நியூ[ஸ்]மார்ட்

Thiruvananthapuram : Gymnastic player Dipa Karmakar who bagged five gold medals at the 35th National Games in Thiruvananthapuram on Friday. PTI Photo (PTI2_6_2015_000157B)

இந்தியாவின் முன்னணி ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் ரியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் பங்கேற்கத் தகுதி பெற்ற முதல் இந்திய பெண்.  2014ல் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளிலும் அவர் பதக்கம் வென்றவர்.article-2623220-1DA9F3EF00000578-136_470x711

பாரிஸைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஒரு போட்டி வைத்திருக்கிறது. அப்போட்டியில் வெற்றி பெறும் மூன்ரு பேருக்கு என்ன பரிசு தெரியுமா? ஓர் இரவு முழுவதும் சுறாக்களுடன் தங்க வேண்டும்.  கண்ணாடியால் மூடப்பட்ட ஒரு படுக்கை அறையை 33 அடி ஆழம் மொண்ட ஒரு நீர்த்தொட்டியில் இறாக்குவார்கள். அந்தத் தொட்டியில் 36 சுறாக்கள் இருக்கின்றன. கண்ணாடி அறைக்குள் இருந்து விளக்கு வெளிச்சம் மூலம் சுறாக்களைக் கண்டு களிக்கலாம். சாப்பிடலா  தூங்கலாம்  இந்த அறையில் படுக்கை கழிவறை உள்ளன். பலமுறை பரிசோதனை செய்யப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் நீச்சல் வீரர் புகைப்படக்காரர் சுறா மற்றும் கடல் உயிரியல் ஆய்வாளர் போன்றோர் இருப்பர். ஓர் இரவு முழுவதும் அரிய உயிரனங்களான சுறாக்களைப் பற்று முழுவதுமாக அறிந்து கொள்ளலாம்.Mukund-Venkatakrishnan

அமெரிக்காவில் வசிக்கும் 16 வயது இந்திய இளைஞன் முகுந்த் வெங்கடகிருஷ்ணன்.  அவன் இரண்டு ஆண்டுகளாக முயற்சி செய்து காது கேளாதோருக்கான கருவியை மிகக் குறைந்த விலையில் தயாரித்து சாதனை படைத்துள்ளான். பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்படு தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கருவியை விலைக் குறைவான ஹெட்போன்களிலும் பயன்படுத்த முடியும்.  காது கேளாதோரின்  தேவைக்கேற்ப ஒலியின் அளவைக் கூட்டி குறைத்துக் கொள்ளலாம்.copper-canyon-cocktail-bar-00

மெக்ஸ்கோவில் வினோதமான இடத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது காப்பர் கேன்யன் காக்டெயில் பார் என்னும் ஹோட்டல். பஸாசியாசிக் என்ற அருவிக்கு எதிர்ப்புறம் இருக்கும் உயரமான மலையின் பக்கவாட்டில் இது கட்டப்பட்டிருக்கிறது. மலையில் இருந்து கட்டடம் பாதிக்கு மேல் வெளியே நீட்டிக்கொண்டிருக்கிறது. இதன் தரைத்தளம் முழுவதும் கண்ணாடியால் உருவானது. இதில் நீச்சல் குளமும் உண்டு. இந்த விடுதிக்குச் செல்வதென்றால் கயிற்றைப் பிடித்துக்கொண்டு மலையேறிச் செல்லவேண்டுமாம்.  சாப்பிட்டுக்கொண்டே அருவியின் அழகை ரசிக்கலாம். அல்லது மொட்டைமாடிக்குச் சென்ரு இயற்கை அழகை ரசித்துக்கொண்டே அமர்ந்திருக்கலாம். கண்ணாடி உடைந்துவிடுமோ என்ற பயம் தேவையில்லை. எந்த ஆபத்தும் நேராது என்கிறார்கள் விடுதியின் உரிமையாளர்கள்.  உலகின் உயரமான விடுதியான துபாயின் புர்ஜ் கலிஃபாவை விட அதிக உயரம் என்கின்றனர்piganiol3

ஃப்ரான்ஸில் புதுவிதமான குடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் ஊம்ப்ரெல்லா. இந்தக் குடையைச் சிறிய வானிலை மையம் என்கிறார்கள் குடையில் இருக்கும் சென்சார்கள் நேரம் வெளிச்சம் ஈரப்பதம் அழுத்தம் வெப்ப நிலை போன்றவற்றைப் பதிவுசெய்து அடுத்து அரைமணி நேரத்தில் என்ன நடக்க இருக்கிறது என்பதைச் சொல்லிவிடுகிறது

குடையை மறந்துவிட்டுக் கிளம்பினாலோ வேறு எங்கோ குடையை வைத்துவிட்டுக் கிளம்பினாலோ ஜிபிஎஸ் தொழில் நுட்பம் மூலம் குடை இருக்கும் இடத்தை நமக்கு போன் காட்டி கொடுத்துவிடும். வானிலைக்கு ஏற்ப இந்தக் குடையின் வண்ணங்களும் மாறிக்கொண்டே இருக்கும். இதுதான் ஊம்ப்ரெல்லாவின் தனிச் சிறப்பு. ஆன்லைன் வர்த்தகத்தில் ஊம்ப்ரெல்லா பிரமாதமான வரவேற்பை பெற்றுவிட்டது  கடைகளில் இனிமேல்தான் விற்பனைக்கு வர இருக்கிறது.dubai-the-tree

 

டென்மார்க்கைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் தாமஸ்  ஆயிரக்கணக்கான பறவை வீடுகளை அமைத்து வருகிறார். வீடுகள் விளக்குக் கம்பங்கள் மரங்கள் சுவர்கள் என்று கிடைக்கும் இடங்கள் எல்லாம் பல வண்ண மர வீடுகளை அமைத்து வருகிறார். பழங்களைச் சாப்பிடும் பறவைகள் நகர் முழுவதும் எச்சங்கலைப் போடுகின்றன. அதிலிருந்து வரும் விதைகளை புதிய மரங்கள் செடிகள் தாமாக வலரும் வாய்ப்பு உருவாகின்றன. இந்தப் பறவை வீடுகளால் பறவைகள் பாதுகாப்பை உணர்கின்றன.  மறுசுழற்சி என்பதை மக்கள் அதிகம் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால் இயற்கை வளங்களை அழிக்கும் விகிதம் குறையும்  பூமிக்கும் நல்லது என்று கூறும் தாமஸ் ஒரு பயிற்சிப் பட்டறை உருவாக்குவதுதான் தன் லட்சியம் என்கிறார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s