ஆரோக்கியத்து உகந்த ஆரஞ்சு சமையல்

download (2)

ஆரஞ்சு சுளைகளுடன் தக்காளி இஞ்சி சேர்த்து குக்கரில் ஒரு விசில் வேகவைக்கவும். பிறகு ஆறியதும் மிக்ஸியில் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும். இதில் ஒரு சிட்டிகை உப்பு 10 டீஸ்பூன் சர்க்கரை சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து புதினா இலைகளைத் தூவி ஃபிரிட்ஜில் வைத்து பரிமாறவும்.

ஆரஞ்சு தோலை பொடியாக நறுக்கி வெயிலில் காயவைத்து மிக்ஸியில் பொடித்து வைத்துக்கொள்ளவும். தேனீர் தயாரிக்கும்போது இந்தப் பவுடரில் ஒரு சிட்டிகைப் போட்டு கொதிக்க வைத்தால் டீ சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

ஆரஞ்சுப் பழத்தைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு மிளகாய் வெந்தயம் பெருங்காயம் கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய ஆரஞ்சுப் பழத்தையும் போட்டு வதக்கவும். அத்துடன் மஞ்சள் பொடி உப்பு போட்டுப் புளிக்கரைசல் சாம்பார் பொடி போட்டு நன்றாகக் கொதித்தவுடன் சிறிது வெல்லம் போட்டு இறக்கவும். சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். பித்தத்திற்கும் ஜீரணத்திற்கும் மிகவும் சிறந்தது.

ஆரஞ்சுத்தோலை பொடியாக நறுக்கவும்  வாணலியில் எண்ணெய் வைத்து சூடானதும் கடுகு நறுக்கிய பச்சை

மிளகாய் இஞ்சி உளுத்தம்பருப்பு தாளித்து நறுக்கிய ஆரஞ்சுத்தோலையும் அத்துடன் போட்டு வதக்கவும்  நன்றாக வதங்கியவுடன் புளிக்கரைசலை ஊற்றி உப்பு போட்டு நன்றாகக் கொதிக்கவிடவும். இதில் ஒரு ஸ்பூன் வெந்தயம் தனியாவை எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து சேர்க்கவும். நன்றாக கொதித்த உடன் இறக்கவும்.  சுவையான ஆரஞ்சு கொத்ஸூ ரெடி.

ஆரஞ்சுப் பழத்தை நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுத்தம்பருப்பு மிளகாய் வற்றல் பெருங்காயம் சேர்த்து வறுக்கவும். அத்துடன் நறுக்கிய ஆரஞ்சுப் பழத்தையும் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் சிறிது புளி சேர்த்து தேவையான உப்பு போட்டு துவையலாக அரைக்கவும். தோசை இட்லிக்கு தொட்டுக்கொள்ள சூப்பர் காம்பினேஷன்.

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s