ஆஹா தகவல்

pyramid-valley-bangalore-08

பெங்களூருவிலிருந்து சுமார் 40 கிமீ தொலைவில் உள்ளது பிரமிடு பன்னாட்டுத் தியான மையம். இங்கு 45 அடி உயரமுள்ள பிரமிடு கட்டப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட இந்தப் பிரமிடுக்குள் பேரமைதி நிலவும். இங்கு அமர்ந்து செய்யப்படும் தியானம் பிரமிடு தியானம் என அழைக்கப்படுகிறது. சாதாரண தியானத்தை விட பிரமிடு தியானம் மும்மடங்கு சக்தி வாய்ந்தது.4127

இந்தோனேஷியாவில் உள்ள லேடி ஜெக்  [ lady jek ]  நிறுவனம். பெண்களுக்காக தனிவாகன அழைப்பு சேவையை தொடங்கியுள்ளது. பெண்கள் இந்தச் சேவையைப் பெற தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டால் இருசக்கர வாகனத்தில் ஒரு பெண் வருவார். அழைத்த பெண்ணுக்கான ஹெல்மெட்டையும் அவரே தந்து எங்கு செல்ல வேண்டுமோ அங்கே கொண்டு சேர்ப்பார்/ இதற்குக் குறைந்த கட்டணமே வாங்குகிறார்கள். லேடி ஜெக் மூலம் பாதுகாப்பான பயணம் கிடைத்துள்ளது பெண்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.318d15114b75e2efd73bd9fa83bd6ba0ef140818

பொதுவாக பெருங்கடலின் அடியில் மட்டுமே காணப்படும் பவளப்பாறைகள் சமீபத்தில் அமேசான் ஆற்றின் அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெருத்த நீரோட்டமும் முரட்டு விலங்குகளின் தாயகமான அமேசான் நதியில் நீண்ட பவளப்பாறைகள் இருப்பது அறிவியல் உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அமேசானின் அரிய மூலிகைகள் அனக்கோண்டா அடர்ந்த காடுகள் வரிசையில் அடுத்த மைல்கள் இந்தப் பவளப்பாறை உலகம்.download

எல்லாக் கோயில்களிலும் நாம் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்கிறோம். இதனால் கோயிலின் தூய்மை கெடுவதாகச் சொல்லப்படுகிறது. குஜராத்திலுள்ள சாரங்க்பூர் அனுமான் கோயிலில் இப்பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டுள்ளனர்  ஹனுமன் போன்ற உருவில் அங்கு ஒரு மெஷின் வைத்துள்ளனர். அதன் வாயில் நாம் முழு தேங்காயைப் போட்டால் தேங்காய் இரண்டாக உடைந்து ஒரு பாதி தேங்காய் பிரசாதமாக ஹனுமனின் கையில் வருகிறது. இதனால் கோயிலின் தூய்மையும் காப்பாற்றப்பட்டு நேரமும் மிச்சமாகிறது.Future_ozone_layer_concentrations

ஓசோனில் ஓட்டை விழுவதைப் பற்றி முதன் முதலில் உலகுக்கு விளக்கியவர் ஃபிராஸ் ஷெர்வுட் ரோவ்லாண்ட் என்னும் அமெரிக்க விஞ்ஞானி.  ஓசோன் அடுக்கில் ஒட்டை விழுவதற்கு குளோரோஃபுளூரோ கார்பன்களே காரணம் என்பதை தன் ஆராய்ச்சியின் மூலம் விளக்கி 1995 ஆண்டில் வேதியல் பிரிவுக்கான நோபல் பரிசை இவர் பெற்றார். மாசுக் கட்டுப்பாட்டை நாம் கடை பிடித்தால் மட்டுமே ஓசோனில் மேலும் ஓட்டை விழுவதைத் தவிர்த்து நம் எதிர்கால சந்ததிகளுக்கு வளமான வாழ்வைத் தர முடியும்.active_manuka_honey_new_zealand

 

பொதுவாக உலகெங்கும் தேன்  பலவகை மலர்களிலிருந்து எடுக்கப்பட்டு விற்பனையாகிறது. ஆனால் நியூசிலாந்து நாட்டில் மட்டும் ஒவ்வொரு வகை மலரிலிருந்தும் தேன் தனித்தனியாக சேகரிக்கப்பட்டு அது எந்த மலரிலிருந்து எடுக்கப்பட்டது என்ற பெயருடன் விற்பனை செய்யப்படுகிறது.  இதன் காரணமாகவே நியூசிலாந்து நாட்டுத் தேன் உலகில் பிரபலமானதாகப் போற்றப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s