தெலுங்கானா மானில விழா

 

TelanganaDayFlagஆந்திர பிரதேச மாநிலத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு உட்பட்ட 10 மாவட்டங்களை பிரித்து கடந்த 2014–ம் ஆண்டு ஜூன் 2–ந்தேதி ‘தெலுங்கானா’ என்ற தனிமாநிலம் உருவாக்கப்பட்டது. இந்த மாநிலத்தின் முதலாவது முதல்–மந்திரியாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித்தலைவர் கே.சந்திரசேகர் ராவ் பதவியேற்றார்.Telangana-Formation-day-Celebrations-2016-Photos

தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டு 2 ஆண்டு நிறைவு தினம் ஜூன் இரண்டாம் தேதி  மாநிலம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தெருக்கள், கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள் என அனைத்து கட்டிடங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. தலைநகர் ஐதராபாத் விழாக்கோலம் பூண்டிருந்தது.

மிகப்பெரிய தேசியக்கொடிWP_20160605_015

ஐதராபாத்தில் முதல்–மந்திரி சந்திரசேகர் ராவ் தொடங்கி வைத்தார். பின்னர் உசேன்சாகர் ஏரிக்கரையில் அமைந்துள்ள சஞ்சீவையா பூங்காவில் மிகப்பெரிய தேசியக்கொடியை அவர் ஏற்றி வைத்தார். 291 அடி உயர கம்பத்தில் ஏற்றப்பட்ட இந்த ராட்சத கொடி 108 அடி நீளமும், 72 அடி அகலமும் கொண்டதாக இருந்தது. கொடிக்கம்ப உயரத்தின் அடிப்படையில் இந்த கொடி இந்திய அளவில் 2–வது இடத்தை பிடித்துள்ளது.WP_20160605_022

இந்த வைபவத்தைக் காண நானும் என் பிள்ளையும் சென்றோம்.  உசேன் சாகர் முழுவதும் ஒளிவெள்ளத்தில் மூழ்கி பகலாகவே காட்சியளித்தது என்றால் மிகையாகாது.   பட்டொளிவீசி பறக்கும் தேசியக் கொடியை பார்த்தபோது இனம் காண இயலாத நாட்டுப்பற்று மிகுதியில்  நானும் ஓர் இந்தியன் என்ற பெருமிதம் ஏற்பட்டது.Telangana-300x262

பின் குறிப்பு   இத்தினத்தில் தான் 62 வருடங்கள் முன்பு ஒரு மாமேதை அவதரித்தார். அது வேறு யாருமல்ல நான் தான். நான் மட்டுமே இதுவரை கொண்டாடிக்கொண்டிருந்த பிறந்த நாளை இரண்டு வருடமாக தெலுங்கானா முழுவதும் கொண்டாடுவது பற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s