மகாமக குளம்

download

மகாமக குளம் உருவாகக் காரணமாக அமைந்த தலம் கும்பகோணம்  பாணபுரீஸ்வரர் கோயில். கும்பகோணம் பாணரத்துறையில் இந்த கோவில் உள்ளது.

தல வரலாறு

ஒரு முறை உலகம் அழிந்த காலத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அதில் பிரம்மனால் மிதக்க விடப்பட்ட அழுத குடத்தை வேடன் வடிவில் வந்த சிவன் பாணம் தொடுத்த இடம் என்பதால் அந்த இடத்திற்கு பாணரத்துறை எனப்பெயர் ஏற்பட்டது.

இங்கு கோவில் எழுப்பப்பட்டு சிவனுக்கு பாணபுரீஸ்வரர் என்ற பெயர் சூட்டப்பட்டது. சிவன் குடத்தை உடைத்ததும் அதிலிருந்த அழுதம் பெருகி மகாமக குளமாக வடிவெடுத்தது.  சாகர மருந்தான அழுதத்தையே குளமாக்கி தந்த பாணபுரீஸ்வரரை வணங்குபவர்களுக்கு நீண்ட ஆயுளும் அழியாத புகழும் உண்டாகும்.

வியாச லிங்கம்download (1)

வியாச முனிவர் ஒரு முறை நந்திதேவரிடம் சாபம் பெற்றார்/ மஹாவிஷ்ணுவின் ஆலோசனைப்படி பாணபுரீஸ்வரர் கோவிலுக்கு வந்தார். சிவலிங்கம் ஒன்றை அமைத்து வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றார்.  வியாசர் வணங்கியதால் இதற்கு வியாச லிங்கம் என பெயர் ஏற்பட்டது. வங்க தேசத்து அரசனான சூரசேனன் தன் மனைவி காந்திமதிக்கு இருந்த தீராத நோயை போக்குவதற்கு சூத முனிவரின் யோசனைப்படி இங்கு வந்து தங்கி திருப்பணி செய்தான்.  அவளது நோய் தீர்ந்து மகப்பேறும் கிடைத்தது.  இங்கிருக்கும் அம்பிகையை சோமகலாம்பாள் என்பர். இவளை வழிபட்டால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். மகாமகத்தன்று பாணபுரீஸ்வரர் மகாமக குளத்திற்கு எழுந்தருள்வார்.

இருப்பிடம்   கும்பேஸ்வரர் கோவிலில் இருந்து இரண்டு கிமீ தூரம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s