நியூ[ஸ்]மார்ட்

lesedi-la-Rona-2-1200x1800

தென் ஆப்பிரிக்கா நாடான போட்ஸ்வானாவில் உள்ள வைரச்சுரங்கம் ஒன்றில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மிகப் பெரிய வைரம் கிடைத்திருக்கிறது. டென்னிஸ் பந்து அளவுக்கு உள்ள பட்டை தீட்டப்படாத வைரத்துக்கு டெஸ்ஸிட்லாரோனா என்று பெயர் வைத்துள்ளனர். இதற்கு போட்ஸ்வானா மம்மள் பேசும் மொழியில் எங்கள் ஒளி என்று பொருள். 1109 காரட் எடைகொண்ட இந்தப் பட்டை தீட்டப்படாத வைரம்தான் இந்த நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட வைரங்களில் மிகப்பெரியது என்று கூறுகின்றனர். மேலும் இந்த வைரம் மிக உயர்ந்த தரத்துடனும் பளபளப்புடனும் இருப்பதாகவும் 250 முதல் 500 கோடி ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும் என்றும் தெரிகிறது.  இந்த வைரம் 70 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏலம் போகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.Dog-watching-TV

வளர்ப்புப் பிராணிகளான நாய்கள் தனியாக இருக்கும்போது அவற்றுக்குத் தேவையான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு வசதியாக இங்கிலாந்தில் ஒரு நிறுவனம் ஒரு புதிய ரிமோட்டை உருவாக்கி உள்ளது. நாய்களே கால்கள் வாய் மூலம் இந்த ரிமோட்டை இயக்கி பிடித்த நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொள்ள முடியுமாம். அதற்கு ஏற்றபடி தண்ணீர் புகாதவாறு பிளாஸ்டிக்கில் ர்மோட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை எப்படி இயக்குவது என்று நாய்க்கு சொல்லிக்கொடுட்த்து விட்டால் போதும். நாய்கள் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் கூட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கின்றன. என்கிறது தயாரிப்பு நிறுவனம்.download (1)

சமீபத்தில் ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் பட்டத்தைக் கைப்பற்றிய இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலை கவுரப்படுத்தும் வகையில் ஹூன்டாய் நிறுவனம் அவருக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறது. அடுத்த மாதம் ரியோ டி ஜெனீரோவில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கிறார். இவர் விளையாடும்  3 வது ஒலிம்பிக் போட்டி இது. சென்ற முறை லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவர் இந்த ஒலிம்பிக்கில் அதைவிட சிறந்த விளையாட்டை வெளிப்படுத்த முயர்சிப்பேன் என்கிறார்.swat valley_travelguide-pk.1

பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள பாரிகோட்டில் இந்தோ கிரேக்க நகரத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் அகழ்வாராய்ச்சியாளார்கள். கி மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாணயங்கள்  ஆயுதங்கள் கி மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கலைப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன. இவை கிரீட் பாட்ரிஹியா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. கி பி மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த நான்கு தூண்களுடன் கூடிய குஷானக் கோயிலும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.liver

கருணைக் கொலைக்கு அனுமதி கேட்ட ஆந்திர ஏழை விவசாயி ஒருவரின் 8 மாதக் குழந்தை சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. மருத்துவசிகிச்சைக்கான ரூ 50 லட்சம் செலவையும் ஆந்திரா மானில அரசு ஏற்கிறது. இந்த குழந்தைக்கு பிறவியிலேயே கல்லீரல் பாதிப்பு இருந்தது. மாற்று அறுவை சிகிச்சை செய்து குழந்தையைக் காப்பாற்ற ரூ 50 லட்சம் செலவாகும் என்று மருத்துவர்கள் கூற வழியில்லாத பெற்றோர் கருணைக்கொலைக்கு மனு போட்டிருந்தனர். பெற்றோரில் யாராவது ஒருவரின் கல்லீரல் பொருத்தப்படலாம் குழந்தையின் பாதிக்கப்பட்ட கல்லீரலை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிட்டு தாய் அல்லது தந்தையிடமிருந்து 20 சதவீத கல்லீரல் பகுதியை மட்டும் பெற்று குழந்தைக்கு வைக்கப்படும். இதனால் எந்த ஆபத்தும் இல்லை   குழந்தைக்கு வைக்கப்பட்ட கல்லீரல் இரண்டு வாரங்களில் முழு வளர்ச்சி அடைந்துவிடும். அதே போல தானம் கொடுத்தவரின் கல்லீரலும் வளர்ச்சி அடையும்.download

அமெரிக்காவின் நாசா அனுப்பி வைத்த ஜூனோ விண்கலம் 5 ஆண்டுக்காலப் பயணத்துக்குப் பின் அந்த கிரகத்தின் வட்டப்பாதையில் வெற்றிகரமாஅ நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விண்கலம் புளோரிடா மாகாணத்தில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து 2011 ஆகஸ்ட் 5 ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து 5 ஆண்டுகளாகப் பயணித்து 290 கோடி கிமீ தூரத்தைக் கடந்த இந்த விண்கலம் அண்மையில் வியாழன் கிரகத்தை அடைந்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் இது முக்கியமான வெற்றி.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s