ஆஹா தகவல்

f4d901460a9b1b5af5177a00fcfb3dd5

கலிபோர்னியாவில் பல பகுதிகளில் சிசோய்யா என்ற வகை மரங்கள் 300 அடி உயரமும் 100 அடி சுற்றளவும் கொண்டவைகளாக இருக்கின்றன. இந்த பிரம்மாண்ட மரங்கள் மிகச் சிறிய விதைகளிலிருந்துதான் உருவாகின்றன. ஆனால் அந்த மரங்கள் முழு வளர்ச்சி அடையும்போது 2,50,0000000 மடங்கு எடையை அடைந்து விடுகின்றனவாம்.-முள்ளி-e1419976468583

நீர்  நிலைகளின் அருகில் காணப்படும் நீர் முள்ளி என்னும் தாவரம் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. சிறு நீரகக் கல்லை அறுவைச் சிகிச்சை செய்யாமல் நீக்க நீர்முள்ளி உதவுகிறது.  வாயுக்களின் சீற்றத்தினாலும் அஜீரணக் கோளாறினாலும் வயிற்றுப்புண் ஏற்படுகிறது.  நீர்முள்ளி இலைகளையும் கஷாயம் வைத்துக் குடிக்க புண்கள் நீங்குவதுடன் மலச்சிக்கலும் தீரும். மூல நோய்க்குக் கண்கண்ட மருந்தாக விளங்குகிறது. தாது விருத்திக்கு நீர்முள்ளி மிகவும் உதவுகிறது. மொத்தத்தில் இது ஒரு சர்வரோக நிவாரணியாக விளங்குகிறது.download (1)

இந்தியாவிலேயே முதன் முதலில் பட்டாம்பூச்சிக்கு என அமைக்கப்பட்ட தனிப்பூங்கா கர்னாடக மானிலத்திலுள்ள பன்னார்கட்டா தேசியபூங்கா ஆகும். சுமார் 8 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள பூங்காவில் பட்டாம்பூச்சிகள் அருங்காட்சியகமும் காணொளிக் காட்சி மூலம் விளக்கம் தரும் அறையும் உள்ளது. பட்டாம்பூச்சிகளின் இனப்பெருக்க நடவடிக்கைக்காக அழகிய பூந்தோட்டமும் பரந்து விரிந்து கண் கொள்ளாக் காட்சியாக உள்ளது.gsrev_158252

சென்னைக்கு அருகில் உள்ள வேலூரில் 16 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வேலூர்க்கோட்டை அமைந்துள்ளது. ஒரேயொரு வாயில் கொண்ட அமைப்பில் 133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது 191 அடி அகலமும் 29 அடி ஆழமும் கொண்ட அகழி இக்கோட்டையைச் சுற்றிலும் அமைந்துள்ளது. இக்கோட்டையின் சிறப்பே இதனுள் ஒரு இந்து கோயிலும் ஒரு கிறிஸ்துவ தேவாலயமும் ஒரு பள்ளிவாசலும் அமையப் பெற்று மத நல்லிணக்கத்துக்கு ஒரு சான்றாக உள்ளது.  மேலும் பிரிட்ட்ஷாருக்கு எதிராக முதல் கிளர்ச்சி 1806 அம் ஆண்டு இக்கோட்டையில் தான் நடந்தது.1

சென்னையில் பாரிமுனையிலுள்ள நீதிமன்றம் சட்டக்கல்லூரி எழும்பூரில் உள்ள சிற்பக்கலை கல்லூரி மியூசியம் கன்னிமாரா நூலகம் போன்ற சிவப்பு நிறக் கட்டிடங்களைக் கட்டியவர் நம் பெருமாள் செட்டியார். இந்தக் கட்டிடங்கள் உருவானது 18 ம் நூற்றாண்டிலாகும். எழும்பூர் பாந்தியன் சாலையிலிருந்து ஹாரிங்டன் சாலை வரை உள்ள நிலப்பரப்பு அவருக்குச் சொந்தமாக இருந்து செட்டியார்பேட்டை என்றழைக்கப்பட்டது. பின்னர் செட்பேட் என்றாகி இப்போது சேத்துப்பட்டு என்று அழைக்கப்படுகிறது.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s