கின்னஸ் குயில்

1459313471_legenda

60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு தமிழரின் அன்றாட வாழ்க்கையிலும் ஏதேனும் ஒரு தருணத்தில் தவிர்க்க முடியாத இசைப் பூந்தூறலாகப் பொழிந்து வரும் அமுதக்குரல் அது. மகிழ்ச்சி  துயரம்   பெருமிதம்  தன்னம்பிக்கை ஆறுதல் வீரம் என்று பல்வேறு உணர்ச்சிகளைத் தன்னுள் பொதித்து வைத்திருக்கும் அந்தக் குரல் இரவின் மடியில் உறக்கமின்றி தவிக்கும் ஓராயிரம் நெஞ்சங்களுக்கு மயிலிறகாய் கதகதப்பாய் தாயின் அரவணைப்பாய் வருடிக்கொடுக்கிறது.

கின்னஸ் குயில் திருமதி சுசிலாவின் குரலில் ஒலித்த  மலர்ந்தும் மலராத பாதி மலர்போல………………பால் போலவே வான் மீதிலே…………………. மாலைப் பொழுதின் மயக்கத்திலே,,,,,,,,,,,,,,, நெஞ்சம் மறப்பதில்லை   போன்ற ஆயிரக்கணக்கான  பாடல்கள் இன்றளவுக்கும்  நம் எண்ணங்களில் சுற்றிச் சுழன்று வட்டமிடுபவை  காதுக்குள் விழுந்து ரத்தத்தில் கலந்து உயிர் தடவும் குரல் திருமதி சுசிலாவினுடையது என்று கவிஞர் வைரமுத்து சொல்லிய வரிகள் எத்தனை நிசர்சனமானவை.pic_ps_05

அந்தக் காலத்தில் லதா மங்கேஷ்கரின் குரலுக்கு இணையாகப் போற்றப்பட்டது சுசீலாவின் குரல்.  லதா மங்கேஷ்கரை தனது மானஸ குருவாக மதித்தார் சுசீலா.  தாய்மொழி தெலுங்காக இருந்தபோதிலும் தமிழ் மொழி மீது சுசீலாவுக்கு இருக்கும் பற்று பரிச்சயம் உச்சரிப்பு அபாரமானது.  தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் சிங்களம் உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கும் சுசீலா ஏராளமான தேசிய விருதுகளுக்கும் மானில விருதுகளுக்கும் சொந்தக்காரர்.  தமிழக அரசின் கலைமாமணி பத்மபூஷண் என்று அவரது குரலுக்குப் பெருமைசேர்க்கும் விருதுகள் ஏராளம்.ps_young3

விஜய நகரத்தில் பிறந்து வளர்ந்து சிறு வயதிலேயே இசையில் மிகவும் நாட்டம் உள்ள சுசிலாவிற்கு புட்டபர்த்தி சாயிபாபா மீது மிகவும் பக்தி கொண்டவர். இவரை நான் இரு முறை புட்டபர்த்தியில் நேரில் பார்த்திருக்கிறேன். ஒரு முறை சினிமா நடிகை திருமதி அஞ்சலிதேவியுடன் வந்திருந்தார்.  ஆனாலும் அருகில் சென்று பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை.  40 வருடங்ளாக ஹைதிராபாத்தில் வசிக்கும் தமிழ்க்காரியான எனக்கு இவர் தெலுங்குக்காரர் என்பதாலும் தமிழில் அதிக பாடல்களைப் பாடி புகழ்பெற்றவர் என்பதாலும் இவர் மேல் அலாதிப் பிரியம்.

Aayirathil Oruvan (1965) Audio Launch with P.Susheela, LR Eswari and R Sarathkumar

அனைத்துக்கும் சிகரமாய் தற்போது திருமதி சுசீலாவைத் தேடி வந்திருக்கிறது. உலக சாதனைக்கான கின்னஸ் விருது   விருதைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புக்களின் பாராட்டு விழாக்கள் தமிழக ஆளுனரின் கௌரவிப்பு நிகழ்ச்சி என்று பரபரப்பாக இருக்கும் சுசீலா.  தோற்றத்தில் எளிமை பேச்சில் இனிமை குரலில் குளுமை பேச்சிற்கு இடையே அடிக்கடி தெறித்து விழும் நகைச்சுவை என்று வித்தியாசமான சுசீலாவை பார்க்கமுடிகிறது.  80 வயதை எட்டியிருக்கும் இந்த கின்னஸ் குயிலை நாமும் பாராட்டுவோம். அவரது தேன் குரலுக்கு  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.

Advertisements

One thought on “கின்னஸ் குயில்

  1. உண்மையிலேயே குயில் தான்! போன ஜென்மத்தில் கடவுளுக்கு பாலும், தேனுமாக அபிஷேகம் செய்திருக்க வேண்டும் அதுதான் இப்படி ஒரு குரலினிமை இவருக்கு வைத்திருக்கிறது.
    வாழ்த்துக்கள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s