ஒரு நாள் நான்கு மாவட்டங்கள்

DSC09758

நீண்ட கோடைக்காலத்திற்குப் பின் கடந்த ஒரு மாதமாக ஹைதிராபாத் சற்று குளிர்ந்து காணப்படுகிறது.  இந்த ரம்மியமான தட்பவெப்ப நிலையை பூர்த்தியாக அனுபவிக்க கடந்த சனியன்று நாங்கள் ஒரே நாளில் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த நாலு கோவில்களை தரிசித்து வந்தோம்.  இத்தனைக்கும் நாங்கள் யாத்திரை செய்தது 330 கிமீட்டர்கள் தான்   ஆனால் கண்டு களித்ததோ மிக அற்புதமான பழைய புதிய கோவில்கள்DSC09703

சனியன்று சூரியன் வெளிவராத மேகமூட்டமான காலை 6 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டோம்.  நானும் என் பிள்ளையும் சுமார் அரைமணி நேரம் பயணித்து வழியில் என் பிள்ளையின் நண்பன் விஜய் கிருஷ்ணாவையும் எங்களுடன் அழைத்துக்கொண்டோம்.  முதலில் சுமார் எட்டுமணி அளவில் நாங்கள் மெதக் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பக்த ஆஞ்சனேயரை தரிசித்தோம்.  சுற்றிலும் தோட்டங்களுடன் மிக அழகாக சமீபத்தில் கட்டப்பட்ட கோவில் அது.  சுமார் 20 அடி உள்ள அழகான ஆஜானுபாகனான அனுமன் சிலை காண்பவர் கண்களுக்கு விருந்தாக உள்ளது.  பக்கத்திலேயே கணபதி  லக்ஷ்மி சன்னதிகள் தனித்தனியாக உள்ளன.DSC09740

அதை முடித்துக்கொண்டு கரீம் நகர் மாவட்டத்திலுள்ள வேமுலவாடா என்னும் இடத்திற்கு பயணத்தை மேற்கொண்ட போது  வழியில் சித்திபேட் என்னும் இடத்தில் எங்கள் காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டோம்.  பிறகு சுமார் ஒரு மணி நேரம் பயணித்து 10.30 மணி அளவில் வேமுலவாடா என்ற ஊரை அடைந்தோம்.  இங்கு முதலில் நாங்கள் பார்த்த புராதன கோவில்  ஸ்ரீ பீமேஸ்வர ஆலயம்.  இந்தக் கோயில்  அதிகம் புதுப்பிக்கப்படவில்லை. அந்த நாளில் புராதனத்தை பறை சாற்றுகிறது.  பெரிய பெரிய ராட்சத தூண்கள்.  கருவறையில் பெரிய லிங்கம்.  சுற்றிலும் காடாக வளர்ந்த செடி கொடிகளுடன் பெரிய பிரகாரம். Sri-Raja-Rajeshwara-Temple

இதன் பிறகு நாங்கள் தரிசித்தது ஸ்ரீ ராஜராஜேஸ்வர ஸ்வாமியை.  இவரை ராஜண்ணா என்றும் அழைக்கின்றனர். இங்கு சுவாமி நீல லோகித சிவலிங்கமாக காட்சியளிக்கிறார்.  இதனை தட்சிண காசி என்றும் சொல்கிறார்கள்.  இதன் உள்ளேயே அனந்த பத்ம நாப ஸ்வாமிக்கும் ஒரு தனி சன்னதி உள்ளது.  இதனால் இதை ஹரிஹர க்ஷேத்திரம் என்றும் அழைக்கிறார்கள்.  இதன் உள்ளேயே ஒரு தர்கா இருப்பது ஹிந்து முஸ்லீமின் ஒற்றுமைக்கு சின்னமாக உள்ளது. இந்தக் கோவிலில் சதா சர்வ காலமும் காளைகளை அழைத்து வந்து பிரதட்ணம் செய்கிறார்கள். அவைகள் நந்தி. ரூபத்தில் வணங்கப்படுகின்றன.  இதனால் நாம் பிரதட்ணம் செய்வதற்கும் சுவாமி தரிசனம் செய்வதற்கும் கோவிலின் உள்ளே படிகள் கட்டப்பட்டு தனி வழி அமைத்திருக்கிறார்கள். எல்லா இடத்திலும் மிக நன்றாக தரிசனம் செய்து கொண்டோம்.DSC09838

பிறகு மீண்டும் சித்திபேட் வந்து எங்கள் மதிய உணவை முடித்துக்கொண்டு வாரங்கல் மாவட்டத்திலுள்ள குமரவல்லி என்ற சிற்றூரை நோக்கி பயணமானோம்.  அது சித்திபேட்டிலிருந்து 15 கிமீ தூரத்தில் உள்ளது.  இங்கு மல்லிகார்ஜூன ஸ்வாமி இருக்கிறார்.  இது ஒரு குடைவரை கோயில்  பாறைகளைப் பார்த்தால் இவை ஒன்றின் மேல் ஒன்று எப்படி காலம் காலமாக நின்றுகொண்டிருக்கின்றன என்ற ஆச்சர்யம் எழுகிறது.  இவரை அங்குள்ள மக்கள் குமரவல்லி மல்லன்னா என்று அழைக்கிறார்கள்.  இங்கு லிங்க ரூபம் கிடையாது.  சுமார் 30 படிகள் ஏறிச் சென்றால் தான் கருவறையை அடைய முடியும்   இங்கு மனித ரூபத்தில் மீசையுடன் சிவன் காட்சியளிக்கிறார். இவரின் இருபுறமும் கெத்தம்மா மெடலம்மா என இரு தேவியர் கொலுவிருக்கின்றனர்.  இங்கு சங்கராந்தி சமயத்தில் ஜாத்ரா என்ற உற்சவம் நடக்கிறது.  500 வருடங்கள் புராதனமான கோவில் இது.  தெலுங்கானாவின் முக்கியமான கோவில்களில் இதுவும் ஒன்று.  தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து செல்கிறார்கள்DSC09877

இங்கு மஞ்சள் பொடிதான் பிரதான பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.  தீராத நோய்களையெல்லாம் தீர்க்கும் மருந்தாக அது கருதப்படுகிறது.  திவ்ய தரிசனத்தை முடித்துகொண்டு  ரங்காரெட்டி மானிலத்தில் அமைந்த ரத்னாலயத்தை நோக்கி பயணமானோம். சுமார் ஐந்து மணிக்கு கோவிலை அடைந்தோம்.  இது அழகிய தோட்டங்களுக்கு மத்தியில் அமைந்த பாலாஜி மந்திர்.  இங்கு திருப்பதி வெங்கடாஜலபதியை நினைவூட்டும் வகையில் பாலாஜி தரிசனம் தருகிறார்.  பக்கத்திலேயே தனித்தனியாக  தாயார் ஆண்டாள் சன்னதிகள்.  கொஞ்சம் நடந்து வந்தால் ஹனுமான் மஹாலஷ்மி சன்னதிகள்.  தோட்டம்  நிறைய பூக்கள்.  குழந்தைகள் விளையாட நிறைய சாதனங்கள் என மிக ரம்மியமான சுற்றுசூழல்  அதனை முடித்துக்கொண்டு சுமார் 6.30 மணி அளவில் வீடு வந்து சேர்ந்தோம்.  ஒரே நாளில் சிவதரிசனம்  விஷ்ணு தரிசனம்  சனியன்று அனுமன் தரிசனம் என மிக நன்றாக அமைந்தது எங்கள் அதிர்ஷ்டம் தான்Vemulawada-June-2016

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s