ஆஹா ஆலயம்

T_500_910

ஸ்ரீ வைகுண்டம் ஆலயத்தின் உற்சவர் வைகுண்ட நாதரின் திருமேனியை உருவாக்கும்போது அந்த சிற்பியே சிலையின் அழகில் மயங்கி கன்னத்தைச் செல்லமாகக் கிள்ள அதை அன்பின் அடையாளமாய் பெருமாள் ஏற்றுக்கொண்டதாய் இன்றும் அந்த வடுவை சிலையின் கன்னத்தில் காணலாம்.TN_20140515122615598961

விழுப்புரம் மாவட்டத்தில் மேல் மலையனூர் செல்லும் செஞ்சி சேத்பட் சாலையில் உள்ளது செல்லப்பிராட்டி கிராமம். இங்கு முப்பெரும் தேவியரான பார்வதி லக்ஷ்மி சரஸ்வதி மூன்று தெய்வங்களும் ஒரே சக்தியாக இணைந்து லலிதா செல்வாம்பிகையாக அருள்பாலிக்கிறார். ஒரே விக்ரகத்தில் மூன்று தேவியரின் அம்சங்களையும் காணலாம். ரிஷ்யசிருங்க முனிவர் இக்கோயிலைத் தோற்றுவித்து வழிபாடு செய்துள்ளார். 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஆலயம் இது என்கிறார்கள். பூஜாட்சர எழுத்துக்கல் குறிக்கப்பட்ட ஒரு சிலை இங்கு உள்ளது.download (1)

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் என்ற ஊரில் குழந்தை வேலப்பர் என்ற முருகன் குடி கொண்டிருக்கிறார்.  குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டி இவரை பிரார்த்திப்பார்கள். வேண்டுதல் நிறைவேறினால் சாக்லெட்டினால் மாலை கட்டி போடுவார்கள். இவரை சாக்லெட் முருகன் என்றே அழைக்கிறார்கள். முருகனுக்கு உகந்த நாளான தைப்பூசம்  பங்குனி உத்திரம் வைகாசி விசாகம் நாட்களில் கோவில் முழுவதும் சாக்லெட்டினாலேயே அலங்கரிப்பார்கள். அதற்கு அருகிலேயே சிறிய குன்றின் மேல் தண்டாயுதபாணி முருகன் குடிகொண்டிருக்கிறார்.Wadapally Lakshmi Narasimhar

கருவறையில் நரசிம்மர் விடும் மூச்சுக் காற்றால் தீபம் அசைகிறது. இந்த அதிசய நாசிம்மர்  நலகொண்டா மாவட்டம் வாடபல்லியில் அருள்பாலிக்கிறார். இந்த அதிசயம் இன்றும் நடைபெறுகிறது. விளக்கை நரசிம்மன் மூக்கின் அருகில் ஏற்றிப் பிடிக்க தீபம் அசைகிறது. அதே நேரத்தில் சுவாமியின் பாதத்தில் உள்ள தீபம் அசையாமல் நேராக எரிகிறது. நலகொண்டா குண்டூர் மாவட்ட மக்கள் இந்த மூச்சுவிடும் நரசிம்மரை வணங்கிய பிறகே மற்ற கோயில்களுக்குச் செல்வதை ஜதீகமாகக் கொண்டுள்ளனர்/download

கோயமுத்தூர் மாவட்டத்தில் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது மேலை சிதம்பரம் என்னும் திருப்பேரூர் பச்சை நாயகி அம்மன் உடனமர் பட்டீஸ்வரர் திருக்கோயில். இங்குள்ள இறவாப்பனையும் பிறவாப்புளி யும் புகழ்பெற்றவை. வட கைலாயம் திருக்கோவிலில் உள்ள பனைமரம் என்று தோன்றியதென்பது தெரியாது. இன்றளவும் நிமிர்ந்து  நின்று இறவாப்பனை என்ற புகழ்பெற்றுள்ளது கோயிலின் முன்புறம் உள்ள புளிய மரத்தின் விதைகல் மீண்டும் முளைப்பதில்லை  எனவே பிறவாப்புளி என்ற சிறப்புப் பெற்றுள்ளது.chidambaram-

சிதம்பரம் நடராஜர் கோவில் மிகப்பழமையான கோயிலாகும். இது மனித உடலுறுப்பைக் குறிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரத்துடன் வேயப்பட்டுள்ள தங்க ஓடுகள் 21 ஆயிரத்து 600   இது மனிதன் ஒரு நாளைய சுவாசத்தின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. இங்கு பயன்படுத்தியுள்ள ஆணிகளின் எண்ணிக்கை 72 ஆயிரமாகும். இது மனிதனின் நாடி நரம்பின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. 9 வாசல்கள் மனித உடலிலுள்ள 9 துவாரங்களைக் குறிக்கிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s