ஆஹா தகவல்

download

அல்லாமா முகமது இக்பால் என்பவர் பிரிட்டிஷ் இந்தியாவின் இஸ்லாமிக்  கவிஞர். உருது மற்றும் பாரசீக மொழிகளில் கவிதைகள் எழுதியுள்ளார். ‘ஸாரே ஜகான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா” என்ற அற்புதமான பாடலை எழுதியவர்.  1904ல் இப்பாடலை எழுதினார். 1947 ஆகஸ்ட் 15ல் நமது நாடு சுதந்திரம் அடைந்தபோது தில்லி அரசியல் நிர்ணய சபையில் பாடப்பட்ட முதல் பாடல் இதுதான்.Chitharal-Jain-Temple-in-Nagercoil-3

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்திலிருந்து ஐந்து கிமீ தொலைவில் சிதறால் என்ற கிராமத்தின் அருகில் உள்ள மலையில் ஏராளமான பௌத்த ஜைன மடங்கள் உள்ளன. கோயில் சிற்பங்களும் உள்ளன. இம்மலையின் ஓரிடத்தில் ஒரு பாறையில் ஒரு சிறிய துவாரம் உள்ளது இதில் நம் வாயை வைத்து உறிஞ்சினால் மிகச் சுத்தமான நீர் வருகிறது. கோடைகாலமாயினும் இந்த நீர் வற்றுவதில்லை என்பது அதிசயம். இந்த இடம் குமரி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும்.San_Marino-2012-111_web

உலகின் மிகச் சிறிய குட்டி ஜன நாயக நாடு எது தெரியுமா?  சன்மாரினோ  இது இத்தாலி நாட்டின் அருகில் உள்ளது. இதன் பரப்பளவு 62 சதுர கிமீ தான்.  இந் நாட்டவர்களில் முக்கால்வாசிப்பேர் வெளி நாடுகளில் வசிக்கின்றனர்.  தேர்தலின்போது மட்டும் சொந்த நாட்டிற்கு வந்து தங்களுடைய வோட்டுக்களைப் போட்டுவிட்டு போய்விடுவார்களாம்.download (1)

எலுமிச்சை சாறைவிட அதன் தோலில் பத்து மடங்கு வைட்டமின்களும் சத்துக்களும் அதிகமாக உள்ளன். அடிக்கடி எலுமிச்சையைச் சேர்த்துக்கொள்வதால் உடலிலுள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறும். இரத்த அழுத்தம் மனச்சோர்வு நரம்பு சம்பந்தமான பாதிப்புக்கள் குறையும். எலுமிச்சையைத் தோலுடன் பயன்படுத்தினால் மகத்தான பலனைப் பெறலாம்.dscn9138

மத்திய பிரதேசத்தின் முக்கிய நகரமான ஜபல்பூரில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ளது பேடாகாட் என்னும் கிராமம். இது ஒரு முக்கியமான சுற்றுலாத் தலம். இங்கு நர்மதை நதி பளிங்குக் கற்களால் ஆன பாறைகள் நடுவில் பாய்ந்து ஓடுகிறது.  3 கிமீ தொலைவில் தூவாதார் நீர் வீழ்ச்சியிலிருந்து நதி பாய்ந்து வருவதே பேடாகாட் எனப்படுகிறது.  படகில் நாம் நர்மதை நதியில் பௌர்ணமி நிலவன்று சென்றால் இருபுறமும் பளிங்குப் பாறைகளுக்கு நடுவில் பயணிப்பது போன்று இருக்கும். சௌசட் யோகினி மந்திரும் மலை மீது உள்ளது. இந்தக் கோயில் 10 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.de vinci

துபாயில் சுழலும் 80 மாடிக்கட்டிடம் ஒன்று உள்ளது. இதனை வடிவமைத்தவர் டேவிட் பிஷர் என்ற கட்டிடக் கலை நிபுணர்.  உயர்ம் 420 மீட்டர். இதை டைனமிக் டவர். Da Vinci Tower  என்றும் சொல்கிறார்கள். கட்டடத்துக்குத் தேவையான மின்சாரத்தை அளிக்க ஒவ்வொரு தளத்திலும் டர்பைன் சோலார் பேனல்களும் உள்ளன இந்தக் கட்டிடத்தில் இருப்பவர்களுக்கு தலைசுற்றாதா என்ற கேள்வி எழும்புகிறதா/  அது தான் இல்லை. மணிக்கு ஆறு மீட்டர் வேகத்தில் சுழலுவதால் ஒரு பாதிப்பும் ஏற்படாது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s