ஆஹா ஆலயம்

IMG_00068

திருவையாற்றில் ஸ்ரீ ஐயாரப்பர் சன்னதியை வலம் வர அனுமதியில்லை. கருவறையின் பின்புறம் ஈசனின் ஜடாமுடி பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். அதை நாம் மிதித்துவிடக்கூடாது என்பதற்காகவே வலம் வருவது தடுக்கப்பட்டுள்ளது.G_T1_1674

மஹாரஷ்டிர மானிலம் நாசிக் மாவட்டத்திலுள்ள திரியம்பகேஸ்வரர் ஆலயத்தில் ஒரே ஆவுடையாரில் மூன்று லிங்கங்கள் உள்ளன. சிவன் பிரம்மா விஷ்ணு மூவரும் ஒரே ஆவுடையாரில் மூன்று லிங்கங்களாக நிலைத்து அருள்புரிவதால் இத்தலம் திரியம்பகம் எனப் பெயர் பெற்றது.  தரையோடு பொதிந்த ஆவுடையாரில் ரோஜா மொட்டுப் போல மூன்று சிறிய லிங்கங்கள் ஆவுடையாரின் மையத்திலிருந்து புனித தீர்த்தம் வேளி வந்து சதா லிங்கங்களை அபிஷேகிக்கின்றன. காணக் கண் கோடி வேண்டும்.TN_111223154912000000

திரு நெல்வேலியில் கெட்வெல் சஞ்சீவி வரத ஆஞ்சனேயர் கோயில் உள்ளது. இங்குள்ள வரசித்தி ஆஞ்சனேயர் பக்தர்களுக்கு விரும்பும் வரங்களை அருள்கிறார்.

வரசித்தி ஆஞ்சனேயரை வழிபடுவதால் மகப்பேறின்மை வறுமை வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகள் குடும்பத்திலுள்ள சச்சரவுகள் தீரும்  வினாயகரும் ஆஞ்சனேயரும் அருகருகே காணப்படுவது கூடுதல் சிறப்பு. இக்கோயிலில் இருவரையும் வேண்டி தொடங்கும் செயல்கள் மிகப் பெரிய வெற்றிபெறும்.15

கேரள மானிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இருஞ் ஞாலக்குடா என்ற ஊரில் உள்ள கூடல் மாணிக்கம் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள தெய்வம் சங்கமேஸ்வரன் பரதன் தெய்வமாக உள்ள ஒரே கோயில் இதுதான். ஒரு முறை இந்த பரதன் சிலையிலிருந்து சிவப்பு ஒளி வீசியது. அந்த ஊர் ராஜா தன்னிடம் உள்ள உயர்ந்த மாணிக்கத்தைக் கொண்டு வந்து எதன் ஒளி மிகவும் சக்தி வாய்ந்தது என்று பார்க்க சிலையின் அருஇல் கொண்டு போனார். மாணிக்கம் அந்த சிலையில் கரைந்து விட்டது. சியலை மாணிக்கத்தின் ஒளியையும் சேர்த்து பிரகாசித்தது. இதனாலேயே கூடல் மாணிக்கம் என்ற ஸ்தல பெயர் வந்த்து.download

இராமனாதபுரத்திலிருந்து பத்து கிமீ தொலைவில் உள்ளது தேவிபட்டினம்   இங்கு நவக்கிரகங்கள் கடலுக்குள் அமைந்திருக்கிறது. இங்கு நவக்கிரகங்களை தரிசிக்க காலை 7 மணிக்குள் சென்று விட வேண்டும். நேரம் செல்ல செல்ல கடல் அலைகள் உயர்ந்து நவக்கிரகங்கள் நீரில் மூழ்கிவிடுகின்றன. இந்த அதிசயக் காட்சியை அனைவரும் சென்று காணலாம்.2

தேனி மாவட்டம் பெரிய குளத்திற்கருகில் தேவதானபட்டி என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் வித்தியாசமானது. அந்தக் கோயிலின் கருவறையில் அம்மன் சிலை இல்லை. கருவறை மூடப்பட்டு கதவிற்குத்தான் பூஜை நடைபெறுகிறது. கதவிற்கு முன் நாகபீடத்தில் சூலம் வைத்து வழிபடுகின்றனர். கருவறைக்குப் பின்னால் ஒரு கூரை வீட்டில் மூங்கில் பெட்டிக்குள் காமாட்சி அம்மன் இருப்பதாக ஐதீகம். இந்தக்கோயிலில் உடைக்காத தேங்காயும் உரிக்காத வாழைப்பழமும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.

 

Advertisements

2 thoughts on “ஆஹா ஆலயம்

  1. ஆந்திரப்பிரதேசத்தில் விசா ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோவில் இருக்கிறது. அங்கு போய் அந்தக் கோவிலை 108 முறை வலம் வந்தால் கண்டிப்பாக விசா கிடைத்துவிடுமாம். அத்தனை கூட்டம் வருமாம். இன்ச் இன்ச் ஆகத்தான் நகர முடியுமாம். என் உறவினர் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன். உங்கள் ஊரு தானா?

  2. ஆம் ரஞ்சனி எங்கள் வீட்டிலிருந்து 30 கிமீ தொலைவில் சிலுக்கூர் என்ற ஊரில் தான் உள்ளது. இதை நான் மூன்று முறை தரிசனம் செய்துள்ளேன். சிலுக்கூர் பாலாஜி என்ற நாமத்துடன் வந்தவர் இன்று விசா பாலாஜி என ஆகிவிட்டார் சின்ன கோவில் தான் ஒரு முறை சென்று நமது கோரிக்கைகளை வேண்டிக்கொண்டு 11 பிரட்சணம் செய்து விட்டு வரவேண்டும்.. கோரிக்கை நிறைவேறினால் 108 பிரதட்ணம் செய்ய வேண்டும். கண் குணமானதற்காக நானும் V I T யில் இடம் கிடைக்கவேண்டுமென என் சின்ன பெண்ணும் வேண்டிக்கொண்டு நிறைவேறியதால் 108 பிரதட்ணம் செய்தோம் செய்ய 3 மணி நேரம் ஆனது. அதற்குள் என் பெரிய பெண்ணும் பிள்ளையும் அங்குள்ள பிரசாதம் எல்லாவற்றையும் ஒரு பிடி பிடித்தார்கள் என்பது உபரி தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s