ஆஹா ஆலயம்

1

கோவை மருதமலைக்குப் பின்புறம் பெரிய தடாகம் என்ற இடத்தில் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்திருக்கிறது. இங்குள்ள நீர் வீழ்ச்சி எந்தக் காலத்திலும் வற்றுவது இல்லை. ஊர் மக்களின் குடி நீர் ஆதாரமாகவும் இந்த அருவி உள்ளது. இந்த அருவியில்  நீராடி இறைவனை வழிபட்டால் தீராத நோய்களும் மன நோய்களும் அகலும் என்பது பக்தர்களின் அனுபவம்.2

புதன் பகவான் எழுந்தருளியுள்ள திருவெண்காடு ஆலயத்தில் ஸ்வேதாரண்யேசுவர் நடராஜர் அகோரமூர்த்தி ஆகிய மூன்று சிவமூர்த்திகளும் பிர்ம வித்யாம்பிகை ஸ்வேதமகா காளி சௌபாக்ய என மூன்று சக்திகளும் எழுந்தருளியுள்ளனர். மேலும் அக்னி சூரியன் சந்திரன் ஆகிய மூன்று தீர்த்தங்களும் ஆல் வில்வம் கொன்றை என்று ஸ்தல விருட்சங்களும் உள்ளன. காசியில் உள்ளது போல அட்சய வடம் என்ற அழியா ஆலமரமும் உள்ளது.kid2

திருவாரூருக்கு அருகில் உள்ளது திருப்பயத்தங்குடி. இத்தலத்தில் ஈசன் திருப்பயற்று நாதர் எனவும் அம்பிகை நேத்ராம்பிகை எனவும் வணங்கப்படுகின்றனர். தலவிருட்சம் சிலந்திமரம். இம்மரத்தின் மலர்கள் மஞ்சள் நிறத்தில் சிலந்திப்பூச்சி வடிவத்தில் இருப்பதால் இப்பெயர் சித்திரை  வைகாசி மாதங்களில் தான்  பூக்கும். இம் மலருக்கு மணமுண்டு.padmanabatemple

திருவனந்தபுரம் ஸ்ரீ அனந்த பத்ம நாபசாமி கோயில் 9 என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்ட  ஆகம விதிமுறைகளின்படி கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயில் மொத்தம் 9 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி சிறியதும் பெரியதுமான 9 கோட்டைகள் உள்ளன. கோயிலின் பிரதான வாசல் முன்பாக பத்மதீர்த்த குளம் உள்ளது.  இந்தக் குளத்துக்குள் 9 கல் மண்டபங்கள் உள்ளன. திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா தன் ராஜ்ஜியம் செல்வம் அனைத்தையும் தானமாக ஸ்ரீ அனந்த பத்ம நாபருக்குப் பட்டயம் எழுதித் தந்து பரிபூரண சரணாகதியடைந்தார். அன்று முதல் திருவிதாங்கூர் அரச பரம்பரையினர் பத்ம நாப தாசர் என்று அழைக்கப்படுகிறார்கள். பத்ம நாப சாமியே திருவிதாங்கூரின் ராஜா என்று கருதப்படுகிறார்.thittai moolavar

தஞ்சாவூர் மாவட்டம் திட்டை என்ற ஊரில் அமைந்துள்ள அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலின் மூலவர் சுயம்புலிங்கமாகும். இங்கு மூலவர் மீது 24 நிமிடத்துக்கு ஒரு முறை ஒரு சொட்டு நீர் விழுகிறது. மூலவரின் உட்புறக்கோபுரத்தில் சந்திரகாந்தக் கல் வைத்துக் கட்டியுள்ளனர்.  இது மிகவும் அபூர்வம். அதேபோன்று ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 15, 16, 17 ஆகிய தேதிகளில் காலையில் சூரிய ஒளி இறைவன் மீது படுகிறது.56_big

செங்கல்பட்டு அருகே திருப்புட்குழி என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள விஜயராகவ பெருமாள் கோயில் பிரசித்தி பெற்றது. இராவணன் சீதையைக் கடத்தி சென்றபோது ஜடாயு என்ற பறவை இராவணனை எதிர்த்துப் போரிட்டு தன் இறக்கை ஒன்றை  இழந்து இங்கே விழுந்தது. சீதையைத் தேடியபடி அங்கு வந்த ராமனும் லட்சுமணனும் ஜடாயுவுக்கு உதவி செய்ய அந்தப் பறவை சீதையை ராவணன் கடத்திச் சென்ற திசையைக் கூறி உயிர்விட்டது. தனக்கு உதவிய பறவையின் உடலைப் புதைத்து சடங்கு செய்தார் ராமர். எனவே இவ்வூர் திருப்புட்குழி ஆயிற்று.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s