ஆஹா தகவல்

download (2)

தாய்லாந்து நாட்டு மக்கள் பிறந்த  நாளை வித்தியாசமான முறையில் கொண்டாடுகிறார்கள். ஒன்பது என்ற எண்ணை அவர்கள் அதிர்ஷ்டமானதாகக் கருதுகிறார்கள். பிறந்த நாள் அன்று ஒன்பது பௌத்த துறவிகளை விருந்திற்கு அழைத்து ஒன்பது வகையான உணவும் பானமும் அவர்களுக்குப் பரிமாறுகின்றனர்.  பிறகு துறவிகளிடம் வாழ்த்துப் பெறுகிறார்கள்.10850290-a-gr

பெர்சியப் படைக்கும் கிரேக்கப் படைக்கும் கி மு 490ம் ஆண்டில் போர் நடைபெற்றது. அந்தப் போரில் கிரேக்கம் வென்றது.  இச்செய்தியை மன்னரிடம் தெரிவிப்பதற்காக கிரேக்க வ்ஈரர் ஒருவன் மாரத்தான் என்ற இடத்தில் இருந்து ஏதென்ஸ் வரை எங்குமே நிற்காமல் ஓடி வந்து செய்தியை தெரிவித்தார். அவர் மேற்கொண்ட பயணத்தைக் குறிக்கும் வரையில் வந்ததுதான் மாரத்தான்.Thirumalai-Nayaka-Palace

மதுரையில் திருமலை நாயக்கர் மஹாலின் கம்பீரமாக உருண்டு திரண்டு நிற்கும் தூண்களின் எண்ணிக்கை 248.  ஒவ்வொரு தூணும் ஏறத்தாழ 5 மீட்டர் சுற்றளவும் 4.5 மீட்டர் முதல் 9 மீட்டர் வரை உயரமும் உடையவை. இந்தியாவிலுள்ள வேறெந்த பழங்காலக் கட்டத்திலும் இத்தனை பருமனும் உயரமும் கொண்ட தூண்கள் கிடையாது.  இந்த்க் கட்டடத்தின் இன்னொரு வியப்புக்குரிய செய்தி என்ன தெரியுமா/  இரும்போ மரமோ மஹாலின் எந்தப் பகுதியிலும் அறவே பயன்படுத்தப்படவே இல்லை.fff

ஆந்திராவில் கம்மம் என்ற ஊரில் மனைவியுடன் ஹனுமானை நாம் தரிசிக்கலாம். ஹனுமனின் குருவான சூரியனின் பெண்ணான சுவர்ச்சலாவுடன் காணலாம். குருவான சூரியன் ஹனுமனுக்கு 9 பாடங்கள் உபதேசம் செய்தார். ஹனுமன் ஐந்து பாடங்களில் தேர்ச்சி பெற்றார் மீதி 4 பாடங்களை திருமணம் ஆனவருக்குத்தான் உபதேசிக்கலாம் என்ற நியதி. எனவே குருவான சூரியனே தபஸ்வியான தன் மகளை ஹனுமனுக்கு மணம் முடித்து வைத்தார் ஆனால் சுவர்ச்சலா மறுகணமே தவம் செய்ய சென்றுவிட்டார். ஹனுமனோ மீதி 4 பாடங்கலையும் முழுமையாக உபதேசம் பெற்று சக்தி பெற்றார்.download (1)

சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் இடம்பெற்ற குழந்தைகள் காலணி எல்லோரையும் கார்ந்தது. இந்தக் காலணிய்ல் QR BARCODE பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காலணியில் குழந்தைகளின் பெற்றோர்கள் பற்றிய விவரம் முகவரி எல்லாம் பதிவாகி இருக்கும். குழந்தைகள் காணாமல் போனால் இதன் மூலம் பெற்றோர்களே குழந்தைகளை எளிதில் கண்டு பிடித்து விடலாம்2000px-1931_Flag_of_India.svg

கொல்கத்தாவில் பார்சி பகன் சதுக்கம் என்னும் பூங்கா உள்ளது. இங்குதான் நம் தேசியக்கொடி முதல் முறையாக   ஏற்றப்பட்டது.  1906 ம் ஆண்டில் நம் தேசியக்கொடியை இங்கு ஏற்றியவர் சுரேந்திர நாத் பானர்ஜி. அப்போது தேசியக்கொடியில் ஏழு தாமரை மலர்கள் இடம் பெற்றன. அசோக சக்கரத்துக்குப் பதிலாக சர்க்கா  [இராட்டினம்] இருந்தது.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s