வினோத சுதா கார் அருங்காட்சியகம்

WP_20160717_004

ஞாயிற்றுக்கிழமையை சுவையானதாக்க முடிவுசெய்த நாங்கள் இன்று ஊருக்குள்ளேயே இருக்கும் ஒரு கார் அருங்காட்சியகத்தைப் பார்க்க முடிவு செய்து கிளம்பினோம். காலைச் சிற்றுண்டியை வீட்டிலேயே முடித்துக்கொண்டு மதிய உணவை  தயார் செய்து எடுத்துக்கொண்டு மேகமூட்டமான தட்பவெப்ப நிலையை ரசித்துக்கொண்டே எங்கள் பயணத்தை தொடங்கினோம். இந்த அருங்காட்சியகம் எங்கள் ஹைதிராபாத்தின் நேரு மிருகக்காட்சிச்சாலைக்கு போகும் வழியில் பகாதூர்புரா என்னும் இடத்தில் இருக்கிறது. அதை அடைவதற்கு சற்று முன்பாகவே உள்ள விட்டல் கோவிலை சுமார் 10.30 மணிக்கு போய் சேர்ந்தோம்.  ஆஷாட ஏகாதசியை முடித்துகொண்டு மிக அழகான அலங்காரத்துடன் கூடிய  சிறிய கோவில்.  ரகுமாயியுடன் கூடிய அழகிய விட்டலன்  மிக ரம்மியமான தரிசனத்தை முடித்துக்கொண்டு அந்த அருங்காட்சியகைத்தை அடைந்தோம்.DSC09919

திரு கே சுதாகர் என்பரின் கைவண்ணத்தில் உருவான அருங்காட்சியகம் இது. இதன் சிறப்பு என்னவென்றால் உலகிலேயே முதன் முதலாக கைகளாலேயே உருவாக்கப்பட்ட சைக்கிள்கள்  மோட்டர் பைக்குகள் கார்கள் பலவிதமாக வடிவங்களில் உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சிறு வயதிலிருந்தே அவருக்கு இதன் மேல் உள்ள உற்சாகம் அவரை கின்னஸ் சாதனை அளவிற்கு அழைத்துச் சென்றிருக்கிறது. இங்கு மூன்று பகுதிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.  அந்த கார்கள் எல்லாம் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு உருவகப்படுத்தப்பட்டு அனைத்தும் கைகளாலேயே செய்யப்பட்டவை என்பது மிக மிக ஆச்சர்யம்.DSC09949

இவர்  கின்னஸ் ரெகார்டு  லிம்கா ரெகார்டு  Ripley’s Believe It or Not !  விருதுகள்  என பலவிதமான விருதுகளுக்கு சொந்தக்காரர்  சுதாகர் என்ற தன் பெயரிலேயே சுதா கார் மியூசியம் என்ற பெயரில் இதனை நடத்தி வருகிறார்.  நுழைவிலேயே முமுக்க கைகளாலே செய்யப்பட்ட ராட்தச மூன்று சக்கர சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  அதை எடை 3 டன்கள்.  அதை செய்ய மூன்று வருடங்கள் ஆனதாம். இது உலகிலேயே மிகப் பெரிய மூன்று சக்கர சைக்கிள் என கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளது.cycle

அதே போல் பென்சில் ரப்பர் பேனா  சிவலிங்கம் பலவிதமான பந்துகள் லட்டு பிறந்த நாள் கேக்   தேனீர் கோப்பை கணினி கேமரா என பலவிதமான வடிவங்களில் கார்களை செய்து வைத்திருக்கிறார்.  இவையெல்லாம் செய்ய எத்தனை மாதங்கள் பிடித்தன அதன் வேகம் எவ்வளவு என்பதையும் எழுதி வைத்துள்ளனர்.   ஞாயிற்றுக்கிழமையானதால் குழந்தைகள்  நிறைய வந்திருந்தார்கள். DSC09955

அவர்கள் கண்களில் வியப்பும் ஆர்வமும் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருந்தது. நாங்களே குழந்தைகளாகி ரசித்தபோது குழந்தைகளின் உற்சாகம் கரைபுரண்டோடியது ஒன்றும் அதிசயமல்ல.  அந்தக் கார்கள் எல்லாம் எப்படி ஓடும் என்பதை தொலைக்காட்சிகளில் காட்டி விளக்குகின்றனர்.  மிக மிக அதிசயமான ஓர் அருங்காட்சியகத்தை பார்த்த திருப்தியுடன் அங்கிருந்து கிளம்பி  குதுப் ஷாகி டோம்ஸ் என்ற எங்களை ஆண்ட குதுப் வம்சத்தினரின் சமாதிகளை அடைந்தோம்.  அது அடுத்த பதிவில் தொடரும்….

DSC09962

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s