அவரிடம் தப்ப முடியுமா?

download

கர்னாடகாவில் வியாசராஜர் என்ற மஹான் இருந்தார். ஒரு முறை பக்தர் ஒருவர் அவரிடம் ஆசி பெற வந்தார். வியாசராஜருக்கு ஒரு தார் வாழைப்பழம் கொடுத்துவிட்டு புறப்பட்டார். அவற்றை சீடர்களுக்கு வழங்கிய வியாசராஜர் “ சீடர்களே…….. இந்த பழத்தை யார் கண்ணிலும் படாமல் மறைவான இடத்தில் இருந்து சாப்பிடுங்கள் ‘ என்றார்.

எதற்காக குரு இப்படி சொல்கிறார் என புரிந்து கொள்ளாத சீடர்கல் ச்வர் மரம் என ஆளுக்கொரு மறைவிடம் நோக்கி ஓடினர். கனகதாசர் என்ற சீடர் மட்டும் குரு நாதர் முன் தயங்கியபடி நின்றார்.

வியாசராஜர் ‘ கனகதாசா ஏன் இங்கேயே நிற்கிறாய்? ஏதாவது மறைவிடம் பார்த்து ஓடு “ என்று கட்டளையிட்டார். “ குர் நாதரே மனிதர்களின் கண்ணில் படாமல் வேண்டுமானால் என்னால் ஒளிய முடியும். ஆனால் கடவுளின் பார்வையில் இருந்து என்னால் தப்ப முடியாதே/ நான் இந்தப் பழத்தை  சாப்பிடுவதை அவர் பார்க்கத்தானே செய்வார்” என்றார் கனகதாசர் பணிவுடன்.200px-Kanakadasa_art

இந்த அறிவு பூர்வமான கேள்வியைக் கேட்ட வியாசராஜர் மனம் நெகிழ்ந்தார். “ கனகதாசா……….. கடவுள் எங்கும் நிறைந்திருப்பதை நீ உணர்ந்து விட்டாய்  உனக்கு அவரின் அருள் பூரணமாக கிடைக்கும்” என வாழ்த்தினார்.

கனகதாசர் என்னும் இந்த சீடர் பின்னாளில் கன்னட மொழியில் பக்தி கீர்த்தனைகள் பாடி புகழ் பெற்றார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s