ஆஹா தகவல்

download

பொதுவாக தாவரங்கள் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை மட்டுமே காற்றிலுள்ள கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை தரும். ஆனால் 24 மணி நேரமும் கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியிடும் தாவரம் அரசமரம் மற்றும் மூங்கில் மரம் மட்டுமே. துளசி 20 மணி நேரம் ஆக்ஸிஜனையும்  நாலு மணி நேரம் ஓசோனையும் கொடுத்து வளிமண்டலத்தை பாதுகாக்கிறது.UN_Headquarters_2

உலகிலேயே கண்ணாடியாலான மிகப் பெரிய கட்டடம் ஜக்கிய நாடுகள் சபைக் கட்டடம் தான். நியூயார்க்கில் முதல் அவென்யூ வீதியில் 18 ஏக்கர்  நிலப்பரப்பில் எழுப்பப்பட்டிருக்கும் இக்கட்டிடத்தில் 39 மாடிகளும் 650000 கண்ணாடி ஜன்னல்களும் உள்ளன. கட்டிடத்தைச் சுற்றி விசாலமான தோட்டம் உள்ளது. இங்கு 2000 வகையான மலர் செடிகள் வளர்க்கப்படுவது சிறப்பு.

5663593-

பூஞ்சாலி  பூம்பாவை மச்சு முறித்தான் சொறிக்குரும்பை இராசவாணன் கதலிவாழை சித்திரக்காலி  வாளான் சிறைமீட்டான்  மணல்வாரி கரும்சிரை மலைமுண்டன்  பொற்பானை நெடுமுக்கன் காடைக்கமுத்தன் இரங்கல் மிட்டான் கல்லுண்டை கருங்குறுவை செந்தாழை பெரு வெள்ளை  பச்சை மூவள் இட்டமலை முண்டன் இவையெல்லாம் என்ன பெயர் தெரியுமா/  முக்கூடற்பள்ளுவில் காணப்படும் நெல் வகைகளின் பெயர்கள்தான்.797

எகிப்தில் பூட்ரி  தொல்லியல் அருங்காட்சியகத்தில் கந்தலான V கழுத்து லினன் சட்டை ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.  இதுதான் உலகின் மிக பழைமையான சட்டையாம். 1913 ல் டர்கன் கல்லறையில் இச்சட்டை கிடைத்தது.  டர்கன் கல்லறையின் வயது கிமு 3100 .  இத்துணியின் சிறு பகுதி 2015 ம் ஆண்டு நவீன ரேடியோ கார்பன் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. துணியின் வயது துல்லியமாக 95 சதவீதம் கணக்கிடப்பட்டு 5100 முதல் 5500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று சொல்கின்றனர். எந்தவித இயந்திரங்களும் இல்லாத காலத்தில் துணிகள் நெய்து அழகாக வடிவமைத்திருக்கிறார்கள் என்றால் முன்னோர்களின் திறமைகளை என்னவென்று சொல்வது.

பண்ருட்டி அருகே உள்ளது திருவாழூர் கிராமம். அப்பர் பிறந்த கிராமம் இது. இங்கு களர் உகாய் என்ற தாவரம் உள்ளது. இதன் அடிப்பாகம் மரமாகவும் கிளைகள் கொடியாகவும் இலைகள் செடிகளில் உள்ளது போலும் இருப்பது இத்தாவரத்தின் சிறப்பு.  இதன் இலைகள் கசப்பு இனிப்பு புளிப்பு கார்ப்பு உவர்ப்பு  என்ற அறுசுவைகளையும் கொண்டது. இந்த களர் உகாய் மரத்தின் வயதை யாராலும் கணக்கிடமுடியவில்லையாம்.Eternal1

உலக பொதுமறை  என போற்றப்படும் திருக்குறளில் 247 தமிழ் எழுத்துக்களில் 37 எழுத்துக்கள் இடம் பெறவில்லை. இதில் அனிச்சம் குவளை இரண்டு மலர்கள் மட்டுமே இடம்பெறுகின்றன. இடம்பெறும் ஒரே பழம் நெருஞ்சி. ஒரே விதை குன்றிமணி. இடம்பெறாத ஒரே எண் 9 ஆகும். இடம் பெறாத ஒரே உயிரெழுத்து ஔ ஆகும். இடம் பெறாத இரண்டு சொற்கள் தமிழ் கடவுள். இதில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து னி   இவ்வெழுத்து திருக்குறளில் 1705 முறை வந்துள்ளது. இடம்பெற்ற இரண்டு மரங்கள் பனை மூங்கில் ஆகும்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s