மனசு ஒரு கண்ணாடி

ST_20160224141648640208

ஒரு மண்டபத்தில் துறவி ஒருவர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.  அந்தப் பக்கமாக வந்த திருடன் துறவியைப் பார்த்தான். “ பரதேசியாக தோற்றம் தரும் இவனும் ஒரு திருடனாக இருக்கவேண்டும். இரவெல்லாம் கண் விழித்து திருடியதால் தன்னை மறந்து தூங்குகிறான் “ என்று எண்ணியபடி அங்கிருந்து நகர்ந்தான்.

சற்று நேரத்தில் குடிகாரன் ஒருவன் துறவியை கண்டான். “ நிதானம் இல்லாமல் குடித்ததால் இப்படி நினைவை இழந்து கண்மூடி இருக்கிறான் “ என்று உளறியபடி துறவியைக் கடந்து சென்றான்.

கடைசியாக நல்லவன் ஒருவன் அந்த மண்டபத்தின் அருகில் வந்தான். அவனுக்கு துறவியின் முகம் மலர்ந்த தாமரை போல காட்சியளித்தது “   ஆஹா  ………..பெரிய மஹான் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருக்கிறாரே “ என்று சொல்லி சாஷ்டாங்கமாக அவரின் காலில் விழுந்து வணங்கினான்..  மனம் என்னும் கண்ணாடியில் அவரவர் எண்ணமே பிரதிபலிக்கிறது. எனவே மனதை நல்ல விஷயங்களின் பக்கமாக திருப்புங்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s