நியூ[ஸ்]மார்ட்

download (1)

பிரிட்டனின் பெம்போர்க்ஷியர் பகுதியைச் சேர்ந்த 65 வயது முதியவர் கரோல்  கோவர்த். வார விடுமுறையை கழிக்க வனப்பகுதிக்கு சென்றிருந்தார். அவரது காரின் உட்பகுதியில் ராணித்தேனி ஒன்று சிக்கிக்கொண்டது. அதை அவர் கவனிக்காமல் வீடு திரும்பியுள்ளார். தேனீக்களுக்கே உரித்தான நுகர்வு தன்மையால் காரில் ராணித்தேனி இருப்பதை அறிந்த தேனீக்கள் கூட்டமாக கோவர்த்தின் காரை இரண்டு நாட்கள் பின்தொடர்ந்துள்ளன. பின் தேனீ நல ஆர்வலரின் உதவியுடன் ராணித்தேனீ உள்ளிட்ட தேனீக்களைப் பத்திரமாக மீட்டு மீண்டும் வனப்பகுதிக்கே கொண்டு சென்று விட்டுள்ளார் கோவர்த்.peter

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவராக பிஜி நாட்டைச் சேர்ந்த பீட்டர் தாம்ஸன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையில் அடுத்த ஐ நா பொதுச் செயலாளர் தேர்வு நடைபெற உள்ளது. சர்வதேச பிரச்னைக்களைத் தீர்க்கவும் அமைதியை நிலை நாட்டவும் தொடங்கப்பட்ட ஐ நா அமைப்பில் 193 நாடுகள் உறுப்பினரகளாக உள்ளன்ர். தற்போது ஐ நா பொது சபை தலைவராக டென்மார்க் நாட்டைச் சேர்ந்த மோகென்ஸ் விக்கெட்டாப்ட் பதவி வகிக்கிறார். பொதுச் செயலாளராக பான் கி மூன் உள்ளார்.download

அமெரிக்காவைச் சேர்ந்த ஜஸ்டின் சலாஸ் ஒரு புகைப்பட கலைஞர் மலை ஏற்றம் பயின்று போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று வருகிறார். இதில் என்ன விசேஷம் என்ன தெரியுமா?  அவர் ஐந்து வயதிலேயே பார்வை இழந்தவர். மலை ஏற்றத்துக்குத் தொட்டு உணரும் திறன் போதுமே என்னும் இவர் தவறி கீழே விழுந்தால் பாதுகாத்துக்கொள்வதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்துவிட்டுத்தான் செல்கிறார்.  புகைப்படம் எடுக்கும்போது சூரிய ஒளி மனிதர்களின் குரல் காற்றின் திசை இவற்றைக் கவனித்துப் புகைப்படம் எடுக்கிறார்.maxresdefault

அண்மையில் அமெரிக்காவின் ஆர்லாண்டோ நகரத்தில் ஒரு கேளிக்கை விடுதிக்குள் புகுந்த ஒமர் என்ற ஐ எஸ் தீவிரவாதி 49 பேரைச் சுட்டுக் கொன்றான். இந்த நேரத்தில் அங்கிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இம்ரான் யூசுப் தைரியமாக செயல்பட்டு 70 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். இவர் அந்த விடுதியின் பாதுகாவலராகப் பணியாற்றுபவர். ஏற்கெனவே அமெரிக்கக் கப்பல் படையில் வேலை செய்த அனுபவத்தில் கூட்டத்தைத் தாண்டிச் சென்று பின்பக்கக் கதவைத் திறந்து ஒவ்வொருவராக வெளியேற்றி 70 பேருக்கு மேல் காப்பாற்றியிருக்கிறார். ஹீரோவாக அங்குள்ள மக்கள் இவரைக் கொண்டாடுகிறார்கள்.pilots

இந்திய விமானப்படையில் முதன் முறையாக போர் விமானங்களை இயக்க பெண் விமானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை விமானப்படையில் சாதாரண ரக விமானங்களை மட்டும்தான் பெண்கள் இயக்கிவருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போர் விமானங்களை இயக 6 இளம்பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஹைதராபாத் துன்டிக்கலில் உள்ள விமானப்படை அகாடமியில் போர் விமானி பயிற்சி அளிக்கப்பட்டது. தங்கள் திறமையை நிரூபித்து வெற்றி அடைந்து மத்திய ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம் சான்றிதழ் பெற்றனர்.foldimate-v-main

துணிகளை இஸ்திரி போட்டு அழகாக மடித்து கொடுப்பதற்கு ஒரு கருவி உருவாக்கப்பட்டிருக்கிறது.  ஃபோல்டிமேட் எனப்படும் இக்கருவியின் வெளிப்பக்கம் துணிகளை வரிசையாக மாட்டி வைக்கவேண்டும். பட்டனை அழுத்தினால் ஒவ்வொரு  துணியையும் வரிசையாக உள்ளே இழுத்துக்கொள்ளும்.  உட்புறத்தில் ரோபோ கைகள் இருக்கின்றன. துணியை வைத்து சூடான நீராவியைச் செலுத்தி  அழுத்துகின்றன. இஸ்திரி போட்டவுடன் ரோபோ கைகள் வேகமாக துணியை மடித்துக் கீழே அனுப்பி விடுகின்றன.  ஒரு துணியை இஸ்திரி போட்டு மடிக்க ஒரு நிமிடத்துக்கு குறைவான நேரத்தையே எடுத்துக்கொள்கிறது. ஒரு தடவைக்கு 15 முதல் 20 துணிகள் வரை அடுக்கலாம். பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு வீட்டில் எளிதாகப் பயன்படுத்தௌம் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த     போல்டிமேட் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s