ஓய்வு கேட்காத வேலைக்காரன்

ST_20160202125735203936

பணக்காரர் ஒருவர் வேலைக்கு ஆள் தேடினார். இளைஞன் ஒருவன் அவரிடம் ஐயா என்ன வேலை கொடுத்தாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்  என்றான். பணக்காரர் மகிழ்ச்சியடைந்தார்.

ஐயா இருந்தாலும் தங்களுக்கு ஒரு நிபந்தனை என்றான் அவன்.  பணக்காரர்  சம்பளம் கொடுப்பவன் தானே நிபந்தனை இடவேண்டும்  ஆனாலும் நீ நிபந்தனை இடுகிறாயே என்று ஆச்சர்யப்பட்டார். விழித்திருக்கும்   நேரமெல்லாம் வேலை கொடுக்கவேண்டும் ஒரு  நிமிடம் கூட சும்மா இருக்கமுடியாது. இல்லாவிட்டால் உங்களை சிரமப்படுத்த நேரிடும். என்றான்.

மனதிற்குள் சிரித்த பணக்காரர்  வேலைக்கும் பஞ்சமில்லை  எப்போதும் நீ வேலை செய்யலாம் என்று அவனைத் தட்டிக்கொடுத்தார்.  என்ன வேலை கொடுத்தாலும் இளைஞன் சளைக்கவில்லை. ஆனாலும் ஒரு கட்டத்தில் பணக்காரரால் வேலை ஏதும் கொடுக்க முடியவில்லை. அதற்காக புது உத்தியை கையாண்டார்.

உயரமான வழுக்கு மரம் ஒன்றை நிறுவி உச்சியில் பணமுடிப்பைக் கட்டி வைத்தார். வேலை இல்லாத நேரத்தில் பண முடிப்பை எடுக்க முயற்சிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் பின் பணக்காரர் ஏவிய வேலையை மட்டும் இளைஞன் செய்தான். மற்ற நேரத்தில் வழுக்கு மரத்தில் ஏற முயன்றான்.

அந்த இளைஞன் வேறு யாருமல்ல. நம் மனது தான். அவனுக்கு எப்போதும் ஏதாவது வேலை இருந்துகொண்டே இருக்கும். நல்லது கெட்டது இரண்டையும் செய்வான். அதனால் தான் பெரியவர்கள் பக்தியில் அதை ஈடுபடுத்த வேண்டும் என்றார்கள்.

4 thoughts on “ஓய்வு கேட்காத வேலைக்காரன்

  1. உண்மைதான் மனதிற்கு வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அது தாவிக்கொண்டே தான் இருக்கும். அதனால் தான் நீங்கள் தினம் பதிவுகளாகப் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது! தொடரட்டுக் உங்கள் அயராத பணி.
    நல்ல கதை.
    பாராட்டுக்கள்!

  2. நீண்ட நாட்களுக்குப் பிறகு என் வலைப்பக்கம் வந்து ஒரே நாளில் ஏதோ வேண்தல் போல் எனது பல பதிவுகளையும் படித்து ஒரே மூச்சில் பின்னூட்டங்களும் போட்டு எனக்கு ஒரு சபாஷ் விருது என அமர்க்களப்படுத்திவிட்டீர்களே ரஞ்சனி நாளை உங்கள் பிறந்த நாள் என்ற குஷியா/? பிடியுங்கள் என் அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்களை

    பாராட்டுக்களுக்கு நன்றி எத்தனைபேர் பாராட்டினாலும் வாத்தியாரம்மா கொடுக்கும் சபாஷ்க்கு எதுவே ஈடாகாது. அது கொடுக்கும் உற்சாகமே தனிதான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s