எம தர்மனின் பி ஏ யார் ?

pt08

நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் காலம் என்ற நியதிக்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். உலகிலேயே மிகவும் உயர்ந்தது நேரம் தான்.  அதனால் தான் நாம் அனைவரும் கால தேவனான எமதர்மனின் பெயரைச் சொன்னாலே பயப்படுகிறோம். ஏனெனில் அவன் தர்மம் நீதி இவற்றிற்கு கட்டுப்பட்டவன்.  பணக்காரனா ஏழையா படித்தவனா பாமரனா என்றெல்லாம் பார்க்காமல் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி உயிரைப் பறிக்கும் ஆற்றல் உடையவன். இதனால் தான் இவனை தர்மராஜன் என்று அழைக்கிறோம்.

எமதர்மன் ஒரு சமயம் உலக மக்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கிட தனக்கொரு உதவியாளர் வேண்டும் என சிவபெருமானிடம் வேண்டினான்.  சிவபெருமானும் ஒப்புக்கொண்டார். இந்த சமயத்தில் சூரியனுக்கும் நீலா தேவிக்கும் சித்ரகுப்தன் என்ற மகன் பிறந்தான்.  பிறக்கும் போதே இடக்கையில் ஓலைச் சுவடியும் வலக்கையில் எழுத்தாணியும் வைத்திருந்தான்.Chitragupta-Photo-rt53

தன் தந்தையின் விருப்பப்படி சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து எமதர்மனின் உதவியாளராகும் பதவியைப் பெற்றான். பார்வதி வரைந்த சித்திரம் ஒன்றிற்கு சிவன் உயிரூட்டியதாகவும் அவரே சித்ரகுப்தர் என்றும் ஒரு தகவல் உண்டு.Chitragupta-Picture-rt54

இவர் நவக்கிரஹங்களில் கேதுவிற்கு அதிதேவதை ஆவார். இவரை வழிபட்டால் கேதுவின் அருள் பெற்று பிறவிப்பிணி நீங்கி நற்கதி அடையலாம். காஞ்சிபுரத்திலும் தேனி அருகிலுள்ள கோடாங்கிபட்டியிலும் சித்ரகுப்தருக்கு கோயில் உள்ளது.

 

Advertisements

4 thoughts on “எம தர்மனின் பி ஏ யார் ?

 1. பசு நெய் 6 மாதே குழந்தைக்கு தருவது சரியாய்?

  Sent from my iPhone

  >

 2. எமதர்மனின் பி.ஏ வைத் தெரிந்து கொண்டோம்.
  உங்கள் வலைத்தளத்திற்கு தகவல் களஞ்சியம் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும், விஜயா.
  உங்களுக்கு தகவல் களஞ்சிய ராணி என்று பட்டம் கொடுக்கிறேன்.
  பாராட்டுக்கள்!

 3. குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்படவேண்டும் என்பார்கள் அதுபோல் குருவின் கையால் பட்டம் வாங்கியதில் மிக மிக மகிழ்ச்சி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s