ஆஹா ஆலயம்

1

கும்பகோணம் காரைக்கால் செல்லும் வழியில் எஸ் புதூரிலிருந்து தெற்கே 5 கிமீ தொலைவில் கோனேரி ராஜபுரம் உள்ளது. இங்கு அருள்மிகு அங்கவள நாயகி உடனுறை அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. ஸ்ரீ உமா மகேஸ்வரர் மேற்கு நோக்கியும் அம்பாள் கிழக்கு நோக்கியும் எதிரெதிரே அமைந்து மாலை மாற்றிக்கொள்ளும் பாவனை மிகச் சிறப்புடையது. இங்கு மிகப் பெரிய ஐம்பொன் நடராஜர் சிலை உள்ளது. ஸ்ரீ நடராஜர் திருமேனியின் கால் பாகத்தில் சிறிய தழும்பும் அக்குளில் ரோமமும் நரம்பும் இருப்பது விசேஷமாகக் கருதப்படுகிறது.2

திருவள்ளூர் பூங்கா நகரில் சிவா விஷ்ணு ஆலயம் உள்ளது. இங்கு ஜல நாராயண சிலை நீரின் மேல் அமையப் பெற்றுள்ளது. இந்தியாவில் ஒடிஸாவை தவிர வேறு எங்கும் இந்த அமைப்பு இல்லையாம். மாதா மாதம் ஏகாதசியன்று விசேஷ வழிபாடு நடைபெறும். அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.3

சென்னை கடற்கரை  தாம்பரம் ரயில் மார்க்கத்தில் பழவந்தாங்கல் ஸ்டேஷன் அருகே ஸ்ரீ சத்ய நாராயண பெருமாள் கோயில் உள்ளது. சாதாரணமாகப் பெருமாள் கோயில்களில் நவக்கிரஹ சன்னதி இருக்கிறது.  ஆனால் இங்கு நவக்கிரஹங்கள் ஒரே வரிசையில் இருப்பதுடன் ராகு கேது இரு கிரஹங்களுக்கு இடையே மற்ற ஏழு கிரஹங்களும் இருப்பது விசேஷம்.  ஜாதகத்தில் ராகு கேது கட்டங்களுக்கு இடையே ஏனைய கிரஹங்கள் அமைந்தால் அது காலசர்ப்ப தோஷ ஜாதகம் எனப்படும்.  அவ்வாறு அமையப் பெற்றவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து தோஷ நிவர்த்தி பெறுவதாகக் கூறப்படுகிறது.FB_IMG_1450597226086-756445

திருநெல்வேலியில் உள்ள அத்ரிமலையில் அத்ரி பரமேஸ்வர ஆலயம் உள்ளது.  இந்த ஆலயத்தில் உள்ள ருத்ர வினாயகர் சன்னதிக்குப் பின்புறம் அம்ருதவர்ஷிணி மரம் ஒன்று உள்ளது. சித்திரை மாதம் முழுவதும் இம்மரத்தின் எல்லாக் கிளைகளிலிருந்தும் பன்னீர் துளிகள் போல நீர் தெளிக்கும். அற்புதக் காட்சியைக் காணலாம். இக்கோயிலில் மேற்கு நோக்கியே ஆரத்தி காட்டுவர் என்பது குறிப்பிடத்தக்கது.mysore chamundeswari

மைசூர் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி தேவி கோயிலில் தீபாராதனை நேரங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் சன்னதிக்கு வந்து மரியாதை செலுத்துவர். வேறு எந்தக் கோயிலிலும் இந்த வழக்கம் இல்லை. கடந்த 250 வருடங்களாக இந்த மரபு தொடர்கிறது. கோயிலில் பாதுகாப்புக்காக ஐந்து போலீஸ்காரர்கள் இருக்கிறார்கள். இது தவிர சண்டி ஹோமம் நடக்கும்போதும் தசரா சமயத்திலும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு 21 முறை குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்படுகிறது.Image12

காஞ்சிபுரத்திலிருந்து தென்மேற்கே 7 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது அய்யங்கார் குளம்.  இத்திருத்தலத்தில் சஞ்சீவிராயர் சுவாமி கோயிலை ஒட்டியுள்ள குளத்தின் அருகே நடவாவிகிணறு உள்ளது.  இந்தக் கிணற்றின் உள் படிக்கட்டுகளின் வழியாகக் கீழே சென்றால் சிற்ப வேலைகள் நிறைந்த 16 கால் மண்டபத்தைக் காணலாம். கிணற்றில் உள்ள தண்ணீரை சித்ரா பௌர்ணமி அன்று வெளியேற்றி விடுவார்கள். அன்று மாலை காஞ்சி வரதராஜப் பெருமாளை 16 கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்வார்கள். இங்கு சுவாமியைத் தரிசிக்கலாம். பின் கிணற்றில் ஊற்றுப் பெருக்கெடுத்து கிணற்றையும் மண்டபத்தையும் நிரப்பிவிடும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s