சிவனின் ஐந்து வடிவங்கள்

download

சிவனின் வடிவங்களில் தட்சிணாமூர்த்தி, பைரவர், பிட்சாடனர், நடராஜர், சோமாஸ்கந்தர் ஆகியவை சிறப்பானவை.  சனகர் சனந்தர்  சனத்குமாரர் ஆகிய நான்கு முனிவர்களுக்கு ஆசிரியராக இருந்து சிவன் உபதேசித்த கோலம் தட்சிணாமூர்த்தி. அமைதி தவழும் முகமுள்ள இவரை சாந்தமூர்த்தி என்று அழைப்பர்.ltaqs_211395

தாருகாவனத்தில் வசித்த ரிஷிகள் தங்கள் தவபலம் காரணமாக தாங்கள் கடவுள் நிலைக்கு உயர்ந்து விட்டதாக ஆணவம் கொண்டிருந்தனர். அந்த ஆணவத்தி அடக்கி அவர்களை நல்வழிப்படுத்த சிவன் இளமையும் அழகும் மிக்கவராக அந்த வனத்துக்கு வந்தார். அவர் பிச்சை பாத்திரம் ஏந்தியிருந்ததால் பிட்சாடனர் என்று பெயர் பெற்றார். இவரை வசீகர மூர்த்தி என்று அழைப்பர். உயிர்கள் கொண்டுள்ள ஆணவத்தை பிச்சையாக ஏற்று அவர்களை உய்விப்பதே இந்த வடிவத்தின் நோக்கம்.r-3

வியாக்ரபாதர்  பதஞ்சலி ஆகிய முனிவர்கள் சிவனின் நடன கோலத்தை தரிசிக்க விரும்பினர். அவர்களுக்காக தில்லைவனம் என்னும் சிதம்பரத்தில் சிவன் நடராஜராக  நடனம் ஆடினார். ஆனந்தமாக நடனமாடியதால் இந்த வடிவத்தை ஆனந்த மூர்த்தி என்பார்கள்.bairavar

அசுரர்கலை அழித்து தர்மத்தை  நிலை நாட்ட சிவன் எடுத்த வடிவம் பைரவர். இவரை வக்ர மூர்த்தி என்று சொல்வர். இவரை வணங்கினால் இந்த உலகத்தில் நமக்கு தகுந்த பாதுகாப்பு கிடைக்கும்.kvfbn_206641

சிவனும் பார்வதியும் இணைந்த கோலத்தில் மகன் முருகனை நடுவில் அமர்த்திய கோலம் சோமாஸ்கந்தர். இவரைக் கருணாமூர்த்தி என்று அழைப்பர். குடும்ப ஒற்றுமைக்காக இவரை வணங்கலாம்.

 

 

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s