ஐயப்பன் அரவணை

download

சபரிமலை சாஸ்தா கோவிலில் அரவணை என்ற பாயச பிரசாதம் வழங்கப்படுகிறது. அரவு என்றால் பாம்பு  அணை என்றால் படுக்கை. சிவனின் கழுத்தில் இருப்பது பாம்பு அதுவே திருமாலுக்கு படுக்கையாக ஆதிசேஷன் என்ற பெயரில் இருக்கிறது. சிவ விஷ்ணு கூட்டணியில் அவதரித்ததாலோ என்னவோ சாஸ்தாவின் பிரசாதத்துக்கு கூட அந்தப் பெயரை சூட்டியிருக்கிறார்கள்.sl2934

புராணக்கதை ஒன்றும் சாஸ்தாவுக்கு பிரியமான நைவேத்யம் பாயசம் என்று சொல்கிறது.  தசரதருக்கு குழந்தைகல் இல்லாத சமயத்தில் புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். யாக குண்டத்தில் இருந்து ஒரு பூதம் வெளிப்பட்டது. பூதம் என்ற சொல் சாஸ்தாவுடன் தொடர்புடையது. அவருக்கு பூத நாதன்   பூதத்தான் என்றெல்லாம் பெயர்கள் உண்டுTN_111212151848000000

தன் குழந்தையான பூத நாதன் மூலம் திருமால் பூலோகத்தில் அவதரிக்க முடிவு செய்தார்.  வால்மீகி ராமாயணத்தில் பால காண்டத்தில் 11 – 16 ஸ்லோகங்களின் பொருள்படி ஒப்பில்லாத ஒளியையுடைய மகாவீர்யம் பொருந்திய அழகான ஆபரணங்களால் அழகு செய்யப்பட்ட பூதம் தோன்றியது என்று சொல்லப்படுகிறது.  ஒப்பில்லாத ஒளியையே மகரஜோதி என்கிறோம். அவர் பெரும் சக்தி மிக்கவர். அவருக்கு இன்றும் திருவாபரணம் அணிந்து மண்டல பூஜை செய்யப்படுகிறது.

ஸ்ரீ அரிகர புத்ர சகஸ்ர நாமம் ஸ்ரீ மஹா சாஸ்த்ரு த்ரீசதி  அஷ்டோத்தர சதம் ஆகியவற்றிலும் ஒளிபொருந்தியவர். மஹாசக்தி மிக்கவர். ஆபரணம் அணிந்தவர் உள்ளிட்ட வார்த்தைகள் வருகின்றன.  பூத நாதனான சாஸ்தா கொண்டு வந்த மாணிக்க பாத்திரத்தில் இருந்த பாயசத்தைக் குடித்த கோசலை  ராமனையும் கைகேயி பரதனையும் இரு பங்கு பாயசம் குடித்த சுமித்திரை லட்சுமணன் மற்றும் சத்ருக்கனனையும் ஈன்றெடுத்தனர்.TN_111212155229000000

சாஸ்தா அவதரித்த நாள் பங்குனி உத்திரம். அவர் கொண்டு வந்த பாயசம் பாத்திரத்தின் மூலம் பிறந்த ராம சகோதர்கள் திருமணம் முடிந்ததும் பங்குனி உத்திரத்தன்று தான்.  அவர்கல்  ஜனகர் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளை மணந்தனர்.

ஆக குழந்தை வரம் வேண்டுவோர் சாஸ்தாவை நம்பிக்கையுடன் வணங்கலாம்.  அவருக்கு சரஸ்வதியின் அம்சமான பிரபா என்ற மனைவியும் சத்யகன் என்ற மகன் இருந்ததாகவும் சில்பரத்தினம் என்ற நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  குழந்தைவரம் தரும் இந்த சாஸ்தாவை  சம்மோஹன் சாஸ்தா என்பர்.

Advertisements

2 thoughts on “ஐயப்பன் அரவணை

  1. உங்களுடைய இந்தப் பதிவை திருவள்ளுவர் லைக் பண்ணியிருக்கிறாரே! :))
    ஸ்ரீரங்கம் கோவிலில் கூட இரவு பிரசாதத்தை அரவணை என்று தான் சொல்லுவார்கள். அதிகம் தித்திப்பு இல்லாமல் நெய் வாசனையுடன் அருமையாக இருக்கும்.

  2. எனக்கு மிகவும் பிடித்த பிரசாதங்களில் ஒன்று நீன்ட நாட்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து ரசித்து சுவைத்து சாப்பிடுவேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s