நியூ[ஸ்]மார்ட்

ISRO-Recruitment-2016-logo-govt-jobs

இஸ்ரோவின் இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் வெற்றிகரமான சாதனை நிகழ்த்தியிருக்கிறார்கள்   . இந்தியத் தொழில் நுட்பத்தில் தயாரான முதல் விண்வெளி ஓடம் ‘ ஆர் எல் வி டி டி ‘ வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதன் மூலம் நம் நாட்டின் பெருமை உலகளவில் உயர்ந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 70 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்புவதற்கான சாத்தியம்  இதனால் ஏற்பட்டுள்ளது. பொதுவாக விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகள் செயற்கைக் கோள்களை விண்ணில் நிலை நிறுத்தியபிறகு வெடித்துச் சிதறிவிடும். ஆனால் இப்போது தயாரிக்கப்பட்டுள்ள விண்வெளி ஓடம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திவிட்டு மீண்டும் பூமிக்குப் பத்திரமாகத் திரும்பி வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதை சுமார் 10 முறை விண்ணில் ஏவ முடியும்..download

பருவ நிலை மாற்றம் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் லண்டனைச் சேர்ந்த கிறிஸ்டியன் எய்டு என்ற தன்னார்வ அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பெருவெள்ள ஆபத்து நிறைந்த 10 நாடுகளைப் பட்டியலிட்டுள்ளது. அந்த வரிசையில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. வங்கதேசம் இந்தோனேஷியா ஆகிய நாடுகளும் உள்ளன். இந்த நாடுகளில் வரும் 2060 ம் ஆண்டுக்குள் 100 கோடி பேர் வரை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.download (1)

சென்னை பெண் ரேவதி பாலகிருஷ்ணன் இவர் அமெரிக்காவில் பணிபுரியும் ஒரு ஆசிரியை.  சமீபத்தில் டெக்ஸாஸ் எலிமென்டரி டீச்சர் ஆஃப் தி இயர் [ Texas Elementary Teacher of the year ] என்ற கௌரவத்தைப் பெற்றிருக்கிறார். லிபர்டி மியூச்சுவலில் 12 ஆண்டுகளாக சிஸ்டம் அனலிஸ்ட் ஆக பணிபுரிந்த பின் அந்த வேலையை விட்டு விட்டு ஆசிரியை ஆனார்.  மாணவர்களுக்குப் பாடம் சொல்லித்தருவதில் இவரது வித்தியாசமான அணுகுமுறை வெற்றி பெற்றிருக்கிறது.  குறிப்பாக மாறுபட்ட திறமை கொண்ட குழந்தைகளுக்கு இவர் பாடம் நடத்தும் முறை சிறந்த கல்வியாளராக இவரை அறிய வைத்திருக்கிறது.  இதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் வெள்ளை மாளிகையில் பாராட்டுப் பெற்றுள்ளார் இவர்.343BF57D00000578-0-image-m-36_1463398681380

மொழிபெயர்ப்பு துறையில் ஒரு மிகப் பெரிய சாதனை கண்டுபிடிப்பு பைலட் என்ற சிறிய கருவி. காதுகளில் பொருத்திக்கொண்டால் உலகின் பல மொழிகளையும் மொழிபெயர்க்கும் தொழில் நுட்பம் கொண்ட இந்த மிகச் சிறிய கருவியை நியூயார்க்கை சேர்ந்த வேவர்லி நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. இதில் மூன்று பாகங்கள் உண்டு. தற்சமயம் ஆங்கிலம் ஸ்பானிஷ் பிரெஞ்சு இத்தாலிய மொழிகளை மொழிபெயர்த்து சொல்கிறது. பைலட்டை வாங்கியபின் உங்கள் ஸ்மார்ட் போனில் அப்ளிகேஷனை டவுன் லோட் செய்து கொள்ள வேண்டும். நாம் பேசப் பேச சற்று நேரத்தில் எந்த மொழியில் கேட்கிறோமோ அது ஒலி வடிவில் வெளிவருகிறது.  தற்போது ஆங்கிலம் ஸ்பானிஷ் பிரெஞ்சு இத்தாலிய மொழிகளை மொழி பெயர்க்கிறது பைலட். ஹிந்தி அரபிக் உள்ளிட்ட மேலும் சில மொழிகளை விரைவில் பைலட் மொழி பெயர்ப்பில் கேட்க முடியுமாம். download (2)

சமீபத்தில் நிலவின் விளிம்புப் பகுதிகளை ஆராய்ச்சி செய்யும்போது 200 அடி உயரத்தில் சில கோபுரங்கல் இருப்பது புகைப்படங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேற்று கிரகவாசிகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் ஒரு குழு  இது போன்ற கோபுரங்களைத் திடீரென்று உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை என்கிறார்கள். நிலவில் வேற்றுகிரகவாசிகள் வசிக்கலாம் என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இதற்கு முன் நாசா வெளியிட்ட புகைப்படங்கள் அளவுக்கு இந்தப் புகைப்படங்கள் தெளிவாக இல்லையென்றாலும் கோபுரம் இருப்பது தெளிவாக தெரிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s