வேப்பமரம்

download

இந்து மதத்தில் தெய்வங்கள் தாவரங்கள் நீர் என மூன்றும் பெரிதும் போற்றப்படுகின்றன. இதனை மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாகத் தொடங்கியோர்க்கு ஒரு வார்த்தை சொல்ல சற்குருவும் வாய்க்கும் பராபரமே என்று தாயுமானவர் பாடியிருக்கிறார். மனித வாழ்க்கைக்குத் தெய்வங்களின் துணையும் தாவரங்களின் உதவியும் நீரின் பயனும் மிகவும் இன்றியமையாதவை. நம் முன்னோர்கள் நாயன்மார்கள் இவற்றைச் சிறப்பித்து திருமுறைப் பாடல்களில் பாடியுள்ளார். தாவர வகைகளில் ஒவ்வொன்றும் சிறப்பினைப் பெற்றுள்ளது.  அவற்றில் வேப்பமரம் மிக அதிகமான மருத்துவப் பயன் கொண்டது.

வேப்ப மரம் மனிதனின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு உதவுகிறது.  மனிதனுக்குத் தேவையான மூச்சுக்காற்றை அதிக அளவில் வெளியிடுகிறது. மனிதன் விடும் கார்பன்டை ஆக்ஸைடை உள்வாங்கிக் கொள்கிறது.  விவசாய நிலங்களில் பயிரின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் இலைக் குருத்துப் புழுவைக் கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் கலந்த தெளிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. மக்கள் தேக நலன் சார்ந்து தோல் நோய் வராமல் தடுக்க வேப்ப இலைகளில் இருந்து கிடைக்கும் கசப்புத்தன்மையைக் கொண்டு குளியல் சோப்பு தயாரிக்கப்படுகிறது. வேப்பிலையைத் தண்ணீரில் ஊறவைத்து அதன் கசப்புத் தன்மை இறங்கிய நீரைப் பருகினால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். அறுசுவை உணவில் கசப்புத் தன்மை உள்ள வேப்பிலை வேப்பம்பூ சேர்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழ் வருடப்பிறப்பன்ரு வீடுகளில் வேப்பம்பூ ரசம் முக்கிய உணவாகச் சேர்க்கப்படுகிறது.Neem-tree

இந்தியாவின் பூர்விகத் தாவரமான வேப்ப மரத்தின் மிக அதிகமான நற்பயன்களை அறிந்து கொண்ட அமெரிக்க நாடானது வேப்பமரத்துக்கான காப்புரிமைக் குறியீட்டைப் பெற முயன்றது. தொடர் தீவிர முயற்சிகளின் காரணமாக இந்தியாவின் காப்புரிமைக் குறியீடாக வேப்பமரம் நிலைத்துவிட்டது. சில இடங்களில் அரச மரம்  வேப்பமரம் இணைந்து வளர்ந்திருந்தால் அவற்றுக்கு திருமணம் செய்து வைக்கும் வழக்கமும் இருந்து வருகிறது. அதனடியில் வினாயகர் சிலையும் நாகர் சிலையும் வைத்து வழிபடும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. வேப்ப மரமானது பெண் தெய்வமாகவே போற்றப்படுகிறது. அதனை மாரியம்மனாக வழிபடுகிறோம். மாரி என்றால் மழை என்றும் குளிர்ச்சி என்றும் பொருள் ஆகும். உடல்சூட்டைத் தணிக்க வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s