ஊசி கூட உடன் வராது

ST_20160224142010052162

பல ஊர்களுக்கு யாத்திரை சென்ற குருநானக் ஒரு ஊரில் தங்கினார்.  அவ்வூர் பணக்காரர் ஒருவர் குருநானக்கை தன் வீட்டிற்கு விருந்து சாப்பிட அழைத்தார்.  “ இந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் நான் தான். நினைத்தை சாதிக்கும் பலம் என்னிடம் இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் கேளுங்கள் “ என்று பெருமையுடன் தன்னை அறிமுகப்படுத்தினார்.

சற்று யோசித்த குருநானக் “ ரொம்ப நல்லது. அப்படியானால் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே ‘ என்று கேட்டார்.  “ என்ன சுவாமி  எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள். செய்ய வந்திருக்கிறேன் “ என்றார் பணக்காரர்.

தன் பையில் இருந்து ஊசி ஒன்றை எடுத்த குருநானக் அதைப் பணக்காரரிடம் நீட்டினார். “ இந்த பழைய ஊசியைக் கொண்டு நான் என்ன செய்யவேண்டும் சுவாமி “ என்றான் பணக்காரன். “ இதைப் பத்திரமாக வைத்திருங்கள். நாம் இருவரும் மேலுலகத்தில் சந்திக்கும்போது திருப்பிக் கொடுத்தால் போதும் என்றார் குருநானக்.

“ இறந்த பிறகு இந்த ஊசியை எப்படி கொண்டு வரமுடியும் ‘ என்று கேட்டார் பணக்காரர்.  அவரைப் பார்த்து சிரித்த குரு நானக் ‘ இந்த உலகை விட்டுப் போனால் சிறு ஊசியைக் கூட கொண்டு போக முடியாது என்று நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள். ஆனால் நினைத்ததை சாதிக்கும் வலிமை இருப்பதாக தற்பெருமை பேசுகிறீர்களே……………………. ஒருவன் செய்த நன்மை தீமை மட்டுமே இறந்த பிறகு கூட வரும். செல்வத்தால் யாரும் கர்வப்பட தேவையில்லை. அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள் அதுதான் உண்மையான மகிழ்ச்சி தரும் ‘ என்று அறிவுரை கூறினார்.  பணக்காரரும் அவரது உபதேசத்தை ஏற்று தானம் செய்ய ஆரம்பித்து விட்டார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s