ஆஹா ஆலயம்

Shri-

குஜராத் மானிலத்திலுள்ள வாடி நகரத்தில் உள்ள துந்திராஜ் கணபதி கோயில் முழுவதும் மரத்தால் ஆனது. துந்திராஜ் கணபதி தன் துணைவியான புத்தி சித்தி ஆகியோருடன் லாபம் சுபம் ஆகிய இரண்டு குழந்தைகளுடன் அருள்பாலிக்கிறார். பெரிய தொந்தியுடன் காட்சி அளிக்கும் இவரை துந்திராஜ் என்று அழைக்கிறார்கள். கணபதியின் வாகனமான மூஞ்சூறு தனி பளிங்கு மண்டபத்தில் காலை உயர்த்தி மோதகத்தை உண்பது போன்ற வடிவில் உள்ளது. இந்தக் கோயிலில் சந்தோஷி மாதா வழிபாடும் உண்டு. அங்கே வினாயரின் மகளாக சந்தோஷி மாதாவைக் கருதுகின்றனர்.hqdefault

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முக்குறுணி வினாயகர் சன்னதிக்கு அருகே பிரகாரத்தின் மேற்கூரையில் ஒளியுடன் கூடிய வட்டத்தின் நடுவில் சிவலிங்கம் வரையப்பட்டிருக்க்கிறது. உச்சியில் தாமரை மலர் உள்ள இந்த சிவலிங்கத்தை எந்தத் திசையில்  நின்று பார்த்தாலும் லிங்கத்தின் ஆவுடை நம்மை நோக்கியிருப்பது போலத் தெரியும் அதிசயத்தைக் காணலாம். இந்தச் சுழலும் லிங்கம் பாண்டிய மன்னர்களின் ஓவியத் திறமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.download

திருச்சிக்கு அருகே உள்ள திருப்பைஞ்ஞீலி சிவ ஆலயத்தில் நவக்கிரக சன்னதி கிடையாது.  அதற்குப் பதிலாக இங்குள்ள நந்தி தேவருக்கு முன்பாக அகல் விளக்கு வடிவில் ஒன்பது குழிகள் உள்ளன. அவைகளையே நவக்கிரகங்களாக கருதி எண்ணெய் விட்டு வழிபடுகிறார்கள்.thennangur-feat

வந்தவாசியிலிருந்து காஞ்சிபுரம் செல்லும்  நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தென்னாங்கூரில் பாண்டுரங்கன் சோடசக்தி அம்மன் கோயில் உள்ளது. இந்த ஆலயத்தின் கோபுரம் வட இந்தியாவில் உள்ள பூரி ஜெகன்னாதர் ஆலய கோபுரத்தைப் போல் உள்ளது. இக்கோயிலின் தலவிருட்சம் தமாலமரம். இக்கோயிலின் உட்புறம் ஃபைபர் ஆப்டிக் பெயின்டிங் ஓவியங்கள் உள்ளன.  அந்த ஓவியங்கள் அனைத்தும் கண்ணனின் வாழ்க்கை வரலாற்றை விளக்குகின்றன.  இரவு நேரங்களில் இந்த ஓவியத்தைக் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.13_big

திருநெல்வேலி மாவட்டம் திருமலாபுரம் கிராமத்தில் குன்றின் மீது அமைந்துள்ள லூர்து அன்னை ஆலயம் நூற்றாண்டுகளைக் கடந்த ஆலயம். மலை மீது மாதா கோயில் கட்டும் பணி ஆரம்பித்தவுடன் மலையிலிருந்து இரண்டு இடங்களில் ஊற்று பீரிட்டுக்கொண்டு கொட்டின. சிறிய சொம்பு மட்டுமே நுழையும் சொம்பூற்று உள்ளது. இந்த சொம்பூற்று நீரை புனித நீராக கருதி மக்கள் எடுத்துச் செல்கின்றனர்.temple_2777915f

ஈரோடிலிருந்து கரூர் செல்லும் வழியில் 15 கிமீ தொலைவில் உள்ளது சாவடி பாளையம் புதூர். அங்கிருந்து கிழக்கே ஐந்து கிமீ தொலைவில் உள்ள காங்கேயம்பாளையத்தில் ஆறுகளின் நடுவே நட்டாற்றீஸ்வரர் கோயில் உள்ளது பிரம்ம ஹஸ்தி தோஷம் விலக அகத்தியர் வழிபட்ட புண்ணியதலம் இது.  இங்குள்ள ஈஸ்வரர் சகல தோஷங்களையும் நீக்க வல்லவர். தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தோஷ நிவர்த்தி அடையலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s