பளீர் டிப்ஸ்

White-

வெள்ளை நிற வாஷ்பேசின் பாத்ரூம் டைல்ஸ் சிங்க் தொட்டி  இவற்றைச் சுத்தம் செய்த பின்னர் தண்ணீரில் சொட்டு நீலம் கலந்து கழுவ பளிச்சென்றிருக்கும்.

சர்க்கரை பாகு செய்யும் போது சில துளி எலுமிச்சம் சாறு விட்டால் பாகு முறியாமல் இருக்கும்.

மிக்ஸியில் தயிர் கடையும் போது சிறிது நேரம் ஓடிய பின் ஐந்து நிமிடங்கள் நிறுத்திவிட்டு பிறகு மீண்டும் ஓட விட்டால் வெண்ணெய் நன்றாக திரண்டு வரும்.

இரத்தம் சுத்தியாக ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாறுடன் தேனைக் கலக்கி ஏழு நாட்கள் பருகவும்.1449560528-3349

குடல் புண் குணமாக அடிக்கடி அகத்திக்கீரை சாப்பிடவேண்டும்.download (3)

குடல் புழுக்கள் ஒழிய படுக்கும் முன் மாதுளம் பழம் மூன்று நாட்கள் சாப்பிடலாம்.26

முள்ளங்கி சாற்றுடன் கேரட் சாற்றையும் கலந்து பருகினால் உடம்பில் உள்ள சளிப்படலத்தை சுத்தம் செய்யும்.download (1)

சோயா பீன்ஸ் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும்  இதை சாப்பிட்டு வந்தால் உடம்பில் கொழுப்பு தங்காது.download (2)

முட்டைக்கோஸை பச்சையாக சாப்பிடும்போது அதிலுள்ள அனைத்துச் சத்துக்களும் கிடைக்கும். எளிதில் ஜீரணமாகும். பருமனைக் குறைக்கும்  முதுமையை தடுக்கும்.

சிறிதளவு மோரில் ஒரு துண்டு இஞ்சியையும் தேவையான பச்சை மிளகாயையும் அரைத்துப்போட்டு அதைக் கோதுமை மாவில் கலந்து பிசைந்து சப்பாத்தி செய்தால் புளிப்பும் காரமும் சுவையாக இருக்கும்  நன்றாக ஜீரணமாகும்.2

துளசி இலையை குடி நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் வாசனையாகவும் வெயிலுக்கு இதமாகவும் இருக்கும். ஜலதோஷமும் பிடிக்காது.large_1410117193

ஜவ்வரிசியை சிறிது  நெய்யில் வறுத்து ஆறியதும் தயிரில் ஊறப்போட்டு அதில் உப்பு கீறிய பச்சை மிளகாய் கடுகு தாளித்து கொத்தமல்லி இலை சேர்த்தால் வித்தியாசமான தயிர் பச்சடி தயார்.1432784531-5378

கோடையில் மோர் புளிக்காமல் இருக்க வாழை இலையைச் சிறிதாக நறுக்கிப் போடலாம். அல்லது பச்சை மிளகாய் காம்பையும் போட்டு வைக்கலாம்.

Advertisements

One thought on “பளீர் டிப்ஸ்

  1. வாஷ்பேசினுக்கு நீங்கள் கூறியிருக்கும் டிப்ஸ் பயன்படுத்திப் பார்க்கிறேன். ஜவ்வரிசி பச்சடி வித்தியாசமான குறிப்பு. விரத நாட்களில் சாப்பிடலாமோ?

    எல்லா டிப்ஸ்-உம் டாப் டிப்ஸ்கள்!
    பாராட்டுக்கள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s