ஆஹா ஆலயம்

20மயிலாடுதுறையிலிருந்து மேற்கே 6 கிமீ தொலைவில் உள்ள தலம் கோழிக்குத்தி. தன் சரும நோயை நீக்கிய பெருமாளின் திருவுருவை பிப்பலர்  என்னும் மகரிஷி அத்தி மரத்தால் இருபதடி உயரத்தில் செய்து இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார். மூலவருக்கு சாம்பிராணி காப்பு மட்டுமே சாற்றப்படுகிறது.  இத்தலத்தில் உள்ள ஆஞ்சனேயர் சப்தஸ்வர ஆஞ்சனேயர் என அழைக்கப்படுகிறார். இந்த அனுமன் சிலையில் ஏழு இடங்களில் தட்டினால் ஏழு ஸ்வரங்கள் ஒலிக்கும்.chaami

குமரி மாவட்டத்தின் பழையாறும் அரபிக்கடலும் ஒன்றாகக் கலக்கும் முகத்துவாரத்துக்கு அருகில் சாமித்தோப்பு என்னும் ஊரில் அமைந்திருக்கிறது. வைகுண்ட சாமித் திருக்கோயில் அய்யாவழியின் மூலவர் வைகுண்ட சாமி. அய்யா மௌனத் தவமிருந்த இடத்தின் அருகே ஓர் ஆள் உயரக் கண்ணாடி உள்ளது. அதுவே மூலவர் உன்னிலே இறைவனைக் காண் என்பதுதான் பொருளாம். அய்யாவழிக்காரர்களின் புனித நூல் வைகுண்டசாமி எழுதிய அகிலத்திரட்டு என்பது ஆகும்.innampoor

கும்பகோணத்திலிருந்து ஐந்து கிமீ தொலைவில் உள்ளது இன்னம்பூர். இங்குள்ள சிவனின் திரு நாமம் எழுத்தறி நாதர். சரிவரப் பேச முடியாதவர்கள் பாடுவதற்கு நல்ல குரல்வளம் வேண்டுவோர் இத்தலத்திர்கு வந்து இறைவன் எழுத்தறி நாதரை தரிசனம் செய்கிறார்கள். கோயில் அர்ச்சகர் தேனை பூவால் தொட்டு நாக்கில் தடவுகிறார். தேன் நாம் கொண்டு செல்ல வேண்டும். எழுத்தறி நாதரின் அருளால் நலம்  நல்ல குரல் வளம் பேச்சுவளம் பெற்றுச் செல்கின்றனர்.3

ஸ்ரீராமருக்கு நம் தமிழ் நாட்டில் உள்ள ஆலயங்களில் சிறப்பு வாய்ந்தது தில்லைவிளாகம் ஸ்ரீ வீர கோதண்டராமர் ஆலயம். இங்கு போர் முடிந்து வீர கோதண்ட ராமஸ்வாமியாக கையில் வில் ஏந்தி வலப்புறம் சீதை இடப்புறம் இளைய பெருமாளுடன் நின்ற திருக்கோலத்தில் அனுமனுடன் காட்சி தருகிறார். இறைவனின் கைகள் மற்றும் கணுக்காலில் பச்சை நிற  நரம்புகளும் விரலில் உள்ள ரேகைகளும் தெளிவாகத் தெரிவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.tiruchendur-03

திருச்செந்தூரில் முருகப்பெருமான் சிவபெருமானுக்கு பூஜை செய்தபடி இருக்கிறார்.  இங்கு முருகனுக்கு அபிஷேகம் செய்த விபூதியை பன்னீர் இலையில் வைத்து தருவார்கள். பன்னீர் இலையில் 12 ரேகைகள் உண்டு. முருகன் பன்னிரு கைகளால் தருவதாக ஐதீகம். இந்த விபூதி எல்லாவித நோயையும் பில்லி சூனியம் தொல்லையும் தீர்க்கும். சக்தி கொண்டது.  திருச்செந்தூர் முருகன் மும்மூர்த்தியின் சொரூபம். இங்கு நடைபெறும் திருவிழாவில் பிரம்ம சொரூபமாக வெள்ளை சாத்தி  சிவசொரூபமாக சிவப்பு செம்பட்டு  சாத்தி பெருமாள் சொரூபமாகப் பச்சை சாத்தி என்று வைபவங்கள் நடைபெறுகிறது. பச்சை சாத்தி முருகனை வழிபட்டால் செல்வம் செழிக்கும்.20151010175625

பாண்டிய நாட்டு திவ்ய தேசங்களில் நவ திருப்பதியான ஸ்ரீவைகுண்டத்தில் பெருமாள் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். சித்திரை மாதம் ஆறாம் நாள் ஐப்பது மாதம் ஆறாம் நாள் இந்த இரண்டு நாட்களிலும் மூலவர் வைகுண்ட நாதர் திருமேனி மீது சூரிய கதிர் கோபுரம் வழியாக பொன்னொளி பரப்புவதைக் காணலாம். மூலவரின் திருமேனியில் தங்க கவசம் சாற்றப்பட்டு சூரியகதிரில் பகவான் தகதகவென ஒளி வீசுவார். சூரியனே தரிசித்து அபிஷேகம் செய்வது போலிருக்கும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s