ஐடா ஸ்கடர்

இளமையில் செல்வச் செழிப்புடன் ஆடம்பர வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் ஒரே அமெரிக்க இளம் பெண் தமிழ் நாட்டில் மருத்துவ சேவை செய்து கொண்டிருக்கும் தன் பெற்றோர்களைக் காண இந்தியா வருகிறார்.IdaScudder

ஒரு நாள் இரவு அவள் வீட்டின் கதவைத் தட்டுகிறார் பிராமணர் ஒருவர்.  தன் மனைவி பிரசவ வலியில் உயிர்ப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்.  நீங்கள் வந்தால் உதவியாய் இருக்கும் என்று அழைக்கிறார்.  அவ்விளம் பெண் தனக்கு மருத்துவம் தெரியாது  எனவும் தன் தந்தையை அழைத்துச் செல்லுங்கள் என்கிறார்.   அதற்கு அந்த பிராமணர் தன் வீட்டுப் பெண்களை காண ஆண் மருத்துவரை அனுமதிக்க மாட்டோம் என்ரு கூறி சென்ரு விடுகிறார்.  சற்று நேரத்தில் இன்னொரு முறை ஒரு முஸ்லீம் இதே போன்ற காரணத்தினால் அவரும் ஏமாற்றத்துடன் வெளியேறுகிறார்.  சற்று  நேரத்தில் மீண்டும் ஒருவர் இதே போல் வெளியேறுகிறார்.  அந்த மூன்று பெண்களும் அதே இரவு இறந்து விடுகின்றனர்.11

இந்த மூன்று சம்பவங்களும் அந்தப் பெண்ணை உறங்கவிடவில்லை.  இந்தியாவில் பெண் மருத்துவர்களின் தேவையையே இந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன.  விடியும்போது அவள் ஒரு உறுதி எடுக்கிறாள். மீண்டும் அமெரிக்கா செல்கிறாள்.  மருத்துவம் படித்து இந்தியா திரும்புகிறாள். சில மிஷனரிகளின் உதவியுடன் படுக்கையுடன் கூடிய சிறப்பு மருத்துவமனை 1900 ல் அங்கு உருவாகிறது. அங்குள்ள கிராமத்து பெண்களுக்கு அடிப்படை மருத்துவம் கற்றுக்கொடுத்து குதிரை வண்டியில் ஊர் ஊராகச் சென்று  மருத்துவ சேவை செய்கிறார் பின்பு இந்தியாவிலேயே முதன் முதலாக செவிலியர் கல்லூரி உருவாக்குகிறார். பின்பு மருத்துவ கல்லூரியும் உருவானது.CMC front veiw

வேலூரில் கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ்  [ C M C ] என்ற பெயரில் ஒரு படுக்கையுடன் ஆரம்பிக்கப்பட்ட அந்த மருத்துவ மனையில் இன்று 3000 படுக்கைகள் உள்ளன.  வருடத்திற்கு மூன்று மில்லியன் வெளி நோயாளிகள் வந்து போகின்றனர்.  2 லட்சத்திற்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் உள்ளனர்.CMCH_Vellore

வருடத்திற்கு 20000 த்திற்கும் மேற்பட்ட பிரசவம் பார்க்கப்படுகிறது.   95 வார்டுகளுடன்  15  அவசர சிகிச்சை பிரிவுகளுடன் உலக புகழ் பெற்ற சிறந்த மருத்துவமனையாகவும் சிறந்த மருத்துவ கல்லூரி என்ற பெருமையுடனும் விளங்குகிறது.  தன் காலத்திற்கு பிறகும் மக்களுக்கு பயன்பட சேவை அமைப்பை உருவாக்குகிறார்.  அப்பெண்ணின் பெயர் ஐடா ஸ்கடர்.  சக மனிதனின் மீது அப்பெண் கொண்ட நேசம் பல கோடிக்கணக்கான மக்களுக்கு இன்றும் வாழ்வை அளித்துக்கொண்டிருக்கிறது. அவர் காலத்திற்கு பின்பும் தூய அன்பு காலம் கடந்தும் வாழும்.

Advertisements

2 thoughts on “ஐடா ஸ்கடர்

  1. மனதைத் தொட்ட நிகழ்வு. இப்படியெல்லாம் சிலர் இருப்பதால் தான் மனிதகுலம் தழைக்கிறது என்று தோன்றுகிறது. மேலே ஒரு படம் இருக்கிறதே அது புத்தகமா? ஐடா இவள் ஒரு விசித்திரமான மருத்துவச்சி என்று புத்தகமாக வந்திருக்கிறதா?

  2. அது புத்தகம் தான் ரஞ்சனி என் மருமாள் இதன் சிலவரிகளை எனக்கு whatsapp ல் அனுப்பி இருந்தாள் சுவாரசியமாக இருந்ததால் மேலும் சில தகவல்களைத் திரட்டி பதிவாக்கிவிட்டேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s