகன் அவரிடம் சுவாமி மன்னிக்க வேண்டுகிறேன் இதை நான் எச்சில் செய்து விட்டேன்  அந்தணர்களுக்கு எச்சில் உணவை அளிப்பது முறையில்லையே என்றான்.  பரவாயில்லை  ஆபத்து காலத்தில் மனிதன் தர்மத்தை சற்றே வளைத்து தப்பித்து கொள்ளலாம். இதை ஆபத்தர்மம் என்பர்/ பசியால் நாங்கள் இறக்கும்  நிலைக்கு வந்து விட்டோம்.  உயிர் பிழைக்க இதை சாப்பிட்டுக்கொள்கிறோம் என்றார் அந்தணர். அவர் சொன்னதைக் கேட்ட பாகன் தன்னிடமிருந்த கொள்ளை அவரிடம் கொடுத்தான்.

அதுவரையில் சாப்பிட்டிராத புதிய உணவை அவர்கள் சாப்பிட்டனர். அப்போது விக்கல் ஏற்பட்டது. பாகன் தன்னிடமிருந்த தோல் பையை நீட்டி இதிலுள்ள தண்ணீரைக் குடியுங்கள் என்றான்.  தம்பி எச்சில் பட்ட கொள்ளை சாப்பிட்டது உயிரைத் தக்க வைக்க  அது காப்பாற்றப்பட்டுவிட்டது. இனி தர்மப்படி எச்சில்பட்ட தண்ணீரை குடிக்கக்கூடாது. மேலும் ஒருவரை மீண்டும் மீண்டும் தொந்திரவு செய்யக்கூடாது.  நாங்கள் வேறு இடம் சென்று தண்ணீர் குடித்துக் கொள்கிறோம் என்றபடியே தண்ணீர் இருக்கும் இடத்தை நோக்கி மனைவியுடன் நடந்தார்.

இக்கட்டான நிலையில் ஒருவரிடம் எப்போதாவது உதவி கேட்கலாம். ஆனால் அதையே வாடிக்கையாக வைத்துக்கொள்ள கூடாது. அப்படி செய்தால் உதவி செய்தவருக்கு எரிச்சல் ஏற்பட்டு மற்றவர்களுக்கு உதவுவதைக் கூட நிறுத்தி விடுவார். உதவி பெறுவதற்கும் அளவுண்டு

Advertisements

One thought on “உதவிக்கும் அளவுண்டு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s