ஆஹா தகவல்

 

dubai-the-treeநம் நாட்டில் உள்ள வெள்ளாடுகள் தாழ்வான மரக்கிளைகளை எட்டிப்பிடித்து அதன் இலைகளை உண்ணுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் பாலைவன நாடான மொராக்கோ நாட்டிலுள்ள ஆடுகள் எவ்வளவு பெரிய மரமானாலும் அதன் உச்சி வரை ஏறி விடுகின்றன. உலகிலேயே மரமேறி ஆடுகள் மொராக்கோவில் மட்டுமே காணப்படுகின்றன.kuthodaw-pagoda

பர்மாவின் மாந்தளைக்குச் செல்லும் பாதையில் 728 டன் எடையுள்ள ஒரு பிரம்மாண்டமான புத்தகம் உள்ளது குத்தோடா பேகோடா என்னும் பெயருடைய இது   730 கற்கள் 1460 பக்கங்கள் கொண்டது. ஒவ்வொரு பக்கமும் ஒரு டன் எடையுள்ள பளிங்கு கல்லாகும். அதில் உச்சி முதல் அடி வரையில் சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு கல் நூல் முகப்பாக உள்ளது. ஒரு மைல் தொலைவுக்கு மேல் இவை உள்ளன. ஊகாந்தி என்னும் புத்த துறவி இயற்றிய பர்மியா வேதத்தின் ஆதாரபூர்வமான பதிப்பு கல்சாசனங்களாகப் பொறிக்கப்பட்டிருக்கிறது. கல் மேல் வடித்த இந்த புத்தகத்தை ஒருவர் படித்து முடிக்க ஐந்து ஆண்டுகள் பிடிக்குமாம்.download

 

நாம் வாங்கும் தங்க நகைகளில் BIS என்ற முக்கோண முத்திரை இருந்தால் அதுவே ஹால் மார்க் நகையாகும். அதோடு அதில் காணப்படும் எண்ணை வைத்து தங்கத்ஹ்டின் தரத்தை தெரிந்து கொள்ளலாம்.

958 என்று இருந்தால் அது 23 காரட்

916 என்றிருந்தால் அது 22 காரட்

875 என்றிருந்தால் அது 21 காரட்

750 என்றிருந்தால் அது 18 காரட்

708 என்றிருந்தால் அது 17 காரட்

585 என்றிருந்தால் அது 14 காரட்

அதற்கும் கீழே நகைகள் செய்யப்படுவதில்லை.Luwak-Katze_in_Kepahiang

உலகிலேயே மிக அதிக விலையுள்ள காபி கோபி லுவக். அமெரிக்காவில் இதன் விலை ஒரு கப் ஏறக்குறைய ரூ 6000/= இந்தோனேஷியாவில் வாழும் சிவட் என்ற ஒரு வகை பூனை மூலம் இக்காபியை தயாரிக்கிறார்கள். காப்பி பழங்களை இப்பூனைகளுக்கு உண்ணக் கொடுக்கின்றனர். அவற்றின் வயிற்றில் சுரக்கும் ஒரு வகை   நொதியால் பழம் மட்டும் ஜீரணிக்கப்பட்டு கொட்டை ஜீரணமாகாமல் கழிவாக வெளியேறுகிறது.

sidner.ilist.indonesia.kopi.luwak.cnn.640x360அவற்றைச் சேகரித்து சுத்தம் செய்து இக்காப்பியை தயாரிக்கிறார்கள். உலகளவில் மிகச் சிறந்த மணமும் சுவையும் கொண்ட நம்பர் ஒன் காப்பி இதுதானாம்.close-up-of-hand-holding-wheat

பசுமை புரட்சி  உணவு உற்பத்தியைப் பெருக்குவது

வெண்மைப் புரட்சி     பால் உற்பத்தியை பெருக்குவது

இளஞ்சிவப்புப் புரட்சி  மருந்து வகைகள் உற்பத்தியைப் பெருக்குவது.

நீலப்புரட்சி     மீன் உற்பத்தியை பெருக்குவதுNadaswaram-musical-instruments-bangalore

இசைக் கருவிகளில் நாதஸ்வரம் மிகவும் முக்கியமானது.  ஆச்சாமரத்தால் செய்யப்படும் இதன் மேல் பாகம் உலோகத் தகட்டினால் மூடப்பட்டிருக்கும். திமிரி பாரி என்று இருவித நாதஸ்வரங்கள் உண்டு. திமிரி உயரம் குறைவாகவும் ஆர சுருதி அதிகமாகவும் இருக்கும். பாரி அதிக உயரமும் ஆதார சுருதி குறைவாகவும் இருக்கும்.

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s