கனவில் வந்த பாம்பு

ST_20160315123525868273

வீர நரசிம்ம கஜபதி என்னும் விஜய நகர் மன்னன் ராமேஸ்வரத்துக்கு யாத்திரை புறப்பட்டான். வரும் வழியில் திருப்பதி பெருமாளை தரிசிக்க மலையேறினான்.  ஏழுமலையானை தரிசித்த அவன் அங்கு கோபுரம் ஒன்றைக் கட்ட உத்தரவிட்டான்.  ராமேஸ்வரம் யாத்திரையை முடித்துவிட்டு மீண்டும் திருப்பதி வந்தான். அப்போது கோபுரம் கட்டும் பணி நடந்துகொண்டிருந்தது. அன்றிரவு பெருமாளை தரிசித்த அவன் மலையிலேயே தங்கினான். அவன் கனவில் பாம்பு வடிவில் ஆதிசேஷன் தோன்றி  மன்னா என் உடம்பே இந்த மலையாக இருக்கிறது. இதில் கோபுரம் கட்டினால் ஏற்படும் பாரத்தை என்னால் தாங்க முடியாது என்று சொல்லிவிட்டு கருவறைக்குச் சென்று ஏழுமலியானின் வலக்கையில் சுற்றிக்கொண்டது.

பதறி எழுந்த மன்னன் பண்டிதர்களை அழைத்து கனவு பற்றி கேட்டான். அவர்கள் மன்னா கோபுரப் பணியை இப்போதே  நிறுத்தி விடுவோம். ஆதிசேஷனை அமைதிப்படுத்தும் விதத்தில் பரிகாரமாக தங்க நாகாபரணம் ஒன்றை செய்து பெருமாளுக்கு அணிந்து விடுவோம் என்றனர்.  வீர நரசிம்ம கஜபதி அளித்த நாகாபரணமே இன்றும் ஏழுமலையானின் வலக்கைக்கு அழகு சேர்க்கிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s