நியூ[ஸ்]மார்ட்

KING_DUTUGEMUNU_(161_BC_–_137_BC)

3500 ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைய எகிப்தை ஆண்ட டுடாங்கமுன் என்னும் அரசர் உபயோகித்த கத்தி ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தபோது சூரியக் குடும்பத்தில் உள்ள பழம்பெரும் பொருட்களுள் ஒன்றான இரும்பு விண்கல்லால் ஆன கத்தி அது என்று தெரிவித்துள்ளனர். இத்தாலி மற்றும் எகிப்திய விஞ்ஞானிகள் மேம்படுத்தப்பட்ட எக்ஸ்ரே ஆய்வைக் கொண்டு இந்த அரசரின் கத்தியின் வெட்டுப்பகுதி பெரும்பாலும் இரும்பு மற்றும் சிறிய அளவு நிக்கல் கோபால்ட் ஆகியவற்றால் ஆனவை என்றும் எனவே இந்தக் கலவை விண்கல்லிலிருந்து கிடைத்திருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.ar-rahman-dc-0306_0_0_0_0

சர்வதேச அளவில் இசைத் துறையில் சாதித்ததற்காக இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு ஜப்பான் நாட்டின் ஃபுக்குவோகா பரிசு கிடைத்துள்ளது. இது ஆசியக் கண்டத்தில் கல்வித்துறை காலி அல்லது கலாச்சாரம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஃபுக்குவோகா நகரம் மற்றும் ஒரு புகழ்பெற்ற அமைப்பின் சார்பில் கிராண்ட் ப்ரைஸ் வழங்கப்படுகிறது.FOREST_jpg_839f

கேரள வனப்பகுதிகளில் விலங்குகள் வேட்டையாடப் படுவது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க ஆளில்லா குட்டி விமானங்களைக் கண்காணிப்பில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளனர். அண்மையில் வயநாடு மாவட்டத்தில் உள்ள முதுங்கா காட்டில் இதற்கான சோதனை வெற்றிகரமாக நடந்தது. சாதாரண கேமராக்கள் வைத்துள்ளனர்.  இதன் மூலம் காடுகளுக்குள் வனவிலங்குகளின் நடமாட்டம் மனித நடமாட்டம் இவற்றைத் துல்லியமாக கண்காணிக்க முடியும். பெங்களூரில் உள்ள நேஷனல் மைக்ரோ ஏரியல்  வெகிகிள்ஸ் திட்ட அதிகாரிகள் மற்றும் நேஷனல் ஏரோஸ்பேஸ் லேபாரட்டரீஸ் அதிகாரிகளும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தினர்.800x480_IMAGE53774830

இதுவரை ரயில் பயணத்தில் அவசர உதவி தேவைப்படும்போது பெண்கள் ரயில்வேயின் உதவி எண்களைத் தொடர்பு கொண்டோ எஸ் எம் எஸ் அனுப்பியோ அல்லது அபாயச் சங்கிலியை இழுத்தோ தகவல் தெரிவிக்க வேண்டியிருக்கும். இப்போது பேனிக் பட்டன் என்னும் புஷ் பட்டன் வசதியை மத்திய ரயில்வே அறிமுகப்படுத்தி மும்பையில் புற நகர் ரயில்களில் வெற்றிகண்டுள்ளது. இனி இந்தியா முழுவதும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர உள்ளது. அபாயச் சங்கிலிக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ள இதை அழுத்தினால் உடனடியாக ரயில் பெட்டியின் வெளிப்புறத்தில் இருக்கும் பிளாஷ் விளக்கு எரிந்து அபாயச்சத்தத்துடன் சமிக்ஞை தெரிவித்துவிடும்.  இதன் மூலம் பிளாட்பாரத்தில் உள்ள சக பயணிகள் மற்றும் அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்க இயலும்.52477319

சிங்கப்பூரின் தேசிய புத்தக வளர்ச்சிக்குழுவும் ஆசிய ஸ்காலஸ்டிக் அமைப்பும் இணைந்து  ஆண்டுதோறும் சிறந்த புத்தகங்களுக்கு ஆசிய மேதைமை புத்தக விருது [  சபா  SCHOLASTIC ASIAN BOOK AWARD ] வழங்கி வருகிறது. கடந்த ஆண்டுக்கான விருதுக்கு இந்திய பெண் எழுத்தாளரான அதிதி கிருஷ்ணகுமார் எழுதிய சிந்து இழந்த புதையல்   [THE LOST TREASURE OF THE INDUS ]  என்ற கையெழுத்து பிரதி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.  இதில் இந்திய வரலாறு பற்றிய செய்திகளை ஆர்வத்தோடு வழங்கியிருக்கிறார்.ice-cream-600x450

தேங்காய்ப்பால் தேங்காய் க்ரீம் தேங்காய் தூள் தேங்காய் கரி கலந்த மிகச் சுவையான கறுப்பு ஐஸ்க்ரீம் நியூயார்க்கில் விற்பனைக்கு வந்திருக்கிறது. தேங்காயின் சாம்பலை ஐஸ்க்ரீமுக்குள் கலந்ததில் சுவையும் கறுப்பு நிறமும் கிடைத்தன.  தேங்காய் ஓடுகளை எரித்து அதிலிருந்து கிடைக்கும் சாம்பலைப் பயன்படுத்துகிறார்கள். தேங்காய்ச் சாம்பல் உடலுக்கும் நல்லது வித்தியாசமான சுவையாகவும் இருக்கிறது.  பார்க்கவும் கண்களைக் கவர்கிறது.  ஒரு தேங்காய் சாம்பல் ஐஸ்க்ரீம் கோன் 470 ரூபாய். என்கிறார் இதன் உரிமையாளர். காபி சாக்லேட் ஐஸ்க்ரீம்களை விட சுவையாய் இருக்கிறதாம் இந்த கறுப்பு நிற ஐஸ்க்ரீம்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s